(Reading time: 7 - 13 minutes)

Point pleasant beach

ந்த ட்ரிப்பில் கடல் அலைகள் அளவிற்கு என்னை கவர்ந்த இன்னுமொரு விஷயம் இந்த விளையாட்டுக்கள் தான்.

வி.ஜி.பி, எம்,ஜி.எம் என நாம் பார்த்து பழகி இருக்கும் விளையாட்டுக்கள் தான் இவை!

ஆனாலும் வெகு நாட்களுக்கு பின் விளையாடியது மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது!

இந்த் படத்தில் நீங்கள் பார்க்கும் விளையாட்டில், எட்டி பார்க்கும் தவளைகளை அடித்து, முதலில் 150 பாயின்டுகள் பெறுபவர் வெற்றி பெற்றவர் என்றார்கள்!

நாங்கள் நால்வரும் விளையாட, என் கணவர் வெற்றி பெற்றார்.

உற்ர்ர்ரர்ர்ர்ர்....

நான் 140!

 

Point pleasant beach

துவும் நமக்கு பரிச்சயமான விளையாட்டு தான்.

என்ன துப்பாக்கிக்கு பதிலாக அதிக எடை இல்லாத கல் போன்ற ஒன்றை கொடுத்து அடிக்க சொன்னார்கள்.

விளையாட funny ஆக இருந்தது.

 

இன்னும் பல பல விளையாட்டுகள் – பேஸ்கட் பால், ரக்பி, புட்பால், ஷூட் தி டக்!

 

அனைத்து விளையாட்டுகளையும் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் யாரும் விளையாடலாம் என்பது உற்சாகமளிப்பதாக இருந்தது!

 

Point pleasant beach

டுத்த அட்டாக், ரைட்ஸ் பக்கம்!

 

Point pleasant beach

க்கச்சக்கமான ரைட்ஸ்!

முதலில் டாய் ட்ரெயினில் தொடங்கி, குழந்தைகளுடன் பெரியவர்களும் செல்லும் மேரி கோ ரவுன்ட், ஸ்பேஸ் செல்லும் எபக்ட் கொடுக்கும் ஸ்டார் ஷிப், கிரேசி பஸ், நாமே ஓட்டி செல்லும் சிறிய பம்பர் கார் என அனைத்தையும் ஒரு கை பார்த்தோம்!

எனக்கு மிகவும் பிடித்தது சூப்பர் ஹிமாலயா (பெயர் ஒன்றே போதும் எனக்கு அது பிடிக்க, ஆனால் ரைடும் fun ஆக இருந்தது!) மற்றும் வேகமாக சென்றும் கீழே இறங்கும் Tornado & Flitzer

 

Point pleasant beach

கிளம்பும் முன் சில்லென்று ஒரு காக்டெயில்!

தவறாக கணக்கு போடாதீர்கள்! இது ஆரேஞ் – பைனாப்பிள் ஜூஸ் காக்டெயில்.

கூடவே அங்கே கிடைத்த பிரைட் oreos! (சாக்லேட் பிஸ்கட்டை , மாவில் முக்கி பிரை செய்து தருகிறார்கள்!)

 

Point pleasant beach

விளையாட்டில் கிடைத்த டாய்சை காரில் எடுத்து வைத்த போது மனதில் அப்படி ஒரு சந்தோஷம்!

 

Point pleasant beach

வீட்டிற்கு வந்த உடனே முதலில் அந்த டாய்ஸ் எல்லாம் அடுக்கி வைத்து ரசித்தேன்!

“அம்மா உங்களை இவ்வளவு சந்தோஷமா பார்த்ததே இல்லை’ என்றாள் என் மகள்.

லேப்டாப்பை தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதை பல நாட்களுக்கு பின் உணர்ந்ததால் வந்த சந்தோஷமாக இருக்குமோ?

எப்படியோ, என்னுள் இருக்கும் சிறுமியை வெளியே கொண்டு வந்த ட்ரிப் என்று சொல்ல வேண்டும்.

பல வருடங்களுக்கு பின் லாங் ரேஞ் பாஸ்கட் பால் விளையாடி கிடைத்த அந்த டைகர் பொம்மையை பார்த்து பார்த்து சிரித்து தீரவில்லை எனக்கு!

என் கணவர் கிடைத்தது வாய்ப்பு என்று கேலி செய்வது கூட அதை மாற்றவில்லை!

மாறாக அவர் எப்போது கடைசியாக இப்படி எல்லாம் பேசினார் என்ற யோசனையே வந்தது!

மொத்தத்தில் என் குடும்பத்திற்கு சந்தோஷத்தை கொடுத்த ஒரு ட்ரிப்!

 

ஆனாலும், பீச் சென்று விட்டு, மாங்காய் சுண்டல், மல்லிப் பூ, வளையல் கடைகள் என்று இல்லாமல் போனது மனதின் ஓரத்தில் ஏமாற்றமாக தான் இருக்கிறது!

என்ன தான் ஆனாலும் நம்முடைய பீச் போல வருமா?

 

 

 {kunena_discuss:1127}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.