(Reading time: 5 - 10 minutes)

தன் ட்யூட்டரிடம் நடந்ததை சொல்கிறாள் எலிசபெத். அப்படி தவறாக நடந்துக் கொண்ட அரசியல் தலைவர்களை அழைத்து கண்டிக்க சொல்கிறார் அந்த டீச்சர். அவர்களிடம் பேசும் அளவிற்கு தனக்கு அறிவில்லை என்று மீண்டும் தன் தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறாள் எலிசபெத்.

அவர்கள் நேர்மையாக நடந்துக்கொள்ளவில்லை அதனால் தட்டிக் கேட்கும் அனைத்து அதிகாரமும் எலிசபெத்திற்கு இருக்கிறது என்று அவளை ஊக்கப்படுதிகிறார் அந்த டீச்சர்.

   

உத்வேகத்துடன் தன்னிடம் சர்ச்சில் உடல் நிலை பற்றி சொல்லாமல் மறைத்த லார்ட் சேலிஸ்பரியை அழைத்துப் பேசுகிறாள் எலிசபெத்.

அரசாங்கம் நடத்துவது உங்கள் வேலையாக இருக்கலாம் ஆனால் அந்த அரசாங்கம் நல்ல படியாக நடக்கிறதா என்பதை கவனிக்கும் கடமை எனக்கிருக்கிறது எனக் கோபத்தை நேரடியாக வெளிப் படுத்துகிறாள்.

அடுத்து சர்ச்சிலிடமும் தன் கோபத்தை, ஆதங்கத்தை நேரடியாக காட்டுகிறாள். எலிசபெத்தின் கோபத்தை எதிர்கொள்ளும் சர்ச்சில், முதல் முறையாக தான் பதவி விலகப் போவதாக சொல்கிறார்!

  

ஒரு அரச பரம்பரையின் insider view போன்ற இந்த வெப் சீரீஸ் உலகெங்கும் மிகவும் பிரபலம். நீங்களும் இதன் பார்வையாளர் என்றால் உங்கள் கருத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.