(Reading time: 4 - 7 minutes)

கருத்துக் கதைகள் – 04. ஈன்னா இளப்பமா? - தங்கமணி சுவாமினாதன்

House Fly

து ஒரு பிரதான தெரு.அதில் நிறைய வீடுகள் இருந்தன அவற்றில் நிறைய மக்கள் வாழ்ந்து வந்தனர்.அந்த தெருவின் கோடியில் குளம் ஒன்று இருந்தது.குளத்தைச் சுற்றி புல்வெளி.எனவே கால்நடைகள்  புல்லை மேயவும் தண்ணீர் குடிக்கவும் அத்தெரு வழியே வந்து செல்லும்.மக்களின் நடமாட்டமும் அதிகம் இருக்கும்.

ஒரு நாள் நாய் ஒன்று அத்தெருவுக்குள் வந்தது.நாய் என்றால் அது சாதாரண நாய் போல் இல்லை.ஒரு ஓனாய்போல் மிகப் பெரியதாய் இருந்தது.அதைக் கண்ட அத்தெருவாசிகள் பயந்து போய் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தனர்.மாடு ஆடுகள் குளத்தை நோக்கி வந்தபோது அந்த நாய் அவற்றை ஓட ஓட விரட்டியது.

கால் நடைகள் அந்த நாய்க்கு பயந்து தப்பித்தோம் பிழைத்தோம் என மருண்டு ஓடின.அந்த நாய்க்கு மிகவும் குஷியாகி விட்டது. மனிதர்களும் மாடு ஆடு குதிரை கழுதை போன்ற மிருகங்களும் தம்மைப் பார்த்து இப்படி பயப்படுகிறார்களே என்று...தான் ரொம்பப் பெரியவன் என்று செருக்கு ஏற்பட்டது அதற்கு. இப்படியே தினம் தினம் அது அந்தத் தெருவுக்கு வந்து மனிதர்கள் மிருகங்கள் அனைவரையும் பயமுறுத்தியது.

மக்ககெளுக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியே வந்து அவரவர் பணிக்குச் செல்லமுடியவில்லை.பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.கடைகண்ணிக்குச் செல்ல முடியவில்லை.

கால்னடைகள் புல்மேய முடியாமலும் தண்ணீர் குடிக்க முடியாமலும் மிகவும் அவதிப்பட்டன. இப்படியே பல நாட்கள் போயிற்று.

து ஒரு குட்டி ஈ. தினம் அந்த நாய் செய்யும் அக்கிரமத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த குட்டி ஈக்கு ரொம்ப கோபம் வந்தது அந்த நாய் மீது. அந்த நாய்க்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பியது அந்த குட்டி ஈ.

நேராய் அந்த நாயிடம் சென்றது ஈ. நாயண்ணே..நாயண்ணே..ஏன் இப்படி மனிதர்களை யும் நம் சகோதர விலங்குகளையும் துன்பப் படுத்துகிறீர்கள். பாவம் அவர்கள். அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் உமக்கு என்ன தீங்கு செய்தனர்? என்றது.

கேவலம் ஒரு ஈயா நமக்கு புத்தி சொல்வது என்று மகா கோபம் வந்தது அந்த நாய்க்கு.

சீ.. கேவலமான் ஈயே நீயா எனக்கு புத்தி சொல்ல வந்தாய்?என்னைப் பார்.. நான் உருவத்தில் எத்தனை பெரியவனாய் உள்ளேன். எனைப்பார்த்து அனைவரும் பயந்து துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று  ஓடுகிறார்கள். துக்குணியூண்டு பய நீ.. நீயெல்லாம் எனக்கு புத்தி சொல்ல வந்துட்டயா? என்று ஈயின் மிகச் சிறிய உருவத்தைப் பழித்தது அந்த பொல்லாத நாய்.

ஈக்கு கோபமோ கோபம் வந்திச்சு நாய் தன்னோட சின்ன உருவத்தப் பாத்து பழித்ததும்.

சட்டுன்னு நாயோட முகத்த சுத்திசுத்தி வர ஆரம்பிசது ஈ. மூக்குல ஒக்காந்தது.. அப்பரம் காதுல, கழுத்துலன்னு மாறி மாறி ஒக்காந்து கிச்சு கிச்சு மூட்டிச்சு... நாய் தலய அப்பிடியும் இப்பிடியும் ஆட்டி ஆட்டி ஈய வெரட்ட பாத்துது.முதுகுல அடிவயத்துல விலாவுல மறுபடியும் மூஞ்சிலன்னு மாறி மாறி ஒக்காந்து நாய தொல்ல பண்ணிச்சு...நாய் நிலத்துல விழுந்து ஒடம்ப அப்பிடியும் இப்பிடியும் தேச்சு தேச்சு ஈய வெரட்டப் பாத்திச்சு.

அதுக்கு ஈயோட தொல்லைய தாங்க முடில. அதால ஈய ஒன்ணும் செய்ய முடில.

கடசில.. ஈய கெஞ்ச ஆரம்பிச்சிச்சு. ஈ..தம்பி ஈ தம்பி என்ன விட்டுடு. என்னால தாங்க முடில. நான் இனிமே யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன். இனிமே இந்த பக்கமே வரமாட்டேன். ஒன்ன உன் உருவத்த வெச்சு கேவலமா பேசினது தப்பு. என்ன மன்னிச்சிடுந்னு கெஞ்சிச்சு.ஈயும் சரி சரி.. ஒன்ன மன்னிச்சிடறேன் இனிமே யாரையும் இழிவா பேசாதே..யாருக்கும் துன்பம் கொடுக்காதே அப்பிடின்னு சொல்லி நாயவிட்டு நகர்ந்து கொண்டது.நாய் போதுண்டா சாமின்னு அங்கேயிருந்து ஓடி போயிடுச்சு.

அதுக்கப்பரம் பழையபடி எல்லாரும் நிம்மதியா சந்தோஷமா ஆயிட்டாங்க. தெரு ஜே ஜேன்னு..ஆயிடிச்சு.

கதை சொல்லும் கருத்து:

ஒருவரின் உருவத்தை வைத்து அவரின் திறமையை எடை போடக் கூடாது.

Story # 03 - Nambikai throgam seiyalama

Story # 05 - Vallavanukku vallavan

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.