(Reading time: 5 - 10 minutes)

TV Serials - தி கிரவுன் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ] - சீசன் 1 எபிசோட் 07

இங்கிலாந்தின் தற்போதைய மகாராணி எலிசபெத்தின் கதையை சொல்லும்  நெட்ஃபிலிக்ஸ் வெப் சீரீஸின் சீசன் 1 7 ஆம் அத்தியாயத்தின் கதை சுருக்கம் இது. எபிசோட் 6 கதைக்கு தி கிரவுன் - எபிசோட் 6 பக்கத்திற்கு செல்லுங்கள்.

ரு பெரிய சாம்ராஜ்யத்தின் ராணி ஆக இருந்தாலும் கல்வி அறிவு அல்லது பொது அறிவு எத்தனை முக்கியம் என்பதை பளிச்சென்று காட்டும் அத்தியாயம் இது.

     

ராணியாக வாழ்வது சுலபமானது அல்ல என்பது இந்த சீரீஸ் ஏற்கனவே சொல்லி விட்டது. ஆனால் ராணியாக இருந்தால் தனக்கு பிடித்த மாதிரி வேலையாட்களை வைப்பதிலும் கூட பாலிட்டிக்ஸ் இருக்கும் என்று புரியும் போது ஆச்சர்யமாகவே இருக்கிறது.

   

நிறைய பின்னடைவுகள் இருந்தாலும் ராணி எனும் பதவியின் கூடவே வரும் அதிகாரமும், கடமையும் யாரையும், எவரையும் உயர்த்தும் என்று தான் இந்த அத்தியாயத்தை ரீவைண்ட் செய்துப் பார்க்கும் போது தோன்றுகிறது.

  


கதை சுருக்கம்:

லிசபெத் இளவரசி என்பதால் சிறுவயதில் அவளுக்கு மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் கல்வி கொடுக்கப் படவில்லை. அரசக் குடும்பம், அரசியல் அமைப்பு, ராணியின் பொறுப்புகள் போன்றவையே அவளுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டது.

இப்போது மற்ற தலைவர்களுடன் பேசும் போது அவர்கள் பேசும் விஷயங்களை முழுவதும் புரிந்துக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறாள் எலிசபெத். தன் பொது அறிவு குறைவாக இருப்பதை புரிந்துக் கொண்டு வெதும்புகிறாள்.

  

வ்வளவு நாட்களாக பக்கிங்காம் அரண்மனையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்த டாமி ஒய்வு பெறும் நேரம் நெருங்குகிறது. அவருக்கு அடுத்ததாக தான் இளவரசியாக இருந்தப் போது உதவிய மார்டினை அந்த இடத்திற்கு கொண்டு வர விரும்புகிறாள் எலிசபெத். அதைப் பற்றி மார்ட்டினிடம் பேசுகிறாள். மார்ட்டினும் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறான்.

மார்ட்டினிடம் தனக்கு ப்ரைவேட் ட்யூட்டர் ஒருவர் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறாள் எலிசபெத். மார்ட்டினும் எலிசபெத்திற்கு ஏற்ற விதத்தில் ஒரு டீச்சரை கண்டுப்பிடிக்கிறார்.

   

சோவியத் யூனியன் ஹைட்ரோஜன் பாம் தயாரித்திருப்பதாக செய்தி உலகம் எங்கும் பரவுகிறது. சர்ச்சில் அதைப் பற்றி எலிசபெத்திடம் பேசுகிறார். அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவரை தனியாக ரஷிய அதிபருடன் பேச அனுமதிக்காமல் பிரிட்டனும் அதில் கலந்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அதைப் பற்றி அமெரிக்க அதிபருடன் பேசும் பொறுப்பை ஆந்தோனிக்கு கொடுக்கிறார் சர்ச்சில்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.