(Reading time: 3 - 5 minutes)

வலிமை திரைப்படத்தில் என்னை கவர்ந்தது! – பிந்து வினோத்

    

valimai trailer 1 social

   

தியேட்டர் சென்று படம் பார்ப்பது என் குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்த ஒரு பொழுதுபோக்கு.

  

“வலிமை” படம் வெளியானதும் போகலாமா வேண்டாமா என்றக் கேள்வி வந்தது. சனிக்கிழமை திடீரென்று முடிவு செய்து படம் பார்க்க சென்றோம்.

  

நான் ஆக்ஷன் பட பிரியை கிடையாது. பேமிலி, ரொமான்ஸ், மிஸ்டரி இது தான் என்னுடைய ஃபேவரைட்ஸ்.

  

படம் தொடங்கியதும் வில்லனுக்காக கொடுக்கப் பட்ட பில்ட்-அப்’களுக்கான பெரும்பாலான சீன்களை நான் பார்க்கவில்லை. (நம்ம ஹார்ட் எல்லாம் ரொம்ப சாஃப்ட் & வீக் 😊 ).

  

அந்த விதத்தில் சின்ன ஏமாற்றம் தான். பொதுவாக சமீபத்திய அஜித், விஜய் படங்கள் இரண்டுமே ஃபேமிலி ஃபிரென்ட்லி ஆக தான் இருக்கும். குழந்தைகளுடன் பார்த்தால் கூட அவர்களை டைவர்ட் செய்ய அவசியம் இருக்காது!

  

எப்படியோ, எல்லோரும் படத்தில் ஆழ்ந்திருக்க, நானும் அரை மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

  

இருந்தாலும் இரண்டாம் பகுதியில் வந்த ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது!

  

ஜித்தை வெறுப்பேத்துவதற்காக அவரை டீமோட் செய்து விட்டு, அதே பதவியை அவருடைய ஃபிரென்ட் ஹுமாவிற்கு தருவார்கள்.

  

அப்போது ஹூமா வருத்தப் படுவாங்க. அதற்கு அஜித் சொல்வார்,

  

“எதிரிங்க எப்போவுமே நம்மளை நோக்கி கல் எரிஞ்சுட்டு தான் இருப்பாங்க. அதை எல்லாம் தடுத்து பதில் சொல்லிட்டே இருந்தோம்னு வை, அதுக்கே மொத்த வாழ்க்கையும் போயிடும். தடுக்குறதுக்கு பதிலா அந்த கல்லை எல்லாம் கேட்ச் பிடிச்சு ஒரு கோட்டைக் கட்டி அதுக்கு மேல கால் மேல கால் போட்டு கம்பீரமா உட்கார்ந்து கீழே பார்த்தோம்னு வை, நம்மளை நோக்கி கல்லை எறிஞ்சவங்க கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்துட்டு இருப்பாங்க. நாம அழணும்னு தான் இதெல்லாம் பண்றாங்க. இதை எதிர்த்து ஜெயிக்க மன வலிமை முக்கியம்.”

  

H. வினோத் கலக்கிட்டார்! (அவர் தான் வசனமும் எழுதி இருக்கார்ன்னு நினைக்கிறேன்!)

  

சிம்பிள் சீன் அண்ட் வசனம் தான், ஆனால், என்னை யோசிக்க வைத்தது! இது நாம் நிறையப் பேர் சந்திக்கும் / சந்தித்திருக்கும் சங்கடமான uncomfortable சூழ்நிலை தான்! அதை எப்படி கையாள வேண்டும் என்று ஒரு ஐடியா கொடுத்தது இந்த டையலாக் 😊

  

அந்த ஒரு சீன், ஒரு டையலாக் எனக்கு நல்ல மூவி எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்திருச்சு!

  

அதைத் தவிர, பைக் சீன்ஸ், ஸ்டன்ட் எல்லாம் சூப்பர்ப்ன்னு சொல்லலாம்.

  

ஆனாலும், 'பூவெல்லாம் உன் வாசம்' போல அஜித் படம் வருமான்னு இப்போதும் எனக்கு ஒரு ஆசை இருக்க தான் செய்யுது!

  

அந்த விதத்தில், ஐ மிஸ் லேட் 90ஸ் & எர்லி 2000ஸ் ☹ .

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

One comment

  • that's a gud one :-) nice touch 😍. enakku cinematography pidichirunthathu 👌 chasing scenes, bike stunts elam chanceless, well done. theater la parkura experience thani.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.