கேட்டு வாங்கிக் கொள்வார்கள் போல் இருக்கிறது' என்று ராதா நினைத்துக் கொண்டாள். பேசாமல் நிற்கும் மனைவியைப் பார்த்தான் மூர்த்தி. பரிவோடு அவள் அருகில் வந்து நின்று, 'ராதா! எனக்கு ஆபீசில் ஒரு தொல்லை ஏற்பட்டிருக்கிறது. வெளியூர் போய் வரும் போது பீஸ் கணக்குகளில் பிசகு நேர்ந்து விட்டது. அதைச் சரிக்கட்டுவதற்குப் பணம் வேண்டும்..." என்று கேட்டான்.
”அண்ணாவைக் கேட்கச் சொல்கிறீர்களா? அது மட்டும் என்னால் முடியாது. தேவையானால் என் நகைகளில் ஏதாவது கொடுக்கிறேன்..."
“உன்னுடைய நகையா?" மூர்த்தி சிறிது நேரம் யோசிப்பவன் போல் தயங்கினான். வேதனை படர்ந்திருக்கும் அவன் முகத்தைப் பார்த்த ராதா தன்னுடைய பீரோவைத் திறந்து முத்தும் செம்பும் பதித்த மாலை ஒன்றை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.
”தயவு செய்து இதைச் சென்னையில் விற்காதீர்கள்! அடுத்த தடவை நீங்கள் வெளியூர் போகும்போது விற்று விடுங்கள்" என்றாள்.
மூர்த்தி மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டான். பெண்களுக்கே உரித்தான பலஹீனம் - அதாவது கணவன் ஆபத்தில் இருக்கிறான் என்பதை அறிந்ததும் ஏற்படும் தாராளம் படித்த பெண்ணாகிய ராதாவுக்கும் உண்டாயிற்று . நாலு பேர்களுக்கு வெளியில் தெரியாமல் தன்னுடைய குற்றங்களை மறைத்து விட வேண்டும் என்கிற ஆவலால் உந்தப்பட்டு குற்றங்களை மேலும் செய்யத் தூண்டுவதும் ஒரு பலஹீனம் தான்.
கணவன் உண்மையிலேயே ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறானா? அந்தத் தவறு ஏதேச்சையாசு ஏற்பட்டதா? வேண்டுமென்று செய்ததா? இவ்வாறெல்லாம் பெண்கள் யோசிக்க மாட்டார்கள். உன் கணவன் ’அயோக்கியன்' என்று யாராவது சொன்னாலும் பொறுக்க மாட்டார்கள், ஏதோ ஒரு பத்தி, உயர்ந்த பண்பு அவர்களை ஆட்கொண்டி-ருப்பதால்தான் அவர்கள் இவ்வளவு தியாகிகளாக இருக்க வேண்டும்.
ஒரு தடவை நகையைக் கொடுத்துப் பழக்கம் ஏற்படுத்திய பிறகு அதே வாடிக்கையாகப் போய்விட்டது. அவளைக் கேட்காமலேயே நகைகளை எடுத்துப் போனான் மூர்த்தி. பண்டிகை பருவங்களில் எங்கே போனாலும் அவள் முன்பே அதிகமாக நகை போட்டுக் கொள்ள