(Reading time: 4 - 8 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - ஓநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல் - நாரா நாச்சியப்பன்

ரு காட்டில் ஒரு பெரிய முயல் இருந்தது. அதற்கு நான்கு குட்டிகள். அந்தக் குட்டிகள் மெல்ல மெல்ல வளர்ந்தன. உடம்பில் வலு ஏற்பட்டதும் துள்ளி ஓடி விளையாடின. ஓடத் தெரிந்து விட்ட அவற்றிற்கு நல்லது கெட்டது தெரிய வேண்டும் என்று தாய் முயல் விரும்பியது. இல்லாவிட்டால் வெள்ளை மனம் படைத்த அவற்றைத் தீங்கு வந்து சூழ்ந்து கொள்ளும் என்று அது அஞ்சியது.

  

ஒரு நாள் தாய்முயல் குட்டிமுயல்களைக் கூட்டிக் கொண்டு காட்டைச் சுற்றிக் காட்டியது.

  

மரம், செடி கொடிகளை யெல்லாம் அது காட்டியது. எந்தெந்த இலைகளைத் தின்னலாம், எது எதைத் தின்னக்கூடாது, எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்றெல்லாம் அது விளக்கிச் சொல்லியது. அது ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கிச் சொல்லச் சொல்ல மூன்று குட்டி முயல்கள் மிக உன்னிப்பாகக் கேட்டுத் தெரிந்து கொண்டன. சொன்னவற்றை யெல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டுச் சொல்லிப் பார்த்துத் தெரிந்து கொண்டன. ஆனால் ஒரு முயல் குட்டி அப்போது, தாய் சொன்ன செய்திகளைக் கவனிக்காமல், பாப்பாத்திப் பூச்சிகளைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அது தன் வாழ்க்கைக்கு வேண்டிய அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தது.

  

தாய் முயல் அடுத்த பாடமாகப் புல்வகைகளைப் பற்றி விளக்கிக் கூறியது. எந்தெந்தப் புல் சுவையாக இருக்கும். எது தின்றால் உடம்புக்கு நல்லது, எது கெட்டது என்றெல்லாம் விளக்கிச் சொல்லியது. சில முட்செடிகளைக் காட்டி, இவற்றின் இலைகள் இருக்கிற பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது. நச்சுத்தன்மை யுள்ளவை என்றெல்லாம் எடுத்து விளக்கியது.

  

அந்த ஒரு முயல் குட்டி தவிர மற்ற குட்டிகள் எல்லாவற்றையும் கவனமாகத் தெரிந்து கொண்டன.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.