(Reading time: 5 - 10 minutes)

பயணங்கள் முடிவதில்லை - 02 - தேடினேன், வந்தது! - பிந்து வினோத்

Aeroplane

நியூயார்க் டூ அபுதாபி (தொடர்ச்சி...)

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் செல்ல, அங்கே இருந்த இன்னுமொரு பெண் ஹோம்லான்ட் செக்யூரிட்டி ஆபிசர் ஸ்கான் செய்யும் பகுதிக்கு சென்று வரும் போது என் லேப்டாப் பேகுடன் வருவது தெரிந்தது.

அவசரமாக அவரிடம் சென்று, “மேம் அது என் பேக்” என்றேன்.

என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு (படிச்ச பொண்ணு மாதிரி தானே இருக்க என்று சொல்வது போன்ற லுக்!),

“அடுத்த முறை லேப்டாப்பை பேக்கில் இருந்து வெளியே எடுத்து வையுங்கள்” என்றார்.

அப்போது தான் பியூஸ் ஆகி இருந்த என் மைன்ட் பலப் எரிந்தது!

நான் முதல் முறை யூ.எஸ் வந்து திரும்பிய 2006ஆம் ஆண்டிலேயே இது போன்ற பழக்கம் உண்டு. மொபைலை கூட வெளியே எடுத்து வைக்கும் இந்த காலத்தில் எப்படி லேப்டாப்பை உள்ளேயே வைத்து ஸ்கான் செய்வார்கள்!

மொபைலை வெளியே வைக்க சொன்ன போதே லேப்டாப்பையும் சொல்லி இருந்திருப்பார்கள் என் காதில் விழாமல் போயிருக்கிறது! (நல்ல ENT டாக்டரை பார்ப்பதையும் சென்னையில் என்னுடைய டு-டூ லிஸ்டில் சேர்த்துக் கொண்டேன்).

என்னை நானே மனதினுள் திட்டிக் கொண்டு, அந்த பெண்மணியின் பின்னே சென்றேன்.

என் மூத்த மகளும், குழந்தையுடன் என்னருகே வந்து நின்றாள். இளையவளை நான் கையில் தூக்கி கொள்ள, அழுகை அட்டாக் அப்போதைக்கு நின்று போனது!

லேப்டாப்பை பேகிலேயே வைத்து ஸ்கான் செய்யும் பகுதிக்கு அனுப்பி இருந்ததால், என் லேப்டாப்புக்கு ஸ்பெஷலான செக்யூரிட்டி செக் நடந்தது.

விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனாலும் சொல்கிறேன்!

விமானத்தில் பயணம் செய்யும் போது, பொதுவாக நீங்கள் கொண்டு செல்லும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் சுவிட்ச் ஆன் செய்யும் நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

எனக்கு இங்கே ஏற்பட்ட அனுபவம் போல, ஏதேனும் காரணத்திற்காக உங்களின் எலக்ட்ரானிக் சாதனத்தை சோதனை செய்யும் நிலை ஏற்பட்டால் கட்டாயம் ஸ்விட்ச் ஆன் செய்து பார்ப்பார்கள்.

பேட்டரி இல்லை போன்ற காரணங்களுக்காக அந்த சாதனம் ஆன் ஆகவில்லை என்றால் அதை அங்கேயே விட்டு விட்டு பயணம் செய்ய சொல்வார்கள்.

எனவே கவனமாக இருங்கள்!

இனி இது போல செய்யாதீர்கள் என்று எனக்கு ஸ்பெஷல் அறிவுரை வழங்கியப்படி ஆபிசர் என் லேப்டாப்பை பேகினுள் உள்ளே வைத்து என்னிடம் கொடுக்க, என் மகள், அவள் கையிலிருந்த ஹான்ட் பேகை காண்பித்து,

“இதையும் செக் செய்யுங்கள்” என்றாள்!

சிரிப்பையே பார்த்திராதது போல இருந்த அந்த செக்யூரிட்டி பெண்மணியின் முகத்தில் சின்ன புன்னகை!

“தட்ஸ் பைன் பேபி” என்று அவர் அந்த சின்ன புன்னகையுடன் சொன்ன போது ஒன்று புரிந்தது!

பிள்ளைகளிடம் இருக்கும் இன்னசன்ஸ் போல நம் மனநிலையை மாற்றக் கூடிய மருந்து வேறு எதுவும் இல்லை இன்பாக்ட் தேவையும் இல்லை.

மனநிலை சரி இல்லை என்றால் குட்டீஸுடன் இருந்து பேசினாலே போதும்! இதையும் மனதினுள் நோட் செய்து வைத்துக் கொண்டேன்!

ப்படியோ செக்யூரிட்டி செக்கில் அட்வென்ச்சர் எல்லாம் செய்து அங்கிருந்து வெளியே வந்து எங்களின் விமானம் நிற்கும் கேட்டை அடைந்தோம்.

கேட்டின் அருகே இருந்த அந்த ராட்சத சைஸ் விமானத்தை பார்த்த போது ஹப்பாடியோ என்ற நிம்மதி மற்றும் மனித மூளையின் இன்னுமொரு சிறந்த கண்டுபிடிப்பை பார்த்த ஒரு சின்ன சந்தோஷம்.

விமானம் கிளம்ப நேரம் இருக்கவே, என் கணவருக்கு போன் செய்து கே அருகே வந்து விட்டதை சொல்லி விட்டு, என் பேமிலி வாட்ஸ்-அப் க்ரூப்பில் செல்ஃபி எடுத்து அனுப்பி விட்டு, குட்டீஸ் இருவருக்கும் சாக்லேட், ஜூஸ் வாங்கி கொடுத்து விட்டு ஹாயாக கேட்டின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து போர்டிங் பாஸை எடுத்து பார்த்தால் நியூயார்க் டூ அபுதாபி செல்லும் பயணத்திற்கான போர்டிங் பாஸ் மட்டுமே இருந்தது!

அபுதாபி – சென்னை போர்டிங் பாஸை தேடினால் எங்கேயும் காணோம்!

பெட்டிகளை அனுப்பி விட்டு போர்டிங் பாஸ் பெற்ற இடத்தில அடுத்த கனக்டிங் விமானதிற்க்கான போர்டிங் பாஸ் பெறாதது புரிந்தது!

இந்த முதல் விமானம் தரை இறங்கும் இரண்டு மணி நேரத்தில் அடுத்த விமானம் கிளம்பும். அதற்குள் போர்டிங் பாஸ் வாங்கி விட முடியுமா??? இந்த விமானம் தரை இறங்க தாமதமானால் என்ன செய்வது? etc etc போன்ற பல பல கேள்விகள்!

இதுவும் என் கவனக் குறைவால் வந்த பிரச்சனை தான்!

இனிமேலாவது கவனத்துடன் எல்லாம் செய்வது என்ற முடிவுடன் (வேறு என்ன செய்வது!) அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.