(Reading time: 2 - 4 minutes)

குட்டிக் கதைகள் – 54. சிலையும் படிகளும்...

ரு தெருவிலே சிற்பி ஒருவன் வசித்து வந்தான்.

 

ஒரு முறை ஒரு பெரிய பாறையை தன்னுடைய கூடாரத்திற்கு உருட்டி வந்தான்.

  

தினந்தோறும் அந்தப் பாறையை தன்னுடைய கையில் வைத்திருந்த உளியால் அடிக்கும்போது மேல் இருக்கும் கற்கள் சிறு சிறு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது.

 

பின்பும் சிற்பி பாறையை உளியால் பத்து வருடங்களாக அடித்து அடித்து விலை மதிக்க முடியாத ஒரு அழகிய சிலையை உருவாக்கினார்.

 

இப்பொழுது அந்த சிலையை பெரிய அரங்கிற்குள் கொண்டு வைத்தான்.

 

இப்போது மண்டபத்திற்குள் செல்ல படிகள் உருவாக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தார் சிற்பி. ஒரு நல்ல யோசனை சிற்பிக்கு கிடைத்தது.

 

பாறையில் இருந்து விழுந்த துண்டுகளை சேர்த்து படிகளை உருவாக்கினார்.

 

இப்பொழுது மண்டபத்திற்குள் வருகிறவர்கள் எல்லோரும் அந்த சிலையைப் பார்த்து புகழுகிறார்கள், அதன் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது அந்த சிலை மிகவும் பிரபலமடைந்து விட்டது.

  

எல்லோரும் சிலையைப் பற்றியே புகழ்ந்து பாடினார்கள் இப்படி இருக்கும்போது படிகளுக்கு சிலையை புகழ்ந்து பாடுவது பிடிக்கவில்லை.

 

ஒருநாள் மண்டபத்திலிருந்து எல்லோரும் போய்விட்டார்கள். அப்போது இந்த சிறு சிறு துண்டுகள் சிலையைப் பார்த்து கேட்டன, ‘உன்னை செதுக்கிய பாறைகளிலிருந்து தான் நாங்களும் உடைக்கப்பதடம். உன்னை செதுக்கிய சிற்பியின் கரங்களில் தான் நாங்களும் இருந்தோம். ஆனால் இப்பொழுது உனக்கு மரியாதை கிடைக்கிறது. எங்களுக்கு அவமரியாதை

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.