(Reading time: 7 - 13 minutes)

சம்மர் ஸ்பெஷல் பயணம் - பீச் ஸ்பெஷல் - பாயின்ட் ப்லேசன்ட் பீச், நியூ ஜெர்சி

வெகு நாட்களுக்கு பிறகு லேப்டாப்பை, மொபைலை மூடி வைத்து விட்டு பேமிலியாக பீச்க்கு ட்ரிப் போகும் வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் இருக்கும் நியூஜெர்சியில் பீச்க்கு பஞ்சம் இல்லை என்றாலும் இதுவரை நான் சென்றதில்லை.

மெரீனா பீச்சை விட என்ன பெரிய பீச் என்ற எண்ணம் ஒரு பக்கம் என்றால், வார இறுதி நாட்கள் & ஹாலிடே நாட்களிலும் பப்ளிஷ் செய்ய வேண்டி இருக்கும் அல்லது டீம்க்கு ஏதாவது விதத்தில் உதவ வேண்டி இருக்கும் என்ற காரணம் இன்னொன்று (அவ்வளவு சின்சியர் சிகாமணியா நீன்னு கேட்காதீங்க! ஏதாவது எக்ஸ்க்யூஸ் வேணுமே!).

அதுமட்டுமல்லாமல் என் கணவர் என்னை விட பல மடங்கு மோசம்! அவர் விழித்திருக்கும் நேரம் முழுக்க வேலையை தவிர வேறு ஏதாவது யோசிப்பாரா என்பது சந்தேகமே!

சென்ற வாரம் வந்த ஈஸ்டர் வீக்-என்டில் மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதுடன், என் கணவரையும் அவர் ரூட்டினில் இருந்து வெளிக் கொண்டு வருவது என்ற முடிவுடன், அவரையும், 2 குட்டீஸையும் காலையிலேயே தொல்லை செய்து எழுப்பி பீச்சுக்கு போகலாம் என்றேன்.

அந்த ட்ரிப்பிறகு வாங்க உங்களையும் அழைத்து செல்கிறேன்.

 

Point pleasant beach

காலை ஒன்பது மணி அளவில் கிளம்பினாலும், வெயில் வரவே இல்லை.

இந்த போட்டோவில் இன்னுமொரு விஷயம் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். நியூஜெர்சியில் Transmission cables இன்னும் இது போல தான் பயன்படுத்துகிறார்கள்!
எனக்கு தெரிந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் அன்டர்-க்ரவுண்ட் transmission பல பல வருடங்களுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
இந்த விஷயத்தில் நம்முடைய எலக்ட்ரிசிட்டி போர்ட் இவர்களை விட முன்னேற்றம் அடைந்த ஒன்றே!

 

Point pleasant beach

தூங்கி எழுந்து கிளம்பியாகி விட்டது.

ப்ரேக்பாஸ்ட் வழியில் McDயில்!

ஆரோக்கியமில்லை தான் ஆனால், ஒரே ஒரு நாள் ப்ரேக்ன்னு நினைத்து மன்னித்து விடுங்கள்.

 

Point pleasant beach

ரோட் ட்ரிப் என்றாலே கடுப்படைய செய்யும் ஒரு விஷயம் இந்த டோல்!

வீட்டில் இருந்து பீச் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கும் குறைவாக தான் நேரமாகும் என்றாலும் வழியில் 2 டோல்!

கொடுமைங்க!

 

Point pleasant beach

ரு வழியாக பத்தரை மணி அளவில் பாயின்ட் ப்லேசன்ட் பீச் வந்தாகி விட்டது!

 

Point pleasant beach

பீச் பக்கத்திலேயே முனிசிபல் பார்க்கிங் இருக்கிறது.

ஆனால் அங்கே பார்க் செய்ய மணி நேர கணக்கில் டாலர் கட்ட வேண்டும் என்பதுடன், பீக் சீசனில் அங்கே பார்க்கிங் இடம் கிடைக்கவும் செய்யாது.

அதனால் மற்ற தோழிகள் சொல்லி இருந்த ஃப்ரீ பார்க்கிங்கை தேடி காரை பார்க் செய்தோம்!

 

Point pleasant beach

பார்க் செய்த இடத்தில இருந்து பீச்சுக்கு செல்ல பதினைந்து நிமிடங்கள் ஆகும்.

இது தான் நான் சொன்ன முனிசிபல் பார்க்கிங். இப்படி ஈ ஓட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை!

சரி, சிக்கனமாக பார்க்கிங் பணத்தை சேமித்து விட்டோம் என மனதை தேற்றிக் கொண்டோம்.

மேலும் பதினைந்து நிமிடங்கள் சிலு சிலு காற்றில் நடப்பதும் தனி சுகமே!

 

Point pleasant beach

ரு வழியாக பீச் அருகே வந்தாகி விட்டது!

 

Point pleasant beach

து தான் நாம் இன்று விசிட் செய்ய போகும் பீச்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.