(Reading time: 5 - 10 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

புயல் மழை. நாலு) வருஷத்துக்கு முன்னாடி நல்லா ஞாபகம் இருக்கு. அவனுக்கு என்னோட லுங்கிய கொடுத்தேன். மறுநாளு வீட்டுக்காரி 'எப்படிய்யா, அவன் கட்டின லுங்கியை நான் துவைக்கிறது? ஒன் லுங்கிய அந்த முடிச்சுமாறி கட்டுவதப் பார்க்கும் போது எனக்குக் கூச்சமா இருந்தது. பேசாம லாண்டரியில போடு' இப்படிச் சொன்ன என்னோட பத்தினியை அண்ணாத்த மயக்கிட்டானே. இஸ்திரிக்குப் போடுன்னு சொன்னவள் என் நெஞ்ச இஸ்திரி போட்டுட்டாளே. யாருக்கிட்ட சொல்லுவேன்? பெண்டாட்டி அடங்காப்பிடாரின்னு சொல்லலாம். வாயாடின்னு சொல்லலாம். அடுத்தவன்கிட்ட போகிறவள்னு எப்படிச் சொல்லுறது? நான் படுத்த கட்டிலிலேயே இன்னொருத்தன் படுக்கான்னு எப்படிச் சொல்லுறது? ' அவரு என்கிட்டத்தான் சொல்லுவாரு... ஒன்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லே. புரிஞ்சா புரிஞ்சுக்கோ, புரியாட்டி இருந்துக்கோ'ன்னு ரப்பேரி முண்ட எப்படிச் சொல்லிட்டா! அண்ணாத்த வீட்ல டெலிபோன் வச்சப்பவே தெரியும், அது அவன், அவளுக்குப் போட்ட தாலிண்ணு. நானு இருக்கப்போகூட, அந்த முண்ட முகத்த டெலிபோனுல மறைச்சிட்டு ரகசியமா பேசினது இப்போதுதான் புரியுது. கலக்கலில சிக்கி கலங்கிட்டேனே. அண்ணாத்தேகிட்ட சாராயத்துக்கு உதவிக்குப் போனா, அவன் என்னோட சம்சாரத்துக்கே உதவியா வந்துட்டானே. அய்யோ, அய்யய்யோ.''

   

முன்பெல்லாம் இப்படிப்பட்ட சந்தேகம் வரும்போது, அதை. சாராயத்தால் கழுவிய துரைக்கு, இப்போது மனைவி வெளிப்படையாகவே சொல்லி விட்டது உள்ளத்தை வேர்க்க வைத்தது. வீடுகூட அவள் பேரில்தான் இருக்கு. இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைக்கப் போன துரை, கருகிய சிகரெட் கையில் இருப்பதைப் பார்த்துவிட்டு, அதை விரல் நுனியிலேயே கசக்கினான்.

   

சரோசா, அவன் கையை எட்டிப் பிடித்தாள்.

   

“ஒன்ன எப்படியோ நினைச்சேன். கட்சில என் கையில விலங்கு போட்டுப் பார்க்கிறதுக்கு ஆசைப்பட்டுட்டியே பாவி, படுபாவி."

   

துரை, அவளை அரைக்கண் பார்வை போட்டுப் பார்த்தான். பிறகு அவள் கைகளில் முகத்தைப்போட்டு ஏங்கி ஏங்கி அழுதான். அழுத கண்களை அவள் புறங்கையாலேயே துடைத்துக் கொண்டு அவளைப் பார்க்காமலேயே பேசினான் :

   

“எய்தவன் எங்கேயோ, நானு அம்புவட இல்லமே. அந்த அடங்காப்பிடாரி காட்டேரி நாய்தான், 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.