(Reading time: 8 - 16 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

பெண்களுக்கு என்று பிரத்யேசமாக விதிக்கப்பட்ட ஸ்திரீ தர்மம். இதன் பெயரில் இதன் நிழலில் எண்ணற்ற கொடுமைகள் பெண்களை எதிர் கொள்கின்றன.

  

பாலு இப்போது நன்றாக விழித்துக் கொண்டான். அவன் சாப்பிட்டு அரையோ முக்கால் மணியோ ஆகியிருந்தாலும் "பாக்டரி" க்குக் கிளம்புமுன் சூடாகக் காப்பி சாப்பிட

  

வேண்டும்.

  

பூரணி பொன் நிறத்தில் நுரை தளும்ப காப்பியை ஆற் றியபடி. முத்து முத்தாக வியர்க்கும் வியர்வை நெற்றியுடன் அவனிடம் காப்பி தரும்போது அவன் அவள் அழகில் லயித்துப் போவான். லேசாக 'சென்ட்" கமழும் கை குட்டையால் வியர்வையை ஒற்றி விடுவான். கன்னத்தைக் கிள்ளுவான். இன்னும் இத்யாதி இத்யாதி.

  

இன்று பூரணி கண்களில் கண்ணீர் பெருக உட்கார்ந்திருந்தாள்.

  

பாலு எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். உடுத்திக்கொண்டான்

  

"காப்பி டியர் "

  

"காண்ட்டீன்லே சாப்பிடுங்கோ. எனக்கு உடம்பு சரியில்லே "

  

"சிநேகிதியோட பேசிண்டிருக்கச்சே நன்னாத்தானே இருந்தே. கமான்! நீ போடற காப்பிதான் வேணும்”

  

"என்னாலே முடியாது முடியாது இதென்ன நொள்ளை அதிகாரம்? பொம்மனாட்டினா புருஷன் அதிகாரம் பண்ணித்தான் தீரணுமா? ”

  

"காப்பி கேட்டால் அதிகாரமா? ப்ச்... உனக்கு 'மூட் அவுட் நீயும் உன் சிநேகிதியும் பேசின ரகசியம் எனக்கும் கேட்டுது, பட்டப்பா ஈஸ் நாட் பிட் இனப்”

  

''ஐயோ, ஐயோ! இரைஞ்சு பேசாதீங்கோ. நர்மதா வந்து தொலையப்போறா...பாவம்,"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.