(Reading time: 9 - 18 minutes)

"தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா

 

நீ நீங்கிடும் நேரம்

காற்றும் பெரும் பாரம்

உன் கைத்தொடும் நேரம்

தீ மீதிலும் ஈரம்

 

நீ நடக்கும் பொழுது

நிழல் தரையில் படாது

உன் நிழலை எனது உடல்

நழுவ விடாது

 

பேரழகின் மேலே ஒரு

துரும்பும் தொடாது

பிஞ்சு முகம் ஒரு நொடியும்

வாடக்கூடாது

 

உன்னை பார்த்திருப்பேன்

விழிகள் மூடாது

உன்னை தாண்டி

எதுவும் தெரியகூடாது

 

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா. "

 

என மீண்டும் தொடர்ந்த நந்தன்  பிரியாவை மேடையில் நிற்க வைத்திருந்தான்.

 

பாடலின் வரிகளா? இல்லை நந்தனின் குரலா? இல்லை அவனின் இத்தகைய செயலா? இல்லை அந்த  ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை அழகா? எதுவோ ஒன்று இல்லை இல்லை இவை அனைத்தும் நந்தனுக்கு பிரியாவின் மேல் உள்ள காதலை தெளிவாய் உணர்த்த அந்த நிமிடத்தை வெகுவாய் ரசித்து தான் மனபெட்டகத்தினுள் சேமித்துக் கொண்டாள் பிரியா.

 

பாடலை பாடி முடித்தவன் அவள் முன்னே ஒரு காலை மடக்கி அவளுக்காக வாங்கி வைத்திருந்த வைர மோதிரத்தை நீட்டி "ஐ லவ் யூ கிருஷ்ணா நான் உன்னை நேசிக்கிறேன்" என ஆங்கிலத்திலும் தமிழிலும் கூறி முடித்தான். பின் அவளது முகம் பார்த்து "நாம கல்யாணம் செய்து கிட்டு இந்த உலகத்திலே நம்மை மாதிரி  ஒரு தம்பதிகள்  இல்லைனு எல்லாரும் பேசணும்னு நினைக்கிறேன். நீ என்னோட மகாராணி கிருஷ்ணா உனக்காக எப்பவும் சேவை செய்ய நான் காத்திருக்கேன். உனக்கு என்னை திருமணம் செய்துக்க சம்மதமா?" என் கண்களில் மின்னிய ஆர்வத்துடன் நந்தன் கேட்க பிரியவிற்கோ அழுகை மட்டுமே வந்தது. அழுகையினூடே அவள் சுற்றியும் பார்க்க மேடைக்கு அருகில் நந்தனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சந்தியாவும், காவியாவும் கூட நின்றிருந்தனர். 

 

 

நான்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஆதி இதில் இருந்து எப்படி மீண்டு வருவான்? பிரியா நந்தனுக்கு கூறிய பதில் என்ன ? இவற்றிற்கான பதிலுடன் செவ்வாய் கிழமை மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

 

 

 

 

 

(மகிழ்ந்திரு)

 

 

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.