சிரித்து சமாளித்து நன்றி சொல்லி விட்டு காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்த உடன், இனி அவ்வப்போது தனியே வெளியே வந்து பழக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சின்னத்தம்பி குஷ்பூ ரேஞ்சிற்கு மாறி விட்டேனோ... என்ற சிந்தனையுடனே, கொஞ்சம் முன்பு நினைத்த தனியாக செல்லும் பயணத்திற்கு ‘நோ – நோ’ வை ‘யெஸ் – யெஸ்’ என மாற்றிக் கொண்டேன் ![]()
நியூயார்க் ஏர்போர்ட் போல் அல்லாமல் இங்கே காத்திருந்த கூட்டம் சற்று குறைவு, அதுவும் பெரும்பாலானவர்கள் தமிழ் என்று பார்த்தாலே தெரிந்தது.
ஆனால் நான் யாரிடமும் பேசும் மன நிலையில் இல்லை.
என்னை பார்த்து ஸ்மைல் செய்தவர்களை பார்த்து திரும்ப ஸ்மைல் செய்தேனா என்றுக் கூட தெரியவில்லை!
எப்போதடா விமானத்தில் ஏற சொல்வார்கள் சென்னை போய் சேரலாம் என்றே இருந்தது!
குழந்தைகள் இரண்டு பேருக்கும் அந்த பதிமூன்று மணி நேர பயணம் எல்லாம் ஜுஜுபி போலும்! ஒரே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நேரம் என் பொறுமையை சோதிக்க, ஒரு வழியாக விமானத்தில் ஏற சொல்லும் அறிவிப்பும் வந்தது!
இந்த முறை ஏறி அமர்ந்தேனோ இல்லையோ, வாயை பொத்திக் கொண்டேன்!
இரண்டரை மணி நேர பயணத்தில் தூங்கினால் என்ன, விழித்திருந்தால் என்ன?
நான் கப்-சிப்பென்று இருக்க, அக்கா தங்கை இருவரும் போட்டி போட்டு கொண்டு தூங்க ஆரம்பித்தார்கள்!!!!
அவர்களை ஆ என்று வேடிக்கை பார்ப்பதை தவிர ஒன்றும் செய்ய இயலவில்லை!
நீங்கள் NRI என்றால் இந்தியா செல்லும் போது மறக்காமல் ஒரு பேனாவை கை வசம் வைத்துக் கொள்ளுங்கள். Immigration form ஃபில் செய்ய உங்களுக்கு அது தேவை படும்!
எப்படியோ இது events எதுவும் இல்லாத பயணம் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தான் இல்லை.
விமானம் தரை இறங்கும் நேரம் வந்ததோ இல்லையோ, என் குழந்தை முன்பு போலவே அலற, இந்த முறை எக்ஸ்ட்ராவாக பெரியவளும் ‘வாந்தி வருகிறது’ என்ற பல்லவியுடன் சேர்ந்துக் கொண்டாள்.
‘சூப்பரான’ அரை மணி நேரத்திற்கு பின் விமானம் ஒரு வழியாக தரை இறங்கியது!
எத்தனை டையர்டாக இருந்தாலும், எத்தனை கடுப்புடன் இருந்தாலும், என்ன மாதிரியான தலைவலியுடன் இருந்தாலும், மீனம்பாக்கத்தில் விமானம் தரை இறங்கிய பின் ஒரு முறை சென்னை காற்றை இழுத்து சுவாசித்த உடன் அப்படி ஒரு சந்தோஷம்!
சொர்கமே என்றாலும் அது நம் சென்னை போல வருமா!!!!!
ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தாகி விட்டது!!!!!
பயணம் தொடரும்...
Next episode will be published on 28th June. This series is update weekly on Wednesdays.
{kunena_discuss:1127}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.