(Reading time: 4 - 7 minutes)
Contact old friendships; Make the friendship blossom again.
Contact old friendships; Make the friendship blossom again.

  

நிராகரிக்கப்படுவதைப் பற்றி கவலைப் படாதீர்கள்!

நட்புக்கு ஊட்டச்சத்து தேவை, ஆனால் நமக்குள் இருக்கும் பல விதமான பாதுகாப்பின்மைகள் நம்மை நம் பழைய தோழி, தோழர்களை அணுகுவதைத் தடுக்கலாம்.

  

அப்படி நம்மில் ஏற்படும் அச்சங்களில் முக்கியமான ஒன்று நிராகரிப்பு. நாமாக சென்று பேசினாலும் மற்றவர் பதிலுக்கு பேசாவிட்டால் என்ன செய்வது என்று கவலைப் பட்டுக் கொண்டே இருந்தால் நீங்கள் பல நெருங்கிய நட்பு மற்றும் மகிழ்ச்சியான அனுபவங்களை இழக்க நேரிடும்.

  

நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது என்ன என்றால், நீங்கள் தொடர்புக் கொள்ளும் எல்லோரும் உடனடியாக உங்களிடம் நட்பு பாராட்டவோ, நெருங்கிய நட்பாக மாறப் போவோதோ கிடையாது. அப்படிப் பட்ட நிராகரிப்பைத் தவிர்ப்பது சாத்தியமற்றது. எனவே அதை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்வது உங்களுக்கு உதவும்.

  

ஆனால், அதன் காரணமாக பழைய நல் உறவுகளை தொடராமல் இருப்பது சரி அல்ல!

  

நட்புக்கு பாலமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம்

மேலே நாம் படித்த ஆய்வு, சோஷியல் மீடியா எனப்படும் சமூக ஊடக தளங்களின் வழியாக பழைய நண்பர் ஒருவருடன் கனக்ட் ஆவதால் ஏற்படும் விளைவுகளை மதிப்பீடு செய்யவில்லை.

  

ஒரு பழைய நண்பருடன் மீண்டும் தொடர்பு கொள்ளும் போது சமூக ஊடகங்கள் எந்த அளவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் நிபுணர்கள் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

  

தங்கள் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவோ அல்லது தொலைப்பேசி வழியாக அழைக்கவோ தயாராக இல்லாதவர்களுக்கு, சமூக ஊடகங்களில் கமன்ட் பகிர்வது அல்லது பதிலளிப்பது, நட்பை மீண்டும் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடமாக இருக்கும்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.