(Reading time: 3 - 5 minutes)

குட்டிக் கதைகள் – 70. துணிந்து நில்!

ம்பிகா நன்றாக படிக்கும் மாணவி. கணக்கு அவளுக்கு மிகவும் பிடித்த பாடம். அவளுடைய வகுப்பில் நடக்க இருந்த கணக்கு தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் தயார் செய்தாள்.

  

தேர்வு முடிந்து மதிப்பெண் கிடைத்தப் போது அவள் 90 மதிப்பெண்கள் பெற்று இருந்தாள். அம்பிகாவிற்கு ஏமாற்றமாக இருந்தது.

  

அவ்வளவு முயற்சி செய்து படித்தும் மதிப்பெண்கள் குறைந்து விட்டதே என்று விரக்தியடைந்து மிகவும் சோர்வாக இருந்தாள். தொடர்ந்து என்ன செய்வது என்று புரியாமல் தன் தந்தையிடம் யோசனை கேட்டாள்.

  

அவளுடைய தந்தை அவளிடம் ஒரு முட்டை, சிறிது தேயிலை மற்றும் ஒரு உருளைக்கிழங்கு கொண்டு வரச் சொன்னார்.

  

அம்பிகா அவற்றை கொண்டு வந்ததும், அவளின் தந்தை மூன்று பாத்திரங்களில் அவற்றை தண்ணீரில் நிரப்பி, அடுப்பில் வைத்தார்.

  

தண்ணீர் கொதித்தவுடன், ஒவ்வொரு பாத்திரத்திலும் அம்பிகா கொண்டு வந்த பொருள் ஒன்றை போடச் சொன்னார். அதை கண்காணிக்கும்படி அம்பிகாவிடம் கூறினார்.

  

10 நிமிடங்களுக்குப் பிறகு, தந்தை ஆஷாவை முட்டை மற்றும் உருளைக்கிழங்கை உரிக்கவும், தேயிலைகளை வடிகட்டவும் கேட்டார்.

  

அம்பிகா குழப்பத்தில் இருந்தாள். அவளுடைய தந்தை விளக்கினார்.,

  

"மூன்று பொருளும் ஒரே மாதிரியான கொதிக்கும் நீரில் வைக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொன்றும் எப்படி வித்தியாசமாக கொதிக்கும் நீரை கையாண்டது என்றுப் பார்த்தாயா?
முட்டை மென்மையாக இருந்தது, ஆனால் இப்போது கடினமாக மாறி விட்டது. உருளைக்கிழங்கு கடினமாக இருந்தது, ஆனால் இப்போது மென்மையாக இருக்கிறது. தேநீர் இலைகள், தண்ணீரை மாற்றி விட்டன.”

  

அம்பிகா ஆச்சர்யத்துடன் தந்தை சொன்னதை ஏற்றுக் கொண்டாள்.

  

அவளின் தந்தை தொடர்ந்தார், "கஷ்டம் வரும் போது, இந்த பொருட்களைப் போல தான் நாமும் ஏதாவது ஒரு விதத்தில் நிலைமையை கையாள்வோம். ஆனால் நீ முட்டையா, உருளைக்கிழங்கா அல்லது தேயிலையா? எதுவாக இருந்தாலும் அடுத்து என்ன என்பது உன் கையில் தான் இருக்கிறது.
90 மதிப்பெண்கள் குறைவானது இல்லை. கல்வி உன் அறிவை வளர்க்க தான். அதனால் விட்டுப் போன மதிப்பெண்களை பற்றி கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து உன் அறிவை வளர்த்துக் கொள்.”

  

அம்பிகாவும் தெளிந்து விட்ட மனதுடன் அடுத்த பாடத்தை படிக்கத் தொடங்கினாள்.

  

கருத்து:

  

கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது நம் கையில் தான் இருக்கிறது!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.