(Reading time: 15 - 29 minutes)

பொது - ஆகஸ்ட் 15 - எங்கே போனது சுதந்திரம்? - சசிரேகா

independence day

கீழே குறிப்பிட்ட விசயங்கள் சில மனிதர்களுக்கு மட்டுமே நடக்கிறது,  

எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தாது.

கருவில் இருக்கும் குழந்தை - தாயின் கருவில் ஒரு குழந்தை இருந்தால் அது சுதந்திரம் அதுவே இரு குழந்தையாக இருந்தால் ஒரு குழந்தையின் சுதந்திரம் அங்கேயே பறிக்கப்பட்டு விடுகிறதே அதிலும் குழந்தை ஆணா பெண்ணா என மருத்துவ சாதனங்களால் கண்டுபிடித்து பெண்ணாக இருந்தால் அது உலகுக்கு வரும் முன்பே அழிக்கப்பட்டு வருகிறதே, ஒரு பெண் பிறக்கும் சுதந்திரம் கூட அவளின் பெற்றோரால் முடக்கப்படுகிறது. ஏன் எங்கே போனது சுதந்திரம்?

பிறந்த குழந்தை - பிறக்கும் குழந்தை ஆணோ, பெண்ணோ, இரட்டையரோ, ஊனமுற்றோரோ, அவர்களை காணும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ஆண் குழந்தையானால் அடடே வாரிசு பிறந்துடுச்சி இருந்தாலும் ஆண் பிள்ளைகளை பத்திரமா பார்த்துக்கனும் கடைசி காலத்தில கஞ்சி ஊத்தாம போயிட்டா என்னாகிறது என்பார்கள், சிலர் பெண் குழந்தையானால் ஓ பொண்ணுதான் பிறந்துச்சா கஷ்டம்தான் பத்திரமா பார்த்துக்க தப்பு தண்டா பண்ணிட போகுது, மானம் போயிரும் என்பார்கள் சிலர் இரட்டையர்களாக பிறந்தால் இந்த காலத்தில ஒரு குழந்தையையே வளர்க்க கஷ்டப்படறாங்க, இதுல இரட்டையா தேவையா என்பார்கள் சிலர், ஊனமுற்ற பிள்ளை பிறந்தால் நல்ல குழந்தை பிறந்தாலே வாழ்க்கை சக்கரம் கஷ்டப்பட்டு ஓடும் இதுல இப்படியொரு புள்ளை பிறந்தா விளங்குமா அந்த வீடு என்பார்கள் சிலர். இப்படி குழந்தை பிறப்பிலும் ஆளாளுக்கு குறை கூறினால் பிறந்த குழந்தையின் நிலைதான் என்ன அவர்களுக்கான சுதந்திரம் பிறந்த உடனே மறுக்கப்படுகிதே ஏன் எங்கே போனது சுதந்திரம்?

1 வயது குழந்தை - ஆண் குழந்தையெனில் கொஞ்சும் மழலை பேச்சைக் கேட்டு ரசிப்பவர்கள் அதே பெண் குழந்தையெனில் பாரு இப்பவே எப்படி பேசுது, இது வளர்ந்தா என்னவெல்லாம் பேசும் பாரு என குறை கூறும். பெண் குழந்தையின் பேச்சை சுதந்திரமாக பேச விடாமல் அதட்டி ஒடுக்கி பேசாத அமைதியா இரு என சிலர் பெண் குழந்தைகளின் பேச்சுக்களையும் பறித்துக் கொள்கிறார்களே ஏன் எங்கே போனது சுதந்திரம்?

2 வயது குழந்தை - ஆணோ பெண்ணோ 2 வயதாகி தன் தாய் யார் தந்தை எவர் என்பதை அறிந்துக் கொள்ளும் பருவத்திலும் ஆண் குழந்தையாக இருந்தால் தெருவில் மற்ற பிள்ளைகளோடு விளையாடும் சுதந்திரம் கூட பெண் குழந்தையாக இருந்தால் மறுக்கப்படுகிறது ஏன் எங்கே போனது சுதந்திரம்?

3 வயது குழந்தை - ஆணோ பெண்ணோ விளையாடும் பருவத்தில் அவர்களை ஃப்ரிகேஜி, எல்கேஜி என பள்ளிக்கு அனுப்பி அவர்களது விளையாடும் சுதந்திரத்தை அந்த சிறு வயதிலேயே பறிக்கிறார்களே சில பெற்றவர்கள் ஏன்  எங்கே போனது சுதந்திரம்?

4 வயது குழந்தை - இந்த வயதில் குழந்தைகள் யாரை பார்த்தாலும் பழகி விடும் ஆனால்  பெண் குழந்தை பெற்ற சிலர் யாரிடமும் பழக விடாமல் வீட்டிலேயே வளர்ப்பதும் ஆண் குழந்தை பெற்ற சிலர் யாரிடமும் பேசக்கூடாது அவங்க நல்லவங்க இல்லை என குறை கூறி பிஞ்சு மனதில் நஞ்சை வளர்ப்பதும் ஏன் அவர்கள் மற்றவர்களுடன் சுதந்திரமாக பேசக்கூட தடை விதிக்கிறார்களே ஏன் எங்கே போனது சுதந்திரம்?

5 வயது குழந்தை - ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என ஒரேயொரு பழமொழியை வைத்துக் கொண்டு பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளிடம் நீ இப்படியிருக்கனும் நீ அப்படியிருக்கனும் என கன்டிஷன்களோடு அவர்களை சுதந்திரம் இல்லாமல் வளர்த்து இப்ப இப்படி வளர்த்தாதான் வளர வளர அவங்க நல்லவங்களா இருப்பாங்க என சமூகத்தில் சொல்லும் அவல நிலை இன்னும் இருக்கிறதே ஏன் எங்கே போனது சுதந்திரம்?

6 வயது குழந்தை - பள்ளியில் அடுத்த அடி எடுத்து வைக்கும் குழந்தைகள் எந்த மொழி பாடப்பிரிவில் படிக்க வேண்டும், எல்கேஜி யூகேஜி படித்த பிள்ளைகள் ஒன்று கான்வென்டில்தான் படிக்க வேண்டும், சிபிஎஸ்இ பள்ளியில்தான் படிக்க வேண்டும், அதுவும் ஆங்கில மொழி பாடப்பிரிவில்தான் படிக்க வேண்டும், வேறு மொழி பாடப்பிரிவில்தான் படிக்க வேண்டும் என குழந்தையின் ஆற்றலை அவர்களது எண்ணங்களை வைத்து முடிவெடுக்காமல் தங்களது தேவைக்காக சமூகத்தின் மதிப்பிற்காக எதிர்காலத்தில் குழந்தைகள் நன்முறையில் வளர வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு பிடிக்கிறதோ இல்லையோ தங்களுக்கு பிடித்த மொழிப் பாடப்பிரிவில் சேர்த்து அவர்களை திணறடிப்பது ஏன் எங்கே போனது சுதந்திரம்?

7 வயது குழந்தை - பள்ளியில் தரும் கிரேடு ரேங்கார்டில் கூட குழந்தையின் ஆற்றலை பார்க்க தவறி கூட படிக்கும் சக மாணவனை விட நீ ஏன் மார்க் குறைவா எடுத்த அவனை பாரு, எப்படி படிக்கறான் பாரு, அடுத்த முறை அவனை விட நீ பர்ஸ்ட்ல வரனும் என அந்த வயதில் விளையாட விடாமல் எந்நேரமும் படி படி என அவனது சுதந்திரத்தை பிடுங்கி வெறும் ரேங்க்கார்டில் பிள்ளையின் தகுதியை காட்டுவது ஏன் எங்கே போனது சுதந்திரம்?

8 வயது குழந்தை - எந்த குழந்தையானாலும் தன்னுடன் படிக்கும் குழந்தையுடன் பாகுபாடின்றி சுதந்திரமாக தான் கொண்டு வரும் உணவை பரிமாற்றிக்கொள்ளும் அது அவர்களுடனான புரிதலுக்கு அடையாளம் அதை ஏற்காத சில பெற்றோர்கள் உன் டிபன் பாக்சை நீ யாருக்கும் கொடுக்க கூடாது என முதல் முதலாக குழந்தையை அதட்டி மிரட்டி அவர்களை அந்த வயதிலேயே யாருடனும் ஒட்டகூடாது என்ற மனப்பான்மையை திணிக்கிறார்களே ஏன் எங்கே போனது சுதந்திரம்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.