(Reading time: 3 - 5 minutes)

 08. ராதா கிருஷ்ணன் காதல் - நிலவே நீ சாட்சி - புவனேஸ்வரி

Radha Krishnan Kathal

நிலவு மயங்கிடும் இரவு !

தொடர்ந்தது  கண்ணன் ராதையின் உறவு !

 

அவன் தோள்  சாய்ந்த மங்கை வென்றிருந்தாள்  புவியை !

அவள் இனிமையில் கனிந்த அவன் மனம் அரங்கேற்றியது கவியை !

 

தேவர்களில் யாருக்கோ பொறாமையில் வந்தது வேதனை !

இதோ இயற்றத் தொடங்கினர் ராதைக்கு புதிய சோதனை !

 

கண்மூடி காதலில் லயித்த மன்னன் சொல்லி விட்டிருந்தான் மீராவின் பெயரை !

அதுவரை சிலிர்த்திருந்த ராதை உடனே தழுவினாள்  துயரை !

 

கேட்டாள்  ஆயிரம் கேள்விகளை !

இயற்றினாள்  மனதுக்குள் வேள்விகளை !

 

என்னை முத்தமிட்ட உன் இதழ்  கூறுவது இன்னொருத்தி நாமம் ?

இதை காணவா வந்தேன், இதோ சிரிக்கிறதே அர்த்த ஜாமம் ?

 

கோபியருக்கும் நீ கள்வனாம் !

கன்னியருக்கு நீ காதலனாம்!

 

கேட்டேன் பல்லாயிரம் செய்தியை !

இருந்தும் அமைதி காத்தேன் உன் பாதியாய்  !

 

உடைத்துவிட்டாயே கண்ணா உன்னை நம்பி வந்தவளின் உள்ளம் அதை  !

வெம்பி வீழ்கிறதே எனதுயிர் , நீயே பறித்துவிடு உனக்காய் சேர்த்த உயிர் அதை !

 

புன்னகைத்தான் கண்ணன் !

ராதையின் மன்னன் !

 

பின்னாலிருந்து அணைத்து  வானில் கை காட்டினான் !

துடிதுடித்த அவள் உள்ளத்தை ஸ்பரிசத்தால் கைதாக்கினான் !

 

கேட்கிறேன் ராதை, வானில் பார், தேர்ந்தெடு ஒரு நட்சித்தரத்தை பெயரிடு கண்ணன் என்றே !

சொல்கிறேன் விளக்கம் உன் மனதில் இருக்கும் துயரை வென்றே !

 

அண்ணார்ந்து  பார்த்தாள்  நிலவருகில் மின்னினான் நட்சத்திரம் !

 நிலவின் அருகில் மினுமினுத்த விண்மீன் அவள் கண்களில் பத்திரம் !

 

கூறுகிறேன் கேள் கண்ணா, அதோ அங்கு கண் சிமிட்டும் நட்சித்திரமே நீ !

என்ன விடை தரப்போகிறாய் எரிகிறதே பேதை நெஞ்சில் பொறாமைத் தீ !

 

விழிமூடி திற ராதை, மீண்டும் என்னை அடையாளம் காட்டுவாய் !

கண்ணன் மீது தவறு கண்டுவிட்டால்  தண்டனையாய்  பிரிவைத் தந்து என்னை வாட்டுவாய் !

 

விழி மூடினாள்  மாதவனின் சகி !

விழி திறந்தாள் வானிலே சதி !

 

மின்னியது நட்சத்திரம் அத்தனையும் ஒன்றாய் !

குழம்பிவிட்டாள் பேதை அவள் அவனை காணாமல் நன்றாய் !

 

காண்கிறேன் வானில் அனைத்து நட்சத்திரமும்  ஓர்  உருவாய் !

எதை உரைப்பேன் நீ என்று, காண்பவை எல்லாம் தெரிகிறது நீயாய் !

 

உணர்ந்துவிடு சகி, கண்ணனும் ராதைபோலதான் !

காண்பவை அனைத்தும் ராதையாய்  இருந்தால் காதல் கொள்ளாதோ என் உள்ளம் தான் !

 

என் கண்களுக்கு தெரிகின்ற உயிர் அனைத்தும் ராதை !

எனை அணைக்க துடிக்கும் இதயத்திற்குள் துடிப்பவளும்  ராதை !

 

வெவ்வேறு இதழ்களால் அழைத்தாலும் எனக்குள் கேட்கும் குரல் ராதை !

பலராய்  உன் கண்களில் தெரிவோர், என் கண்களுக்கு ராதை !

 

அதனாலேயே ஏற்கிறேன் அவர்களின் உணர்வை !

காதல் கொள்ளும் உள்ளம் அனைத்திலும் இருப்பாள் என் ராதை எனும் பாவை!

 

உணர்ந்தேன் உன் உள்ளதை இன்றே மாதவா !

மாதவம் வேண்டாம் உன்னை சேர, அன்பே போதும் அல்லவா ?

 

தலை குனிந்தான் பொறாமை கொண்ட வானுலக தேவன் !

கேட்டான் மன்னிப்பை, மன்னித்தான் கண்ணன் !

 

மீண்டும் முகிலின்பின் மறைந்து கொண்டாள்  வெண்மதி !

கண்ணனின் மார்பில் சாய்ந்த ராதை அடைந்தாள் நிம்மதி !  

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்

Ratha Krishnan kathal - 07

Ratha Krishnan kathal - 09

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.