(Reading time: 7 - 14 minutes)

 

உஷா இந்த பக்கம் வந்து இதை படிப்பார்களா என்று தெரியவில்லை. படித்தால், அவர்களுக்கும் இந்த சம்பவம் கட்டாயம் நினைவு இருக்கும் என்று நம்புகிறேன்.

இது நடந்த பின் தான் chillzeeயில் வெளியாகும் அனைத்திருக்கும் காபிரைட் மெசேஜ் சேர்த்து, மேலும் பல  ஸ்டெப்ஸ் எடுத்து பாதுகாப்பு கொண்டு வந்தாங்க.

இங்கே, ownership எடுத்து பல மணி நேரம் தேடி லிங்க்குகளை கண்டுபிடித்து வீர தீர சாகசம் புரிந்தவர் விந்தியா.

 

 

Backup gone

ம்ம டீமிடம் இருக்கும் ownership & responsibility எடுத்து செய்யும் பாங்கு பலரிடம் இருப்பதில்லை, ஏன் நாம் காசு கொடுத்து வாங்கும் சர்வீஸ் கம்பெனியிடம் கூட இருப்பதில்லை.

இதற்கு இன்னொரு சான்று chillzee host ஆகி இருந்த சர்வர் ஒன்று திடீரென காணாமல் போனது!

நம்ம டீம் ரெகுலராக பேக் அப் எடுக்கும் பழக்கம் உள்ளவர்கள், என்ன அந்த பிரசித்தி பெற்ற கம்பெனியை நம்பி அங்கேயே பேக்-அப் எடுக்கும் ஸ்டோரேஜ்யும் வைத்திருந்தார்கள்

சர்வரில் பிரச்சனை வந்ததை புரிந்துக் கொள்ள முடியும் ஆனால் இதோ உங்க டேட்டா வந்து விடும், இதோ வந்து விடும் என அவர்கள் இழுத்து அடித்ததை தான் நம்பவே முடியலை! அதுவும் அது சீப்பான server எல்லாம் இல்லை ரொம்பவே காஸ்ட்லியான server!

என்னடா செய்வது என டீம் மக்கள் விழிக்க, சரி போனது, போகிறது, முதலில் என்று ஸ்டார்ட் செய்வோம் என்று யாரும் சொல்லவில்லை.

டீமில் ஒருவர் pro-active ஆக எடுத்து வைத்திருந்த பேக்கப் மூன்று மாத பழையது. சரி இதை மட்டும் வைத்துக் கொள்வோம், நடுவில் போன மூன்று மாத கதைகள், கவிதைகள் etc etc போகட்டும் இனி வருவதை தொடர்வோம் என்றும் சொல்லவில்லை.

ஒரே வாரத்தில் மூன்று மாத வேலையை ஈடுக் கட்டினார்கள்.

ஒரு ஆர்டிக்கில் பப்ளிஷ் செய்ய, சரியாக எல்லாம் செய்தால் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும். பக்கங்களை பொறுத்து அதற்கு மேலே கூட ஆகலாம்.

அப்போது இது எவ்வளவு பெரிய வேலை என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

பழையவற்றை மீண்டும் பப்ளிஷ் செய்யும் அதே நேரத்தில் புதிய அப்டேட்சையும் எப்போதும் போல நேரத்திற்கு பப்ளிஷ் செய்ய வேண்டும். மீண்டும் பிரச்சனை வராமல் ப்ளான் செய்ய வேண்டும் etc etc.

ஆனால் கலக்கலாக செய்து முடித்தார்கள்!

இந்த வீர தீர செயல் புரிந்த பெருமைக்கு உரியவர் நந்தினி!

 

Publish time

Chillzeeயில் நேரத்திற்கு அத்தியாயம் பப்ளிஷ் செய்யும் பழக்கத்தை கொண்டு வந்தவங்க ஒருத்தங்க!

இவங்களோட commitment இம்சை இருக்கே தாங்க முடியாது!

அதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம், ஒரு சின்ன நிகழ்ச்சியை சொல்றேன்.

புவனேஸ்வரியோட வேறென்ன வேண்டும் நீ போதுமே கதை தொடர்கதையாக வந்துக் கொண்டிருந்த டைம் அது. இந்த தொடர் வாரம் தோறும் வீக் எண்டுல வெளியாகும்.

அது ஒரு லாங் வீகென்ட். மேடம் பேமிலியோட வேறு ஊருக்கு பயணம் போயிட்டு இருந்தாங்க. Hotel போயிட்டு பப்ளிஷ் செய்வது அவங்க ப்ளான்.

ஆனால் unfortunately வழியில delay ஆகிடுச்சு. அவங்க போய் சேர எக்ஸ்ட்ரா 1-2 மணி நேரம் ஆகும். மேடம்ஜி உடனே ஒவ்வொருத்தருக்கா போன் செய்து பப்ளிஷ் செய்ய முடியுமா, முடியுமான்னு கேட்டாங்க. எல்லோரும் பிஸி!

உடனே 2 மணி நேரம் லேட்டா எபிசொட் பப்ளிஷ் செய்தாங்க போலன்னு நீங்க நினைச்சா wrong!

மேடம் காரை பக்கத்துல இருந்த McDonaldsக்கு divert செய்து அங்கே கார் பார்க்கிங்ல வர free wifiல உட்கார்ந்து அந்த எபிசொட் பப்ளிஷ் செய்தாங்க.

எனக்கு தெரிந்த அளவில் புவனேஸ்வரி ஜாலி & அட்ஜஸ்ட்டிங் டைப். அவங்க கிட்ட சொல்லி இருந்தா புரிந்துக் கொண்டிருப்பாங்க.

ஆனால் இதை டைமுக்கு செய்யனும்ங்குற commitment ஓட ஃபேமிலியை நடு ரோட்டுல நிறுத்தி publish செய்தாங்க பாருங்க, சான்ஸே கிடையாது!

இது வேற யாரு, இந்நேரம் கெஸ் செய்திருப்பீங்களே தேன்ஸ் aka தேன்மொழியே தான்!

இன்னைக்கு அதே அளவு commitment and timingஓட செய்ய முடியாம புதிய டீம் மக்களை ஹாங்ன்னு முழிக்க வைத்த பெருமையும் அவங்களுக்கே!

 


ப்படி நம்ம டீம் மக்களின் அருமை பெருமைகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

இது சும்மா சாம்பிளர் தான். இன்னும் நிறைய சொல்லலாம் ஆனால் இதுவே நம் டீமின் அருமை பெருமைகளை உங்களுக்கு எடுத்து சொல்லி இருக்கும்னு நம்புகிறேன் smile

 

த்தனையோ பெண்களின் பெருமைகளை பேசுறேன், எனக்கு தெரிந்த, நெருக்கமான இந்த  அருமையான பெண்களை பற்றி சொல்லாமல் விட்டால் எப்படி! அதுவும் மகளிர் தினத்தில் சொல்லாமல் விட்டால் எப்படி wink

 

மகளிர் தின வாழ்த்துக்கள் பிரென்ட்ஸ்!

{kunena_discuss:1177} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.