(Reading time: 4 - 7 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - நன்றியின் உருவம் - நாரா நாச்சியப்பன்

முன்னொரு காலத்தில் தேவநாதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒரு நாயை வளர்த்து வந்தான். அந்த நாய்க்கு அவன் வேளை தவறாமல் உணவு வைப்பான், நாள்தோறும் குளிப்பாட்டுவான், ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவான்; இவ்வாறு அன்புடன் அதை வளர்த்து வந்தான். அந்த நாயும் அவனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தது. அவன் செல்லும் இடமெல்லாம் கூடவே சென்றது. அவனுக்குப் பல சிறு வேலைகள் செய்து உதவி புரிந்து வந்தது.

  

ஒரு நாள் தேவநாதன் வாணிக வேலையாக வெளியூர் ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றான். வழக்கம் போல அவன் நாயும் கூடவே சென்றது.

  

போகும் வழியில் களைப்பாறுவதற்காக நன்றாகப் புல் வளர்ந்திருந்த ஓர் இடத்தில் தேவநாதன் படுத்தான். படுத்தவன் அப்படியே தூங்கிப் போய்விட்டான். அந்த நாயும் அவன் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.

  

திடீரென்று புகைநாற்றம் மூக்கைத் துளைத்தது. நாய் கண்விழித்துப் பார்த்தது. மிக அருகாமையில் காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.

  

நாய் தேவநாதன் ஆடையைப் பற்றி இழுத்தது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தேவநாதன் கண் விழிக்கவில்லை.

  

என்ன செய்வதென்று தெரியாமல் நாய் திகைத்தது. சிறிது தூரத்தில் ஒரு குளம் இருப்பது தெரிந்தது. அதைக் கண்டவுடன் நாய் பாய்ந்தோடிச் சென்றது. அந்தக் குளத்திற்குள் இறங்கியது. உடல் முழுவதும் நனையும்படி தண்ணீ ரில் மூழ்கியது. பிறகு எழுந்து தேவநாதன் படுத்திருக்குமிடத்திற்கு ஓடி வந்தது. அவன் அருகில் இருந்த புல் தரையில் புரண்டது. இவ்வாறு குளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்து வந்து அவன் படுத்திருந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த புல் தரை முழுவதையும் ஈரமாக்கிக் கொண்டே யிருந்தது.

  

நேரம் ஆக ஆக அது குளத்திற்குப் போகும் வழியில் இருந்த மரங்களிலும் தீப்பற்றிக்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.