(Reading time: 5 - 10 minutes)

ஆனால் ஆந்தோனி, சர்ச்சில் இருவரும் வயதின் மூப்பால் ஒரே நேரத்தில் நோய் வசப்படுகிறார்கள். ஆந்தோனி சர்ஜரிக்கு தயாராகிறார். அதே நேரத்தில் சர்ச்சில் ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்.

பிரிட்டன் அரசாங்கத்தின் அதிகார நிலைகளில் நம்பர் 1 & 2 இருவரும் நோய் வசப் பட்டிருக்கும் செய்தி எலிசபெத்திற்கு தெரிந்தால் தன்னை ராஜினாமா செய்ய சொல்லி விடுவாள் என்று தனக்கு சாதாரண சளி என்று அவளுக்கு  செய்தி சொல்கிறார் சர்ச்சில்.

 

ஆந்தோனி, சர்ச்சில் இருவரும் உடல் நலக்குறைவுடன் இருப்பதால் அமெரிக்க அதிபரை எலிசபெத் விருந்தினராக அழைக்க வேண்டும் என்று சர்ச்சில் கோரிக்கை விடுக்கிறார்.

தன் பொது அறிவை பற்றிய தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் எலிசபெத் வேண்டாம் என்று தடுத்து பார்க்கிறாள். ஆனாலும் வேறு வழி இல்லாமல் கடைசியில் ஏற்றுக் கொள்கிறாள்.

 

அரண்மனையில் இருந்து அழைப்பு வரவும் ஐசன்ஹோவர் அதை ஏற்றுக் கொள்கிறார். அதற்குள் சர்ச்சிலின் உடல் நலம் இன்னும் மோசமாகிறது. இந்த நேரத்தில் ஐசன்ஹோவர் வந்தால் சர்ச்சில், அந்தோணி இருவராலும் அவருடன் பேச முடியாது என்பதால் அவரிடம் வர வேண்டாம் என்று சொல்லி விட மற்ற அரசியல் தலைவர்கள் முடிவு செய்கிறார்கள். இதையும் எலிசபெத்திற்கு தெரியாமல் செய்ய முடிவு செய்கிறார்கள்.

  

லிசபெத் மார்டினை அடுத்த ப்ரைவேட் செக்ரட்டரியாக நியமிக்க நினைப்பது டாமிக்கு தெரிய வருகிறது. சீனியாரிட்டி படி அடுத்து மைக்கேல் என்பவர் தான் அந்த பதவிக்கு செல்ல தகுதியானவர் என்று டாமி நினைக்கிறார். அதனால் மார்டினை அழைத்து கண்டிக்கிறார்.

இதைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் எலிசபெத் டாமியிடம் நேரடியாக மோதுகிறாள். டாமியோ அனுபவம் அதிகம் இருக்கும் மைக்கேல் தான் அந்த பதவிக்கு சரியானவர் என்று தன் நிலையை வலியுறுத்துகிறார்.

இதைப் பற்றி விவாதிக்க தன் முன்னாள் செக்ரட்டரி கோல்வில் லை அழைக்கிறாள் எலிசபெத். எலிசபெத் சர்ச்சில் உடல்நிலை பற்றி பேசுவதாக நினைத்து உண்மையை சொல்லி விடுகிறார் கோல்வில். தனக்கு தெரியாமல் தன் பின்னே நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் எலிசபெத்திற்கு அதிர்ச்சியை கொடுக்கிறது.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.