(Reading time: 13 - 25 minutes)

தொடர் - அறிந்ததும், அறியாததும் - 02. கல்வியில் தோல்வியா? அதெப்படி? - ஜான்சி

Education

அறிந்ததும், அறியாததும்

கல்வியில் தோல்வியா? அதெப்படி?

ஹாய் ஃபிரண்ட்ஸ்,

அறிந்ததும், அறியாததும் முதல் பகுதிக்கு நீங்கள் அனைவரும் தந்த ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. நம் தமிழ் மக்கள் தங்கள் அடையாளங்களைப் பற்றிய உணர்வை இழந்து விட்டார்களோ? என்கிற என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் அர்த்தமில்லாதது, தேவையற்றது என எனக்கு உணர்த்தியது தமிழகம் ஆரம்பித்து உலகம் முழுவதிலும் புது ரத்தம் பாய்ச்சிய ஜல்லிக்கட்டுக்கான மாபெரும் போராட்டம். மிகுந்த உவகை அளித்த உணர்வு பூர்வமான அந்த சரித்திர நிகழ்வு நம் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க கூடியது அல்ல இல்லையா?.

இந்த முறை நான் பகிர்ந்துக் கொள்ள விரும்பிய கருத்து நம்முடைய கல்வித்துறை அமைப்பைக் குறித்தது. அதன் தோல்வி முகம் குறித்து பகிர்ந்துக் கொள்ளவே எண்ணினேன்.

ல்வியில் தோல்வியா? அதெப்படி? இந்திய கல்வியைக் குறித்து நாம் பெரிதளவில் பெருமை மிக்க விதமாக அல்லவா அறிந்துள்ளோம், எதை வைத்து கல்வித்துறை தோல்வி என்றுக் கூறலாம்? என்று நீங்கள் ஒருவேளை என்னிடம் கேட்க கூடும்.

நான் அதற்கு விளக்கம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன். நான் நம்முடைய நாட்டின் கல்வித் துறையில் பணிபுரியவில்லை ஆனால் ஒரு தனியார் நிறுவனத்தில் US Healthcare குறித்த வேலையை கற்றுத்தரும் டிரெய்னராக பணி புரிகிறேன். ஆசிரியருக்கும், டிரெயினருக்கும் கற்றுக் கொடுக்கப் படும் பாடங்கள் தவிர்த்து மூன்று அடிப்படை வித்தியாசங்கள்தாம்.

முதலாவது கற்றுக் கொடுக்கப் படும் இடம் அதாவது பள்ளிக்கும் அலுவலகத்துகுமுள்ள வித்தியாசம் என்றால், இரண்டாவது கற்றுக் கொள்ளுபவர்களின் வயது. பள்ளியில் சிறுவயது மாணாக்கர்கள் என்றால் அலுவலகத்தில் வயது கூடிய பணியாளர்கள், மூன்றாவது கற்பித்தலின் கால அவகாசம். பள்ளியில் கற்போர் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வருடம் என்றால் அலுவலகத்தில் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்கள் அவ்வளவே.

ஒவ்வொரு ட்ரெயினிங்கின் இறுதியிலும் இரண்டு விதத்தில் அந்த பயிற்சியின் வெற்றி கணிக்கப் படும்.

  1. பயிற்சி பெற்றோர் கற்றுக் கொண்ட விதம் மற்றும் தங்கள் பணியை சிறப்பாக செய்து வெற்றிப் பெறும் திறமை.
  2. பயிற்சி அளிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கை மற்றும் பயிற்சி முடிந்து தேர்ச்சிப் பெற்று பணிக்கு செய்தவர்களின் எண்ணிக்கை இவற்றின் சராசரி சதவிகிதம்.

அதாவது 20 பேர் பயிற்சியில் சேர்ந்திருக்க அதில் 16 பேர் மட்டுமே பயிற்சியில் வெற்றி பெற்று பணிக்கு செல்வதாக இருந்தால் இடையிலேயே பயிற்சியை முடிக்காது தோல்வி பெற்ற 4 பேரின் தோல்வி டிரெயினிங்கின் தோல்வியாகவே கருதப்படும்.

இதே கணக்கீட்டின் படி இந்தியக் கல்வித்துறையின் வெற்றியை ஒப்பிடுகையில் இந்தியக் கல்வித்துறை திறமை மிக்க மாணாக்கர்களை உருவாக்குகின்றதா? என்றால் அதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், ஆசை ஆசையாய் தன் பிள்ளைகளை படிக்க கொண்டு வந்து சேர்க்கும் அனைத்து பெற்றோரின் ஆசையும் நிறைவேறுகின்றதா? அனைத்து மாணாக்கர்களும் தங்கள் கல்வியை முழுமையாக நிறைவேற்றுகின்றார்களா? எனும் போது தான் அதன் தோல்வி புலனாகின்றது.

இணையத்தில் கிடைத்த தகவலின் படி இந்திய திரு நாட்டில் 47 மில்லியன் அதாவது 4 கோடியே 70 லட்சம் மாணாக்கர்கள் பத்தாம் வகுப்பிற்க்கு முன்னதாகவே படிப்பை நிறுத்தி விடுகின்றார்கள் 77% மாணாக்கர்கள் மட்டுமே 10 வகுப்பு வரைக்குமாக படிப்பைத் தொடர்கின்றார்கள். அதிலும் 12 ம் வகுப்பு வரைக்கும் படிப்பை தொடரும் மாணாக்கர்கள் சதவிகிதம் இன்னும் குறைவு அதுதான் 52%. ஏறத்தாழ பாதி அளவு மாணாக்கர்கள் மட்டுமே.

இதற்கான காரணத்தை இணையத்தில் தேடும் பொழுது ஏராளமானவை கொட்டிக் கிடக்கின்றன. சமூக, பொருளாதார காரணிகளை, அரசாங்கம் செய்ய தவறிய போதுமான ஏற்பாடுகளை தவிர்த்துப் பார்க்கையில் நம்முடைய சமூகத்தில் எளிதாக அங்கீகரிக்கப் பட்டுள்ள சில அணுகுமுறைகளாலும், கொள்கைகளாலும் பாதிக்கப் படும் உளவியல் காரணங்களே மாணாக்கர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்க்கு காரணிகளாக இருப்பதாக எனக்கு தோன்றியது.

நான் கூறும் கருத்துக்கள் ஒரு தலைச் சார்பாகவோ, தவறானதாகவோ இருந்தால் எனக்கு தெரியப் படுத்தக் கேட்டுக் கொள்கின்றேன்.

பள்ளிப் படிப்புக் குறித்த விஷயம் என்பதால் அதைச் சார்ந்த மூன்று வகையினரைப் பற்றி நாம் பார்ப்போம். பின்னர் இறுதியில் அனைத்திற்க்கும் ஆணிவேரான நான்காம் குழுவையும் கூட.

1.பெற்றோர்

2.ஆசிரியர்

3.மாணவர்கள்

1.பெற்றோர்:

முதலாவது பெற்றோர், நமது நாட்டின் ஒவ்வொரு பெற்றோரின் எதிர்பார்ப்பு, பிற்காலத்திற்கான கனவுகள், வாழ்வின் முதலீடு அனைத்துமே அவர்களது குழந்தைகளின் படிப்பாகவே இருக்கின்றது என்பதை மறுக்கவியலாது. அதே நேரம் பற்பல நேரங்களில் அவர்களது எதிர்பார்ப்புக்கள் அதீதமாக மாறி விடுவதும் உண்டு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.