(Reading time: 13 - 25 minutes)

ன்றாக பரீட்சை எழுதாத , குறைந்த மார்க்குகள் வாங்கிய மாணவ(வி)யின் பெற்றோர் ஆசிரியரை சந்திக்கச் செல்லும் போது யாராகிலும் கவனித்தால் தெரியும் அவர்கள் ஏதோ மாபாதகம் செய்த குழந்தையின் பெற்றோர் போன்று வெட்கி, கூனி குறுகி இருப்பர். குழந்தையோடு கூட அவர்களது தன்னம்பிக்கையும் அத்தோடு சுருங்கி விடுகின்றது.

அதே நேரம் நன்கு படிக்கும் குழந்தையின் பெற்றோர் ஏதோ தாங்கள் தங்கள் அறிவுக் கூர்மையால் ஈட்டிய வெற்றிப் போன்று நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு ஆசிரியரிடம் கூடுதலாக 10 நிமிடம் தாமாகவே எடுத்து தன் பிள்ளைகள் பெருமைகளை அள்ளி விடுவார்கள்.

இவை இரண்டுமே அனர்த்தங்கள் என்றுதான் எனக்கு தோன்றுகின்றது, கல்வித்துறை கொண்டு வந்த பொதுவானதொரு கல்வித் திட்டத்தை கற்க ஒரு சில மாணாக்கருக்கு எளிதாகவும், ஒரு சிலருக்கு புரிந்துக் கொள்ள இயலாததாக கடினமாகவும் இருக்கின்றது என்பதே காரணம் அல்லவா?

இதில் பெருமைக் கொள்ளவோ? சிறுமைப் பாராட்டவோ என்ன இருக்கின்றது?

கற்றல் திறன் ஒரு மாணவனுக்கும் இன்னொரு மாணவனுக்கும் வித்தியாசப் படுவது இயற்கையே. ஆனால், நம்மில் எத்தனை பேர் இந்த உண்மைகளை உணர்ந்துக் கொண்டிருக்கிறோம். பக்கத்து வீட்டுக் குழந்தைகளைப் போல நம் குழந்தையும் 90% குறையாமல் மார்க்குகள் அள்ளி வர வேண்டும் என்று எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டு இருப்பது சமூகத்தில் ஒருவகையான ஏற்ற தாழ்வு மனப்பான்மையை வளர்த்திருக்கின்றது உண்மையல்லவா?

2.ஆசிரியர்கள்:

ரண்டாவது வகையினர் மாதா , பிதா, குரு தெய்வம் என்று பெற்றோருக்கு அடுத்தபடியாக உயர் நிலையாக கருதப் படும் ஆசிரியரைக் குறித்தது. அவர்களைப் பற்றி குறைக் கூற அல்ல, ஆனால் நாம் கண்டும் காணாமல் விடுகின்ற ஒரு சில விஷயங்களை குறிப்பிடவே எண்ணுகின்றேன்.

அனைத்து ஆசிரியரும் மாணாக்கர் நலம் பேணுபவரே. ஆனால், தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தன்னுடைய வகுப்பிலிருக்கும் அனைத்து மாணாக்கருக்கும் ஆசிரியர் ஒரே மாதிரியான கவனிப்பை தர முடிகின்றதா?

ஒரு சில பள்ளிகளில் ஒரு ஆசிரியை 60 குழந்தைகளை கவனிக்கும் நிலையிலும் இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் போது ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட கவனம் கொடுப்பது அவரால் எப்படி சாத்தியப் படும்? இத்தகைய வேலைப் பளுவே கூட அவருக்கு நன்றாக படிக்கும் குழந்தைகள் மேல் பிடித்தமும் , படிக்காத குழந்தைகள் மேல் பிடித்தமின்மையையும் ஏற்படுத்த காரணிகளாக ஆகிவிடுகின்றன போலும். படிப்பில் சிறந்த பிளைகளுக்கே எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிடீஸிலும் அதிகப் படியான ஊக்கம் கொடுக்கப் படுவதை கண்டிருக்கின்றேன்.

படிக்காத பிள்ளைகள் எதற்குமே லாயக்கு இல்லைப் போன்ற ஒரு எண்ணம் பரவலாக வித்திடப் படுவது இங்கேதான். தேர்ச்சி பெறாத மாணவன் தன்னம்பிக்கை இழக்கும் நிலையை அடைவதும் இங்கேதான்.

படிப்பில் சோபிக்காத குழந்தைகளை பள்ளி வகுப்பறையில் எல்லோரும் இருக்கையில் தாழ்த்திப் பேசுவதும், அதை மாணவர்கள் அவமானமாக கருதுவதும் குழந்தைகள் மனதில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஏன் யாரும் உணர்வது இல்லை?.

மேற்கூறியவை அனைத்தும் நாம் சாதாரணமாக ஏற்றுக் கொண்டுள்ள நம் சமுகத்தில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகள் தான் என்பதை மறுக்கவியலாது.

3.மாணவர்கள்:

ப்போது மூன்றாம் வகையினரான மாணாக்கரைப் பார்ப்போம். அதில் ஏற்கெனவே பாகு படுத்தியுள்ள நன்கு மனப்பாடம் செய்ய, கற்றறிந்துக் கொள்ள திறமையுள்ள மாணவர்கள் வீட்டிலும் வெளியிலும் பாராட்டுக்களை அள்ளுகிறார்கள். தன்னுடைய கல்வியாண்டுகளை பொருளாதார, சமூக பிரச்சினைகள் எதுவும் வராவிட்டால் முற்றிலுமாக முடித்து வெற்றிக் கனியை கைக் கொள்ளுகிறார்கள்.

நாம் சிந்திப்பது நன்கு படிக்காத மாணவர்கள் குறித்தது அல்லவா? அவர்களுடைய மன நிலை எவ்வாறாக இருக்கும் என்பதை பார்க்கலாமா?

வீட்டிலும், பள்ள்ளியிலும் புறக்கணிப்பும், சுடுசொல்லுமே கேட்டு வளரும் மாணவர்கள் இந்த நிகழ்வுகளால் படிப்பதில் தானாகவே ஆர்வம் குறைந்து நாம் ஒன்றுக்குமே லாயக்கு இல்லை போலும் என்கின்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி புறக்கணிக்கப் படும் குழந்தைகளின் மன நிலை எவ்வாறு இருக்கும் என்று கொஞ்சம் பெரியவர்களாகிய நம்முடைய உதாரணங்களை வைத்து யோசித்து தான் பார்ப்போமே.

நம்முடைய உறவினர் ஒருவர் வீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது என்று வைத்துக் கொள்வோம், அவர் எப்போதும் நம்மை மட்டம் தட்டிப் பேசுபவர். பிறர் முன்னால் நம்மை இழிவு படுத்துபவர் என்றிருந்தால் அவர் வீட்டிற்கு நாம் மறுபடியும் செல்ல விரும்புவோமா?

இன்னொரு உதாரணம் கூறுகின்றேன். நாம் வேலைக்கு போகிறோம் நம்மால் இயலாத அளவுக்கு வேலைப் பளு அங்கே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அதாவது வேலைப் பார்க்கும் நபரின் மொத்த எடையே 45 கிலோ என இருக்க அவருடைய பணி தினசரி 100 கிலோ கனமுள்ள பொருட்களை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று இருந்தால் அங்கு அவரால் வெற்றிகரமாக பணி புரிய இயலுமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.