(Reading time: 3 - 6 minutes)

கருத்துக் கதைகள் – 02. டேவிடும் கோலியாத்தும் - பிந்து வினோத்

David and Goliath

முன்பு ஒரு காலத்தில் இரண்டு நாட்டுக்கு இடையே போர் நடப்பதாக இருந்தது. இரண்டு பக்கமும் போருக்கு ஆயத்தமாக இருந்தார்கள்.

ஆனால் போர் தொடங்கும் முன்பே ஒரு நாட்டினரை கலவரப் படுத்தும் விதத்தில் எதிரி நாட்டில் இருந்து ஒன்பது அடி உயரமான அஜானுபாக தோற்றம் உடைய கோலியாத் எனும் அரக்கன் ஒருவன், தினமும்,

“உங்கள் படையில் இருந்து ஒருவனை தேர்வு செய்து என்னுடன் போரிட அனுப்புங்கள். அந்த மனிதன் என்னை போரிட்டு ஜெயித்தால் நாங்கள் உங்களுக்கு அடிமைகள்.... ஆனால் ஒருவேளை நான் ஜெயித்து விட்டால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு சேவை புரிய வேண்டும்....”

என அறைக்கூவல் விடுப்பது வழக்கமாக இருந்தது...

இந்த படையினருக்கு கோலியாத்தின் உருவத்தை பார்த்தும் அவனின் உறுமும் குரல் கேட்டுமே பயம்... எனவே அவனுடன் போரிட துணிவில்லாமல் பயந்துக் கொண்டிருந்தார்கள்.

ந்த நேரத்தில் போருக்கு சென்றிருக்கும் தன் மூத்த சகோதரர்களை பற்றி தெரிந்துக் கொள்ள டேவிட் எனும் சிறுவன் ஒருவன் போர் முகாம் இடப்பட்டிருந்த இடத்திற்கு வந்தான்.

அப்போது கோலியாத்தின் கர்ஜிக்கும் உறுமல்களையும் அதைக் கேட்டு அவனின் நாட்டு வீரர்கள் அடையும் கலக்கத்தையும் கண்டான்.

கடவுள் பக்தி நிறைந்த டேவிட் தன் நாட்டு மக்கள் இது போல் ஒரு அரக்கனை கண்டு பயப்படுவதை காண பிடிக்காமல், தானே அந்த கோலியாத்தை எதிர்த்து போரிட செல்வதாக முன் வந்தான்.

அரசனும் மற்ற வீரர்களும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அந்த அரக்கன் கோலியாத்தை எதிர்கொள்ள வெறும் கவண் ஒன்றும், பை நிறைய கற்களும் எடுத்துக் கொண்டு சென்றான்.

ன்னை எதிர்க்க ஒரு சிறுவன் வந்திருப்பதை பார்த்து எக்களித்த கோலியாத் அவனை கேலி செய்து ஏதேதோ கூறினான்....

ஆனால் டேவிட் அசையவில்லை.... தான் வந்த காரியத்தை நிறைவேற்றுவதிலேயே உறுதியாக இருந்தான்.

கடவுளை மனமார பிரார்த்தனை செய்து விட்டு, பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து தன் கவணின் துணைக் கொண்டு குறி பார்த்து அந்த கல்லை எறிந்தான்.

அந்த கல், சிறுவன் என்று சொல்லி எள்ளி நகையாடிக் கொண்டிருந்த கோலியாத்தின் நெற்றியில் பட்டது. அடுத்த வினாடி மலை வீழ்வதை போல கீழே விழுந்தான் அந்த அரக்கன்.

டேவிடின் நாடு போரில் வெற்றி பெற்றது...!

கதை சொல்லும் கருத்து:

Look things in new perspective

கோலியாத்தின் உருவத்தை பார்த்து அனைவரும் பயந்து நடுங்கிய போது டேவிட் மட்டும் அவனை புதிய கோணத்தில் பார்த்தான்.

நாம் வாழ்வில் சந்திக்கும் மிக மிக பெரிய பிரச்சனைகள் கூட இதே போல தான்.... பார்வைக்கு பெரிதாக தெரிந்தாலும், மனதை கலங்கவிடாமல் தெளிவாக சிந்தனை செய்தால் பிரச்சனயை புதிய கோணத்தில் அணுகி தீர்வு செய்ய வழி காணலாம்.

Don’t back down just because you hear discouraging insults

அரக்கன் டேவிடை பார்த்து சிறுவன் என்று எள்ளி நகையாடி சிரித்த போதும் டேவிட் அதற்காக மனம் நொந்து போய் தான் செய்ய வந்த காரியத்தை நிறுத்தி விடவில்லை…. ஏன் தடுமாறக் கூட இல்லை. அத்தனையையும் தாங்கிக் கொண்டு தான் செய்ய வந்ததை தெளிவாக நேர்த்தியாக செய்து வெற்றி பெற்றான்.

மற்றவர்களின் கேலி கிண்டல்களுக்காக உங்களின் இலக்கை எப்பொழுதும் தவற விடாதீர்கள்!

Know your personal strengths!

டேவிட் போருக்கு வாளோ, வில்-அம்போ எடுத்து செல்லவில்லை, மாறாக அவனுக்கு பழக்கமான கவணை தான் எடுத்து சென்றான்.

உங்களுடைய தனிப்பட்ட பலங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். டேவிடின் கவண் போல சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் அவை கட்டாயம் உங்களுக்கு பயன்படும்.

 

இது பைபிளில் சொல்ல பட்டிருக்கும் சம்பவம். பள்ளியில் என் ஆசிரியை பிரச்சனைகளின் அளவினை கொண்டு கலங்கி விட கூடாது என்று எங்களுக்கு எடுத்து சொல்ல சொன்ன கதை இது.... அன்று முதலே மனதில் பதிந்து போன ஒன்று.... smile

Story # 01 - Birbalin puthi koormai

Story # 03 - Nambikkai thurogam seiyyalama?

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.