(Reading time: 3 - 5 minutes)

அழகு குறிப்புகள் # 86 - வெந்தயம் – அழகிய கூந்தலுக்கான மேஜிக்

ளபளப்பான கூந்தல், அடர்த்தியான, கருப்பு கூந்தல் என நம் அனைவருக்கும் பலவிதமாக தலை முடி ஆசைகள் இருக்கின்றன!

நம் ஆசைகளை நிறைவேற்றும் மேஜிக் ஏதாவது இருந்தால் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்!

அப்படி ஒரு மேஜிக் நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கிறது என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

சமையலுக்கு நாம் பயன்படுத்தும் வெந்தயம் போல கூந்தலுக்கு சிறப்பான ஒன்று எதுவுமில்லை!

 

வெந்தயத்தின் நன்மைகள்

வெந்தயம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, மேலும் இது விரைவான மற்றும் ஆரோக்கியமான புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

அது மட்டுமல்லாமல், இயற்கையான கண்டிஷனராகவும் இது செயல்படுகிறது.

இது பொடுகு, உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் முகப்பரு போன்றவற்றை நிறுத்தவும் உதவுகிறது.

மேலும் கூந்தலுக்கு அடர்த்தியை கொடுத்து, மென்மையை வழங்குகிறது.

மொத்தத்தில் இயற்கையாக நம் கூந்தல் அழகுற உதவுகிறது.

 

வெந்தயம் ஹேர் மாஸ்க்

முடி வளர்ச்சிக்கு வெந்தயம் ஹேர் மாஸ்க்

தேங்காய் எண்ணெய், வெந்தயம் இரண்டையும் 1:2 என்ற அளவில் எடுத்துக் கொள்ளவும் (1 ஸ்பூன் எண்ணெய்க்கு, 2 ஸ்பூன் வெந்தயம்).

வெந்தயத்தை லேசாக இடித்துக் கொள்ளவும்.

அதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடாக்கவும்.

எண்ணெய் சிவப்பு நிறமாக தெரியும் வரை சூடாக்கவும்.

இதை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வெயிலில் 7 நாட்கள் வைக்கவும்.

 

பயன்படுத்தும் முறை:

தலை குளிப்பதற்கு ஒரு நாள் முன்பு, இரவில் உங்கள் உச்சந்தலையை இந்த எண்ணெய்  பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.