(Reading time: 3 - 5 minutes)

ஹேர் கண்டிஷனராக வெந்தயம்

1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 ஸ்பூன் தூளாக பொடி செய்த வெந்தயம் இரண்டையும் எடுத்துக் கொள்ளவும்.

ஆலிவ் எண்ணெயை ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் சூடாக்கி, அதில் வெந்தயம் தூள் கலக்கவும்.

ஒரு காட்டன் பால் எடுத்து எண்ணெயில் நனைத்து, எண்ணெய் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.

இதை 30 நிமிடங்கள் விட்டுவிட்டு, தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவவும்.

இதை வாரத்திற்கு இரண்டு முறை வரை செய்யலாம்.

 

பொடுகை அகற்றும் வெந்தய மாஸ்க்

தலைக்கு குளிக்க ரெடி ஆகும் முன், 2 ஸ்பூன் வெந்தயப் பொடியை, 1 ஸ்பூன் தயிரில் கலக்கவும்.

அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.

பின்னர், 40-50 நிமிடங்கள் விட்டு விடவும்.

பிறகு ஷாம்பூ பயன்படுத்தி கழுவ வேண்டும்.

இதை வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்.

 

முயற்சி செய்துப் பாருங்கள், உங்கள் கூந்தலும் பொலிவுடன் மின்னும்.

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.