(Reading time: 2 - 4 minutes)

குழந்தைகள் ஸ்பெஷல்  குட்டிக் கதைகள் – 86. புத்திசாலி சேவல்!

முன்பு ஒரு காலத்தில், ஒரு தந்திரமான நரி வாழ்ந்து வந்தது.

  

நரிக்கு தான் பெரிய புத்திசாலி என்ற எண்ணம் இருந்தது!

  

ஒரு நாள் நரி பசியோடு சுற்றிக் கொண்டிருந்தது. காடு முழுக்க தேடியப் பிறகும் அதற்கு உணவு கிடைக்கவில்லை! பசியால் மயக்கமே வந்து விடுமென்றுக் கூட அதற்கு தோன்றியது!

  

அப்போது ஒரு வீட்டின் கூரையில் சேவல் ஒன்று இருப்பதை அது கண்டது!

  

சேவலைப் பார்த்ததும், பசியோட இருந்த நரியின் நாவில் நீர் ஊறியது!

  

எப்படியாவது அந்த சேவலை சாப்பிட நினைத்தது.

  

ஆனால் முதலில் சேவலை கூரையில் இருந்து இறங்கி வர செய்ய வேண்டுமே!!!

  

யோசித்து, சேவலை தரையில் கொண்டு வர நரி ஒரு திட்டத்தை வகுத்தது!

  

"என் அருமை நண்பரே! உன்னை பார்த்து எத்தனை நாட்கள் ஆகி விட்டது! என்ன இப்படி எடை குறைந்து பலவீனமாக இருக்கிறாய்? கீழே வா உன்னை சரியாக பார்த்து சோதிக்க வேண்டும்,” என்று தந்திரமாக சேவலின் நண்பன் போல பேசியது நரி!

  

சேவல் நரியை உற்றுப் பார்த்தது! நரியின் தந்திரத்தை புரிந்துக் கொண்டது!

  

"என் நரி நண்பனே! நீ சொல்வது சரி தான். நான் ரொம்பவே சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்கிறேன். என்னால் இப்போது கூரையிலிருந்து கூட கீழே வர முடியாது" என்று பதில் சொன்னது அந்த புத்திசாலி சேவல்.

  

சேவல் தன்னை விட புத்திசாலி என்பது நரிக்கு புரிந்தது! பசியின் விரக்தியில் பல்லைக் கடித்தது!

  

அதைப் பார்த்து சேவல் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தது.

  

சேவல் தன தந்திரத்தை தெரிந்துக் கொண்டு விட்டதை உணர்ந்து அசிங்கப் பட்ட நரி முடிந்தவரை வேகமாக அங்கிருந்து ஓடிச் சென்றது.

  

கருத்து:

  

நான் தந்திரக்காரன் என்று நினைத்தால், உன்னை வெல்லும் சாமர்த்தியசாலி இன்னொருவன் இருப்பான்!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.