(Reading time: 1 - 2 minutes)

ராதை இல்லையடி தோழி - புவனேஸ்வரி 

Radha Krishna

இரவு உண்டு இனிமை இல்லை

குளிர்ச்சி உண்டு மகிழ்ச்சி இல்லை

காற்று உண்டு காதல் இல்லை

ராதை உண்டு கண்ணன் இல்லையடி தோழி !

 

செவிகள் உண்டு கானம் இல்லை

செழுமை உண்டு நாணம் இல்லை

வதனம் உண்டு வனப்பு இல்லை

ராதை உண்டு கண்ணன் இல்லையடி தோழி !

 

மஞ்சம் உண்டு மாதவன் இல்லை

கேவல் உண்டு கேசவன் இல்லை

கோபம் உண்டு கோபாலன் இல்லை

ராதை உண்டு கண்ணன் இல்லையடி தோழி !

 

கானகம் உண்டு காட்சிகள் இல்லை

வேங்குழல்  உண்டு நாதம் இல்லை

வேதனை உண்டு ஆறுதல் இல்லை

ராதை உண்டு கண்ணன் இல்லையடி தோழி !

 

பாதை உண்டு கால்தடம் இல்லை

சிலிர்ப்பு உண்டு ஸ்பரிசம் இல்லை

வெட்கம் உண்டு வேண்டியவன் இல்லை

ராதை உண்டு கண்ணன் இல்லையடி தோழி !

 

பசியுண்டு உணவில்லை

தாகம் உண்டு நீரில்லை

கண்ணீர் உண்டு கரங்கள் இல்லை

ராதை உண்டு கண்ணன் இல்லையடி தோழி !

 

கண்கள் உண்டு கனவு இல்லை

இதழ்கள் உண்டு வார்தை இல்லை

உடல் உண்டு உயிர் இல்லை

கண்ணன் இன்றி ராதை இல்லையடி தோழி !

Ratha Krishnan kathal - 10

Ratha Krishnan kathal - 12

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.