(Reading time: 2 - 4 minutes)

கருத்துக் கதைகள் – 03. நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? - தங்கமணி சுவாமினாதன்

fox and donkey

ஒரு கழுதையும் நரியும் ரொம்ப ஃப்ரண்டா இருந்துச்சுங்க. ரெண்டும் ஒரு ஒப்பந்தம் செஞ்சுக்கிட்டுதுங்க. அதாவது எப்பவும் ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும் இருவரில் யாருக்கவது ஆபத்து வந்தா இன்னொருவர் அவங்கள காப்பாத்தணும்.. எப்பவும் நட்போட இருக்கணும் அப்பிடீன்ற ஒப்பந்தந்தான் அது.

ஒரு நாளைக்கு ரெண்டும் இப்பிடீ நடந்து போச்சுங்க. அப்ப எதிரே தூரத்துல ஒரு சிங்கம் வரத பாத்துச்சிங்க. நரிக்கு ஆபத்து வந்துடிச்சின்னு தோணிச்சு.எப்பிடி தப்பிக்கிறதுன்னு யோசன பண்ணிச்சு. அதும் தந்திர புத்தி வேல செய்ய ஆரம்பிச்சிது. எப்பிடியாவது தான் மட்டும் தப்பிக்க நெனச்சிது.கழுதைய காட்டிக் கொடுத்தாவது தப்பிச்சிடணும்ன்னு நெனச்சிது அந்த நரி.

கழுதகிட்ட...நண்பா நான் போய் அந்த சிங்கத்திடம் பேசுறேன்.நீ கவலப் படாதே.. நான் உன்னைக் காப்பாத்துவேன் என்றது.கழுதையும் நரி சொல்வதை நம்பியது.

நரி தான் மட்டும் சிங்கத்திடம் சென்றது. சிங்க ராஜாவே..வணக்கம்..இன்று உமக்காக நான் ஒரு கழுதையை உமக்கு உணவாக்கக் கொண்டு வந்திருக்கிறேன்.அதைச் சாப்பிட்டு என்னை விட்டு விடுங்கள் என்றது.சிங்கமும் சரி என்றது.இங்கேயே இருங்கள் அக்கழுதையை அழத்து வருகிறேன் என்றது. சிங்கமும் சம்மதித்தது.

நரி கழுதையிடம் வந்தது.நண்பா..உன்னைக் கொல்லாதிருக்க சிங்கத்திடம் கெஞ்சிக் கேட்டேன்.அதுவும் சரியென்றது. நீ உடனே இந்த பள்ளத்தில் குதித்து ஒளிந்து கொள்வாய். சிங்கம் உன்னை ஒன்றும் செய்யாது என்றது.கழுதையும் நரி நண்பன் சொல்வது உண்மை என நம்பி பள்ளத்தில் குதித்தது.

நரி சிங்கத்திடம் சென்று சிங்க ராஜாவே..அதோ அந்த பள்ளத்தில் கழுதையை இறங்க வைத்திருக்கிறேன். நீங்கள் வந்து அதை உங்கள் இரையாக்கிக் கொள்ளுங்கள் என்றது அந்த தந்திர நரி.

பள்ளத்தில் இருக்கும் கழுதைக்கு அவ்வளவு விரைவாக மேலே வரமுடியாது. எனவே இந்த நரியை முதலில் அடித்து உண்போம். பிறகு நிதானமாக கழுதையை அடித்து உண்ணலாம் என்று நினத்த சிங்கம் நரியை அடித்துக்கொன்று தின்றது. நண்பனை நம்பவைத்து துரோகம் செய்த நரி முதல் பலி ஆயிற்று.

கதை சொல்லும் கருத்து:

கெடுவான் கேடு நினைப்பான்...நம்ப வைத்து துரோகம் செய்பவன் நாசமாவான் என்பது உறுதி.

Story # 02 - David'um Goliath'um

Story # 04 - Ee'na ilappama

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.