(Reading time: 15 - 29 minutes)

9 வயது குழந்தை - பள்ளியில் நடக்கும் எல்லா போட்டியிலும் குழந்தைகள் கலந்துக் கொண்டு நல்ல மதிப்பும் பெயரும் ஏன் வெற்றிக் கோப்பையையும் பெற வேண்டும் என நினைத்து அவர்களுக்கு பிடிக்காத சில போட்டிகளில் வற்புறுத்தி தள்ளி அவர்களது சுதந்திரத்தை கெடுத்து என் பையன் அதுல பர்ஸ்ட் என் பொண்ணு இதுல பெஸ்ட் என அக்கம் பக்கம் வீடுகளில் பெருமை தேடிக்கொள்ளும் சில பெற்றோர்கள் குழந்தைகளின் மனதை ஏன் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்கள் எங்கே போனது சுதந்திரம்?

10 வயது குழந்தை - பள்ளியில் கூடப் படிக்கும் மாணவனோ மாணவியோ எந்த ஜாதி எந்த மதம் நல்லவனா கெட்டவனா என பார்த்து பார்த்து பெற்றவர்கள் அவர்களுடன் பழகவிடுவது அவர்களுக்கு பிடிக்காத ஒரு குழந்தையோடு தன் குழந்தை பழகுவதை தடுத்து அவர்களின் சுதந்திரத்தை பறித்து அவர்களுக்கு பிடித்த குழந்தைகளோடு சேர்த்து கட்டாயமாக பழகவிடுவது ஏன் எங்கே போனது சுதந்திரம்?

11 வயது குழந்தை - பள்ளியில் அழைத்துச் செல்லும் சுற்றுலாவுக்கு எத்தனை பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பயமோ இல்லை குழந்தை சுற்றுலாவுக்கு சென்று வந்தால் அடிக்கடி சுற்றலா செல்ல வேண்டும் என ஆசைக்கொண்டு படிக்காமல் போய்விடும் என குழந்தைகளின் இன்பங்களை கூட துன்பங்களாக நினைத்து அவர்களது வெளி உலகை அறியும் சுதந்திரத்திற்கு தடை விதிப்பது ஏன் எங்கே போனது சுதந்திரம்?

12 வயது குழந்தை - இவ்வயதில் பெரும்பாலும் பெண் பிள்ளைகள் பருவத்தை எய்துவர். அதுவரை ஆண் பிள்ளைகளுடன் கலந்து விளையாடி மகிழ்ந்த பெண் பிள்ளைகளுக்கு அப்போதே முட்டுக்கட்டை போடுவார்கள் பெரியவர்கள். அவர்களுடன் விளையாடாதே கெட்டுப்போவாய் என புரியாத வார்த்தைகளால் பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் சுதந்திரத்தை கூட பறிக்கிறார்களே ஏன் எங்கே போனது சுதந்திரம்?

13 வயது குழந்தை - எக்குழந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு என்று சில சில திறமைகள் உண்டு, விளையாட்டில் ஆண் பிள்ளைகள் கிரிக்கெட், கேரம், பேஸ்கட் பால், டான்ஸ், செஸ் போன்றதிலும் அதே போல பெண் பிள்ளைகள் பாட்டு, நடனம், செஸ் போன்றதிலும் அதிகம் ஆர்வம் காட்டி அதில் நன்மதிப்பும் நல்ல முன்னேற்றமும் அடையும் குழந்தைகளை வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடமும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும் தெரியாத நபர்களிடமும் கட்டாயப்படுத்தி அவர்களது திறமைகளை காட்டு காட்டு என அவர்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என கேளாமல் அவர்களை ஆட வைத்து பாட வைத்து சுதந்திரமாக செய்து வந்த அவர்களது திறமைகளை ஏதோ இயந்திரதனமாக மற்றவர்களின் முன் விளம்பரப்படுத்துகிறார்களே ஏன் எங்கே போனது சுதந்திரம்?

14 வயது குழந்தை - இந்த வயதில் குழந்தைகளுக்கு தேவை ஆயிரம் இருந்தாலும் பெற்றவர்கள் மத்தியில் இருப்பது படிப்பு ஒன்றே. அடுத்த வருடம் 10 வது பப்ளிக் எக்ஸாம், இப்போது 10வதில் நன் மதிப்பு பெற்றால் பள்ளிகளும் அந்த மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு சேர்த்துக் கொள்வார்கள் இல்லையென்றால் பள்ளியை விட்டே வெளியேற்றுவார்கள் அதுவரை முதல் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரை படிக்க வைத்த அதே பள்ளியே மார்க் குறைவானால் அந்த மாணவர்களை வெளியேற்றிவிடும் அதற்காகவே பெற்றவர்களும் சுதந்திரமாக சுற்றித்திரியும் குழந்தையை ஒரு அறையில் அடைத்து அவர்களை படிக்க சொல்லி வற்புறுத்துவது ஏன் எங்கே போனது சுதந்திரம்?

15 வயது குழந்தை - இந்த வயதில் அவர்களால் செய்ய முடிந்த ஒரே விசயம் படிப்பு, பரிட்சை, நல்ல மதிப்பெண் அதுவரை தான் கற்று வந்த பாட்டு, டான்ஸ், விளையாட்டு மற்ற செயல்திறன் படைப்புகள் அனைத்துக்கும் தடை போட்டு முழு நேரமும் படிப்பிலேயே மூழ்க வைத்து அவர்களின் சுதநத்திரத்தை பறித்து ஒரு ரோபோ போல ஏன் மாற்ற வேண்டும். எங்கே போனது சுதந்திரம்?

16 வயது - இனி என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பது கூட குழந்தைகளின் கையில் இல்லை, அவர்களின் மதிப்பெண்களை வைத்து பள்ளி நிர்வாகம் முடிவு எடுக்கும் இல்லையானால் பெற்றவர்கள் எடுப்பார்கள், குழந்தைகளுக்கு எந்த படிப்பில் ஆர்வம் என்பதை மட்டும் கேட்கமாட்டார்கள் அப்படியே சுதந்திரமாக சொல்லும் சில குழந்தைகளின் வாயை அடக்க பெற்றவர்கள் சிலர் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவில் சேர்ப்பது பள்ளியும் மதிப்பெண்களை வைத்து மாணவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ பிடிக்காத பாடப்பிரிவில் சேர்ப்பது ஏன் இந்த வயதிலும் பிள்ளைகளுக்கு பேசும் சுதந்திரம் இல்லையா எங்கே போனது சுதந்திரம்?

17 வயது - நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என பிள்ளைகள் தாங்கள் சுதந்திரமாக பயன்படுத்திய டீவி, நண்பர்களுடனான அரட்டை, விளையாட்டு மைதானம் அனைத்தையும் துறந்துவிடவேண்டும் ஏன் எங்கே போனது சுதந்திரம்?

18 வயது -  பள்ளி கடைசி வருடப் படிப்பில் முழுக்கவனம் இருக்க வேண்டும், அதிலும் தந்தை சொல்லிவிடுவார் நீ இந்த படிப்புதான் படிக்க வேண்டும் அதற்கான மதிப்பெண் எடு என தாய் சொல்லிவிடுவாள் நீ இந்த படிப்புலதான் உன் திறமை நன்றாக இருக்கும் அதற்கேற்ப மதிப்பெண் எடு என சொல்லிவிடுவார், அக்கம் பக்கம் இருப்பவர்கள் இது நல்ல படிப்பு, இது தேறாது என அவரவர்கள் முடிவுகளை திணிப்பார்கள் சுதந்திரமாக தான் கல்லூரியில் இதைதான் படிப்பேன் என எத்தனை பிள்ளைகள் தங்கள் வீடுகளில் சொல்லியிருக்கிறார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.