(Reading time: 2 - 4 minutes)

குட்டிக் கதைகள் – 62. நண்டின் கால்

ரு நாள், ஒரு குட்டி நண்டு மற்றும் அம்மா நண்டு இரண்டும் கடற்கரையில், ஒன்றாக நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தன.

  

குட்டி நண்டு நகர்வதற்கு எழுந்து முயன்றது. ஆனால் அதால் ஒரு பக்கமாக மட்டுமே நடக்க முடிந்தது.

  

அம்மா நண்டு குட்டி நண்டு அப்படி ஒரு பக்கமாக நடப்பதை பார்த்து கோபம் கொண்டது.

  

குட்டி நண்டின் கால் விரல்களை சுட்டிக் காட்டி அதை முன்னோக்கி நடக்கும்படி சொன்னது.

  

குட்டி நண்டோ, "நான் முன்னோக்கி நடக்க தான் விரும்புகிறேன். ஆனால் எப்படி என்று எனக்குத் தெரியாது." என்றது.

  

இதைக் கேட்டு, அம்மா நண்டு குட்டிக்கு எப்படி என்று காட்ட எழுந்தது. ஆனால் அதனாலும் கூட கள் முட்டிகளை முன்னோக்கி வளைக்க முடியவில்லை.

  

குட்டியை அந்நியாயமாக திட்டி விட்டது அம்மாவிற்கு அப்போது தான் புரிந்தது. அதனால் குட்டியிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும் மணலில் அமர்ந்தது.

  

கருத்து:

   

உங்களால் செய்ய முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்யவில்லை என்று அங்கலாய்க்காதீர்கள்.

  

அறிவியல் உண்மை:

  

ண்டுகளுக்கு மொத்தம் பத்து கால்கள் இருக்கின்றன. முன்னே இருக்கும் இரண்டு கால்களில் கூர்மையான கொடுக்கு (claws) இருக்கிறது. மற்ற எட்டு கால்களும் நடக்க பயன்படுகிறது.

  

நண்டுகளின் கால்கள் இணைந்திருப்பவை மற்றும் கடினமாக இருப்பவை.

  

அதனால் ஒரு பக்கமாக நடந்தால் அவற்றால் வேகமாகவும், எளிதாகவும் நடக்க முடியும்.

  

அப்படி ஒரு பக்கமாக பக்கவாட்டில் நடக்கும் போது ஒரு கால் மற்றொரு காலின் பாதையில் வரவும் வராது.

  

அதனால் தான் நண்டுகள் பக்கவாட்டில் நடக்கின்றன.

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.