(Reading time: 15 - 29 minutes)

வெளியே வேலை செய்துவிட்டு வரும் பெண்களும், வீட்டிலும் வேலைகளை செய்வது இயல்பாகி விட்டது சில ஆண்கள் மட்டும் தன் மனைவிகளுக்காக வீட்டிலும் அவர்களுக்கு உதவி செய்வது சிறப்பு ஆனால் அது கொஞ்சமே. பெண்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை என்றுமே வேலை செய்யாமல் ஓய்வாக இருந்ததில்லை. அவர்களுக்கு ரிட்டயர்மென்ட் என்ற ஒன்றே இருக்காது. இந்த 10 வருடங்களில் அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை கவனித்து அவர்களை நல்லபடியாக வளர்த்து என 2 தலைமுறைகளை வளர்க்கும் மாபெரும் பணியை தாய் என்ற முறையிலும் பாட்டி என்ற முறையிலும் ஒரு பெண் செய்கிறாள். அதே போல தந்தை என்ற முறையில் தாத்தா என்ற முறையில் ஒரு ஆண் தன் பிள்ளைக்கும் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் தகுந்த வழிகாட்டியாகவும் சமூகத்தின் பார்வைகளை அலசி ஆராய்ந்து அந்த குடும்பத்தை எந்நாளும் வழிநடத்திக்கொண்டு இருப்பார்கள். அவர்களது சுதந்திரம் கூட கடைசி காலத்தில் கிடைப்பதிலேயே ஓடி ஓடி தேய்ந்து ரிட்டயர்மெண்ட் ஆகி வீட்டில் இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளும் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆணுக்கு சுதந்திரமாவது ஒன்றாவது என ஓடிக்கொண்டிருக்கிறார்களே ஏன் எங்கே போனது சுதந்திரம்?

61 வயதுக்கு மேல் இந்த வயதில் ஆணோ பெண்ணோ உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்து விடுவார்கள். கண்ணுக்கு முன்னால் ஓய்வு இருந்தும் அவர்களால் அதை அனுபவிக்க முடியாது, கண்ணுக்கு முன்னால அவர்களது இளவயது விருப்பங்கள் இருந்தால் அதையும் அவர்களால் அனுபவிக்க முடியாது, இந்த வயதில் சுதந்திரம் கிடைத்தும் பலனில்லாமல் போகும். ஆக கருவில் இருக்கும் பிள்ளை முதல் இறக்கும் வரை ஒவ்வொருவரின் சுதந்திரம் பெற்றவர்களாலோ, மற்றவர்களாலோ, சமூகத்தாலோ ஒடுக்கப்படுகிறது.

ஆனாலும் நாம் வருடா வருடம் கொண்டாட்டிக் கொண்டே இருக்கிறோம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை. நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பல விசயங்களில் இன்னும் சுதந்திரம் வரவில்லையே எப்போது கிடைக்கும் அந்தச் சுதந்திரம்?? எங்கே போனது அவர்களது சுதந்திரம்???.

ஜெய் ஹிந்த்

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.