(Reading time: 7 - 14 minutes)

சிலருக்கு மகிழ்ச்சியான தருணங்களும், சிலருக்கு போராட்டங்களும் என காத்திருந்த அந்த நாளும் அழகாய் விடிந்தது. ப்ரியாவின் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல். வழக்கத்தை விட முன்கூட்டியே மருத்துவமனையை வந்தடைந்திருந்தாள். நந்தன் மருத்துவமனை வந்து சேர்ந்ததும் பிரியா அவனிடம்  காப்பகத்தை பற்றி கூற புதிதாய் கேட்பதை போலவே கேட்டு அவளுக்கு வாழ்த்தும் கூறினான். 

 

காப்பகத்தை பற்றி கூறிய பின் அவ்விடம் விட்டு கிளம்ப நினைத்து கதவின் அருகே சென்றவளை “கிருஷ்ணா” என்ற நந்தனின் குரல் தடுத்தது. அந்த இடத்திலே அவள் நிற்க நந்தனோ “ஈவ்னிங் கொஞ்சம்  வெளிய போகனும் வரமுடியுமா?” என கேட்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தான். 

 

“இல்ல நான் வரலை” என சொல்ல நினைத்தவள் “போய் தான் பாரேன் உனக்கும் ஒரு நாள் வெளி உலகத்தை பார்த்த மாதிரி இருக்கும். எத்தனை நாள் தான் இப்படி ஒரு கூட்டுக்குள்ளே அடைஞ்சிகிடப்ப” என மனம் வாதிட அவளது மூளையோ “வேண்டாம் ப்ரியா உனக்கு வெளியே போகனும்னா உன் ப்ரெண்ட்ஸ் கூட போ இவன் வேண்டாம். இவன்கூட போய் மறுபடியும் அவனோட லவ்வை சொன்னா என்ன பண்ணுவ நீ” என எதிர்வாதம் புரிந்தது. 

 

“லவ்லாம் சொல்ல மாட்டான் அப்படியே சொன்னா என்ன சொல்லட்டும். நீ ஸ்ட்ராங்கா நோ சொல்லிடு” என மீண்டும் மனம் வாதிட “உனக்கு அவனை பிடிக்கும் ப்ரியா அவன் லவ் சொன்னா நீ ஓகே சொல்லிட்டா என்ன நடக்கும் யோசி… அவங்க வீட்டை நினைச்சு பாரு உன்னை எப்படி அக்செப்ட் பண்ணிப்பாங்க” என மூளையும், மனமும் அவளிடம் ஒருசேர சண்டையிட்டது.  

 

("அடேய் மூளை பயலே கொஞ்ச நேரம் சும்மா இரு டா. எவ்வளவு நாள் தான் அவளும் தனியாவே இருப்பா. அப்பறம் கதையை படிக்குறவங்கலும் இந்த கதை தேறாதுனு நடைய கட்டிடபோறாங்க நானே அவளை ஒரு நல்லவனோட சேர்த்து வைக்க போராடிட்டு இருக்கேன் நீ வேற... உன்னை தான் முதல்ல சலவை செய்யனும் போல" அப்படினு ப்ரியாவோட மனசாட்சி அவ மூளை கிட்ட சண்டை போடுது பா நான் ஒன்னும் இப்படி பேச சொல்லல)  

 

கடைசியில் மனமே வென்றிட சரியென தலையாட்டியவள் அங்கிருந்து சென்றுவிட்டாள். பின்னர் அவர்களது பணி இருவரையும் சூழ்ந்துக்கொண்டது. நந்தன் ஆவலுடன் எதிர்பார்த்த மாலை வேளையும் நெருங்க ப்ரியாவை காண சென்றான். அவளோ வானதியின் மகன் கண்ணனிடம் சிரித்து பேசி விளையாடிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவளையே வைத்த கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன் “எப்பவும் உன் முகத்துல இந்த சிரிப்பு இருக்கனும் கிருஷ்ணா” என மனதில் உரு போட்டுக்கொண்டன். 

 

நேரமாக “கிருஷ்ணா போகலாமா?” என நந்தன் கேட்க “ஹான் ஒரு நிமிசம்” என்றவள் தன் கைப்பையையும் எடுத்துக்கொண்டு “போகலாம்” என அவனுடனே கிளம்பினாள். அந்த நாள் அவளுக்கு ஏற்படுத்த போகும் மாற்றத்தை அறியாமல்.

 

 

 

 

 

(மகிழ்ந்திரு)

 

 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.