குட்டீஸ்..வந்தாச்சா..வாங்க..வாங்க..எதுல நிறுத்தினோம்?ம்ம்..ராஜகுமாரன் ஜெயசூர்யாவ...... மந்திரவாதி பஞ்சவர்ண தவளையா மாத்த அவன கொளத்துல கொண்டு போட்டுர்றாங்க.....நாட்ட விட்டு விரட்டப்பட்ட மூத்தராணி பாவம் ராஜாவையும் மகன் ஜெயசூர்யாவையும் நெனெச்சு அழுதுகிட்டே நடந்து... நடந்து போறாங்க.மனசு பூரா வருத்தம்.ரொம்ப தூரம் நடக்குரதால அவங்களுக்கு காலெல்லாம் வலிக்குது ரொம்ப பசிக்கிது ரொம்ப தாகமா இருக்கு.மயக்கமா வருது.
ஒரு எடத்துல அவங்க மயக்கம்போட்டு விழுந்துடறாங்க.அப்ப அந்த பக்கமா ஒரு மீனவன்..மீனவன்னா..கடல்லபோயி மீன்பிடிக்கிறவரு..அவரும் அவரோட மனைவியும் அவங்களோட ரெண்டு புள்ளைங்களும் வராங்க.அவங்க பெரிய ராணிய காப்பாத்தி தங்களோட வீட்டுக்கு அழச்சுக்கிட்டு வந்துடறாங்க.ராணி தாந்தான் இந்த நாட்டு ராணிண்னு அவங்ககிட்ட சொல்லல்ல.அவங்களுக்கும் இவங்க ராணின்னு தெரியாது.
ஒரு நாளைக்கு அந்த மீனவனோட ரெண்டு பிள்ளைங்களும் ஒரு சின்ன மீன்பிடிக்கிற வலையை எடுத்துக்கிட்டு ஒரு கொளத்துக்கு மீன்பிடிக்கப் போனாங்க.அந்தவலையில... மந்திரவாதி.. ஜெயசூர்யாவ பஞ்சவர்ண தவளையா மாத்தி போட்டான்ல அந்த பஞ்ச வர்ண தவள மாட்டிக்கிச்சு. அதிசயமா தெரிஞ்ச அந்த தவளைய பாத்து ரெண்டு பேருக்கும் ஒரே குஷி.அந்தத் தவளைய வீட்டுக்கு தூக்கிக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்த மீனவன் வீட்டுல இருந்த தன்னோடஅம்மாவான அந்த ராணிய தவள பாத்துது.அதுக்கு அது தன்னோட அம்மான்னு புரிஞ்சிடுச்சி.ஆனா ராணிக்கு அந்த தவள தன்னோட மகன் ஜெயசூர்யான்னு புரியல. பாவம் தவளையால பேச முடியாதில்லையா..
அதால ஒண்ணும் சொல்ல முடீல.ஒரு நாளைக்கு அந்த ராணி தான் இருந்த வீட்டு கொல்லைப்புரத்துல செடிகள்ள பூத்திருந்த பூக்களைப் பறிக்க சென்றபோது இந்த தவளையும் அவங்க பின்னாடியே போச்சு.அம்மா பின்னாடியேதானே அவங்க பிள்ளைங்களும் போவாங்க?இல்லியா?நீங்களும் அப்பிடித்தானே..நீங்கெள்ளாமும் அம்மா எங்க போனாலும் அவங்க ட்ரெஸ்ஸ புடிச்சிக்கிட்டேதானே போவீங்க?ஆமா..ஆமான்றீங்களா..குழந்தைகென்னா அப்பிடித்தான்..தப்பு ஒண்ணுமில்ல..
ராணி பூப்பறிச்சிக்கிட்டே இருந்தாங்களா?இந்த தவளையும் அவங்க பின்னாடி நின்னிச்சா...அப்ப ஏதோ ஒரு காரியமா மந்திரவாதி இருக்கான்ல அவ ஒரு கழுகா மாறி மேல பறந்து போய்க்கிட்டு இருந்தான்.அவனோட கழுகுப் பார்வையில இந்த பஞ்சவர்ண தவள பட்டிடுச்சி..அவ்வளவுதான்..
விர்ர்ர்ர்ர்ர்ருன்னு அந்த கழுகு கீழ எறங்கி வந்திச்சு..லபக்குன்னு இந்த தவளைய மூக்குல கவ்விக்கிச்சு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு மேல ஏறி கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு பறந்து போயிடுச்சி.
வீட்டுல எல்லாரும் ரொம்ப வருத்தப்பட்டாங்க பஞ்சவர்ண தவளைய நெனெச்சு. கழுகு மூக்குல இருந்த தவள... டொரா..டொரா..டொரா அப்பிடின்னு சத்தமா கத்திக்கிட்டே இருந்திச்சு.கழுகு ரொம்ப தூரம் பறந்து கிட்டு இருந்திச்சு.
அப்ப பக்கத்து நாட்டு ராஜா தன்னோட நாட்டுல காட்டுல வேட்டையாடிக்கிட்டு இருந்தான்.அந்த கழுகுஅந்தக் காட்டுக்கு மேலால பறந்துக்கிட்டு இருந்திச்சு.அந்த ராஜாவோட பொண்ணு ஆரவல்லியும் தன்னோட அப்பாவான அந்த ராஜா கூட நின்னுகிட்டு இருந்தா.அவ ரொம்ப வீராதி வீரி சூராதி சூரிஆனா எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பா.ரொம்ப இரக்க மனசு அவளுக்கு.அவ வில் வித்தைல ரொம்ப திறமைசாலி.அவ வெச்ச குறி தப்பாது.அவ டொரா..டொரான்னு எதுவோ கத்துதேன்னு வானத்த நிமிந்து பாத்தா..கழுகு ஒண்ணு ஒரு தவளைய கவ்விக்கிட்டு போறதையும் தவள காப்பாத்துங்கன்னு சொல்ர மாதிரி கத்துரதையும் பாத்தா..அவ்வளவுதான் வில்லுல அம்ப பூட்டி சர்...ருன்னு கழுகுமேல வுட்டா..அது விர்...ருன்னு வேகமா போயி சரக்குன்னு கழுக குத்திச்சு.
அவ்வளவுதான் கழுகு தொபுகடீர்ன்னு கீழவிழிந்திச்சு.பாத்தா...அங்க கழுகுக்கு பதிலா மந்திரவாதி செத்துக்கிடந்தான்.ஆ...ன்னு கத்திட்டா ஆரவல்லி. அதேசமயம் அவ பார்வ பஞ்சவர்ண தவள மேல போனிச்சி.அட இதென்ன அதிசய தவளன்னு அது கிட்ட போனா..அப்ப அந்த தவள என்ன பண்ணிச்சி தெரியுமா?சக்..சக்.சக்குன்னு தாவித் தாவி.. செத்துக்கிடக்கிறானே அந்த மந்திரவாதி... அவன் கையில இருந்த மந்திரக்கோல் மேல ஏறி ஒரு குதி குதிச்சிது.என்ன அதிசயம் சட்டுனு அந்த தவள ராஜகுமாரன் ஜெயசூர்யாவா மாரிடிச்சு.ராஜா,ஆரவல்லி,அவங்களோட வந்த வீரர்கள்லாம் இத அதிசயமா பாத்தாங்க.
அந்த நாட்டு ராஜாகிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னான் ஜெயசூர்யா.ராஜாக்கு ஜெயசூர்யாவ ரொம்ப புடிச்சிடிச்சு.ஆரவல்லிக்கும்தான்.ஒடனே போயி மீனவன் வீட்டுல இருந்த தன்னோட அம்மாவ அழச்சிண்டு வந்தான் ஜெயசூர்யா. அந்த ராஜாவோட துணையோட நிறைய படைங்களை அழைசுக்கிட்டு தன்னோட நாட்டுக்குப் போனான்.கெட்டவங்களான தன்னோட சித்திங்க..அவங்க பிள்ளைங்க,அந்த கெட்ட மந்திரி எல்லாராலையும் நாட்டு மக்கள்ளாம் ரொம்ப கஷ்டப்படுறத பாத்தான்.அந்தகெட்ட கூட்டத்த ரொம்ப ஈஸியா ஜெயிச்சான்,தன்னோட அப்பா வீரவர்மன காப்பாத்தினான்.அப்பரம்..அப்பரமென்ன...தன்னோட அப்பா அம்மாவோட ஆசிவாதத்தோடமுடிசூட்டிக்கிட்டு அந்தனாட்டுக்கு ராஜாவாகி ஆரவல்லியோட அப்பா அம்மாவோட சம்மதத்தோட ஆரவல்லிய கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொம்ப ரொம்ப வருஷம் நல்ல ராஜாவா நாட்ட ஆண்டு வந்தான்.மஹாராஜா ஜெயசூர்யா....வாழ்க!..வாழ்க!! மஹாராஜா ஜெயசூர்யா...வாழ்க!வாழ்க!!...
குட்டீஸ்..உங்களுக்கெல்லாம் இந்த கதை புடிச்சிருக்கா?இதுல கதை கேக்க வந்த குட்டீஸான ஒங்க பேரையெல்லாம்( கீர்த்தனா,சித்ரா,தேன்மொழி,சந்தியா,மீரா,விந்த்யா,சாந்தி நந்தினி ஷாரோன் அனுஷா ஜான்சின்னு)சொல்லி கூப்டிருக்கேன்.அந்த பேர்லெல்லாம் யாராவது இருந்தா தப்பா ..நினைக்காதீங்க.. ஹி..ஹி..ஹி..எல்லாம் ஒரு தமாஷுக்கு....கே..?மத்தபடி படிச்ச எல்லார்க்கும் புடிச்சிருக்கா?..நன்றி..நன்றி..
{kunena_discuss:875}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.