(Reading time: 6 - 11 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பள்ளிக்கூடத்தில் முயல் குட்டிகள் - நாரா நாச்சியப்பன்

காடு முழுவதும் ஒரே பேச்சாய் இருந்தது. விலங்குகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் போது விசாரித்துக் கொண்டன.

  

 ''கழுதை அக்கா , உன் குட்டியைச் சேர்த்து விட்டாயா?

  

 "இல்லை குரங்கண்ணா. என் குட்டிக்கு கழுதை வயது ஆகிவிட்டதாம். அந்த ஆசிரியர் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.''

  

 "புலிக்குட்டியைக் கூட சேர்த்துக் கொள்ள மறத்து விட்டாராமே. எல்லாப் புலிகளும் உறுமிக் கொண்டிருக்கின்றன.''

  

“அதற்குக் காரணம் தெரியுமோ? புலிக்குட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மான்குட்டியும், ஆட்டுக்குட்டியும் பாடம் படிக்கவா முடியும்?.''

  

 இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் அந்தக் காட்டில் பட்டணத்து அல்சேசன் அண்ணாவி தொடங்கியுள்ள பாலர் பள்ளி பற்றித் தான்.

  

 பாலர் பள்ளியில் மென்மையான இயல்புள்ள விலங்குகளின் குட்டிகளுக்கு மட்டும்தான் இடம் உண்டு என்று அல்சேசன் அண்ணாவி அறிவித்து விட்டார். இதில் வன்மையான இயல்புள்ள விலங்குகளுக்கு முதலில் கோபம் கோபமாக வந்தது. ஆனால் அண்ணாவி விளக்கஞ் சொன்ன பிறகு அவை எதிர்ப்பை நிறுத்திக் கொண்டு விட்டன. பெரியவர்கள் எடுத்துச் சொன்னதின் பேரில் கடைசியாக கழுதைக் குட்டிகளையும் பாலர் பள்ளியில் அண்ணாவி சேர்த்துக் கொண்டு விட்டார்.

  

 பள்ளிக்கூடம் தொடங்கி பத்து நாள் கழித்துத் தான் முயலம்மாவுக்குச் செய்தி தெரியும். முயலம்மா செய்தி தெரிந்த மறுநாளே தன் நான்கு குட்டிகளை யும் அழைத்துக் கொண்டு காட்டுப்பள்ளி கூடத்துக்குச் சென்றது. பட்டணத்து அல்சேசன் அண்ணாவி இந்த நான்கு முயல் குட்டிகளையும் உற்றுப்பார்த்தார். அவை பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்தவுடன் பள்ளிக்கூடமே களை கட்டி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.