(Reading time: 7 - 14 minutes)

“ஹேய் காவி… இப்போ நீ என்ன சொன்ன? என்னோட சொத்தா?” என ப்ரியா புரியாமல் கேட்க “ஹையயோ சமாளி டி சமாளி” என தனக்கு தானே பேசிய காவியா “அது ஒன்னும் இல்ல மேடம் இப்போ யாராவது உனக்கு பரிசா ஒரு பொருளை கொடுத்தா அதை வாங்கிகிட்டவங்களுக்கு தான அது சொந்தம் ஆகும். அதை விட்டுட்டு அவங்ககிட்ட அது எவ்வளவுனு கேட்பியா” என ப்ரியாவிடமே எதிர்கேள்வி கேட்டாள். 

 

யோசித்த ப்ரியா “அது ஒரு பொருளா இருந்தா கேட்க மாட்டேன் ஆனா நீங்க இப்போ கொடுத்த பரிசு சாதாரணமானது இல்ல. என்னோட சம்பாத்தியத்துல இதை நான் தொடங்க நினைச்சேன் இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்னு எனக்கும் ஓரளவுக்கு தெரியும். அதுனால நான் என்ன சொல்ல வரேன்னா….” என தொடங்க 

 

அதில் குறுக்கிட்ட சந்தியாவோ “இரு இரு… ஒரு விசயத்தை சொல்ல மறந்துட்டேன். இந்த ட்ரஸ்ட் நம்ம மூனு பேரு மேலையும் தான் ரெஜிஸ்டர் ஆகி இருக்கு, ஆனா இதுக்கு பேரு மட்டும் எப்பவும் உன்னோடது தான் அதில நோ காம்ப்ரமைஸ். நீ இத பத்தி தான் எதுவோ பேச வரனு புரியுது. பட் இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம். கிளம்பு நேரம் ஆச்சு கொஞ்சமாவது தூங்கணும்ல அப்போ தான் நாளைக்கு ஃப்ரெஷா இருக்கும்” என மேலும் ப்ரியாவை கேள்வி கேட்கவிடாமல் விரட்டினர் இருவரும். 

 

“யப்பா தப்பிச்சோம்” என பெருமூச்சு விட்ட இருவரும் தங்கள் குடும்பத்தினரிடம் கூறி ப்ரியாவை அவளது வீட்டில் விட்டுவிட்டு பத்திரமாய் தத்தம் இல்லம் சென்றடைந்தனர். “தன்னறையில் இதுங்க ரெண்டும் எதையோ மறைக்க பார்க்குதுங்க போல” என யோசித்தபடியே சுகமாய் துயில் கொண்டாள் மீராவின் கிருஷ்ண சகியவள். 

 

காவியாவின் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் “டேய் நந்து இது அவங்க போட்ட பிளானா? இல்ல நீ சொல்லி அவங்க ரெண்டு பேரையும் இப்படி செய்ய வச்சியா?” என யாழ் கேட்க நந்தனோ, “ஐ செல்லக்குட்டி… கண்டுபிடிச்சுட்டியா…. உன் மூளை எப்படி இவ்வளவு ஷார்ப்பா இருக்கு” என சமாளித்தான். 

 

“டேய் டேய் ரொம்ப ஐஸ் வைக்காத ஏற்கனவே குளுருது இன்னும் நீ வைக்குற ஐஸ்ல எனக்கு சன்னியே வந்துடும் போல.. என்ன வேலை பண்ணனு மட்டும் சொல்லு” என யாழ் கேட்டாள். 

 

“ஆமா யாழ் நான் அவளுக்காக செஞ்சது தான். ஒருமுறை காலெஜ் ல அவளோட ஆசை என்னனு கேட்டப்போ அவ சொன்னது இதை தான். அப்போ ல இருந்து யோசிச்சுட்டு வந்தேன். இப்போ சரியான நேரம் அமைஞ்சது அவளும் படிப்பை முடிச்சுட்டா சரினு  அவ கையில சேர்த்துட்டேன். ஆனா இதுல அவளோட ஃப்ரெண்ட்ஸ்க்கும் பெரும் பங்கு இருக்கு.” ஒருவாறு நந்தன் கூறிமுடித்தான். 

 

“சரி சரி உன் விருப்பம். ஆனா பிராடு, 420 டா நீ… கடைசிவரைக்கும் லவ் பண்றனு எங்ககிட்ட சொல்லவே இல்லல… நாங்களா கண்டுபிடிச்சு கேட்டதும் ஒத்துக்குற, கொளசி வேற தூங்கிட்டா நாளைக்கு இருக்கு டி உனக்கு கச்சேரி” என செல்ல கோபம் கொண்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள். 

 

“நான் சொல்லனும்னு தான் இருந்தேன் யாழ் குட்டி அப்பறம் ஒருநாள் நேரிலே கூட்டிட்டு போய் காட்டலாம்னு விட்டுட்டேன்.” என கூறிய நந்தனிடம் “சரி சமாளிச்சதுலாம் போதும், முதல்ல அவங்களுக்கு ஒரு மொபைல் வாங்கிகொடு. எனக்கு தூக்கம் வருது நீயும் கனவு கண்டுட்டு இருக்காம போய் தூங்கு. ஹான் மறக்காம நாளைக்கு போய் அவங்க கிட்ட பேசிடு” என்றாள். 

 

“ஆமா நான் பேசுனா பேசிட்டு தான் வேற வேலை பார்ப்பா” என தனக்குள்ளே புலம்பியவன் “சரிங்க இளவரசி” என இடைவரை குனிந்து நின்றான். “போடா” என அவன் முதுகிலே ஒரு அடி போட்டவள் தன்னறைக்கு சென்றுவிட்டாள். நந்தனும் நாளைய தினத்தை பற்றிய நினைவுகளுடன் தன்னறையில் உறங்கியும் போனான். 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.