(Reading time: 14 - 27 minutes)

சிறு வயதிலே அவளது தாய், தந்தையிடம் விவாகரத்து பெற்று மறுமணம் செய்துக்கொள்ள ஒற்றை பெண் பிள்ளையை தன்னால் முடிந்தவரை செல்லம் கொடுத்து வளர்த்திருந்தார் ஜார்ஜ். இத்தனைக்கும் இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள் ஜார்ஜ்க்கு சொந்தமான துணிக்கடையில் பணிபுரிந்த கமலாவை காதலிப்பதாய் கூற முதலில் மறுத்த ஜார்ஜ் இன் பெற்றோர் ஒரே மகனின் ஆசையை நிராகரிக்காமல் பின் அவர்களே திருமணம் செய்து வைத்தனர்.

 

திருமணமாகிய ஐந்து வருடத்திலே தன் சுயத்தை இழந்து இனியும் வாழ முடியாது என்றெண்ணிய கமலா நான்கு வயது நான்சி யை கணவனிடம் ஒப்படைத்துவிட்டு விவகாரத்துப்பெற்றுவிட்டார். ஜார்ஜை மறுமணம் செய்துக்கொள்ள சொன்ன பெற்றோரிடம் தன் மகள் மட்டுமே தனக்கு போதும் என்று மறுத்துவிட்டார் ஜார்ஜ். மூப்பின் காரணத்தால் நான்சி யின் தாத்தாவும், பாட்டியும் ஒருவர் பின் ஒருவராய் இறந்துவிட ஒற்றை ஆளாய் நான்சி யை வளர்த்தார் ஜார்ஜ். நான்கு தலைமுறை அமர்ந்து உண்ணும் படி பரம்பரை சொத்தே இருக்க தன் உழைப்பினால் இன்னும் இன்னும் பெருக்கிக்கொண்டிருந்தார் ஜார்ஜ்.

 

தாயை பற்றி எந்த விபரத்தையும் கூறாமல் தானே தந்தையாக தாயாக வளர்த்தார். அவள் செய்வது தான் சரி அவள் செய்த தவறை வீட்டில் வேலை செய்பவர்கள் யாரேனும் கண்டித்தால் அன்றே அவர்களது வேலை பறிபோய்விடும். பணத்திமிரும், தந்தையின் துணையும் இருக்க அவள் நினைத்ததை தான் செய்வாள். நான்சிக்கு ஒரு பொருள் வேண்டுமென்று கேட்டாள் எத்தனை செலவாயினும் அவளிடம் வந்து சேரும்.

அவளுடனே அவளது பிடிவாதமும் வளர்ந்தது.

 

மகளுக்கென தனியொரு மருத்துவமனையை அமைத்துத்தர ஜார்ஜ் விருப்பம் கொண்ட போதும் நந்தன் மருத்துவமனையில் பணிபுரிகிறேன் என்ற மகளின் ஆசைக்கே அவரும் இசைந்தார். நந்தகோபாலனுக்கு அவளது இந்த செயல் மிகவும் உறுத்தியது. ஜாரஜை பற்றி அவருமே அறிந்திருந்தார். தொழில் வட்டாரத்தில் அவர்களது sv சில்க் ஹௌஸிற்கு அதிக போட்டியாய் இருப்பது ஜார்ஜ் சில்க் ஹவுஸ் தான். அதனாலே எப்பொழுதும் நான்சி யிடம் ஒரு எச்சரிக்கை உணர்வுடனே நடந்துக்கொள்வார். ஆனால் நந்தனிடம் அவர் எதை பற்றியும் கூறியதில்லை.

 

பின் நினைவு வந்தவராய் வானதிக்கு பிரசவம் பார்த்த சங்கரிக்கு அழைக்க அவரோ இரவு நடந்த அனைத்தையும் கூறி முடித்தார். ஒரு உயிர் போனதில் அவருக்கும் வருத்தம் தான். செவிலியரின் துணையுடன் இருந்த வானதியின் மகவை பார்த்துவிட்டு தன் அலுவலில் மூழ்கினார்.

 

மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை, இதுவரை நடைபெற்ற ஆபரேஷன்களின் எண்ணிக்கை, வரவு செலவு என கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருந்தவர் மதிய உணவு உன்ண கூட மறந்துவிட்டார். அனைத்தையும் பார்த்து முடிக்க மாலை நெருங்கியது. அப்பொழுதும் நந்தன் மருத்துவமனை வராமல் இருக்க மீண்டும் அவனுக்கு முயற்சித்தார்.

 

இம்முறை அவரை ஏமாற்றாமல் காரில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த நந்தனின் அலைப்பேசி “அப்பா” என்ற பெயரை காட்டி ஒளிர்ந்துக்கொண்டிருந்தது. அனைத்தையும் சமாளிக்கவேண்டும் என்ற உறுதியுடன் அழைப்பை ஏற்றதும் “சாரி பா” என்றான். சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர் “எங்க இருக்க?” என்று கேட்க “பிரியாக்கு இன்னைக்கு லாஸ்ட் டே டூட்டி பா அவக்கூட தான் இருந்தேன். இப்போ ஹோச்பிடல்க்கு தான் பா வந்துட்டு இருக்கோம்” என்று பதிலளித்தான்.

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.