"இதோ இருக்கு சார் என் பட்டா."
இது பட்டாவா, பட்டமான்னு தாசில்தார் தான் தீர்மானிக்கணும். அவர் சரிப்படாட்டால், கோர்ட்டுக்குப் போங்க."
"அப்போ போலீஸ் எதுக்கு சார்?"
“என்னையா நீ பெரிய மனிதன்னு மரியாதை கொடுத்தால் சின்னத்தனமா நடந்துக்கிடுறீயே. நிலத்தை வாங்கும் போது போலீஸ்ல கேட்டா வாங்குன? முதலில் இடத்தைக் காலி பண்ணுய்யா.”
இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டறியாத அந்த ஓய்வு பெற்ற மத்திய அதிகாரி, அப்படியே அசைவற்று நின்றார். இன்ஸ்பெக்டர் அடித்தாலும் அடித்து விடுவாரோ என்று அந்த அம்மா பயந்து போனாள். கணவனை இழுத்துக் கொண்டு படிப்படியாய் இறங்கிய போது, இன்ஸ்பெக்டர் விரலைச் சுண்டி அவர்களை நிற்க வைத்தார். சிவகாசி வெடிபோல் வெடித்தார் :
“அந்த பிளாட் பக்கம் கலாட்டா கிலாட்டா செய்யாதிங்க. அப்புறம் நாங்க எங்க கடமையைச் செய்ய வேண்டியது இருக்கும். போலீசுக்கு ஒரு உடைமை யாருக்குச் சொந்தம் என்பது முக்கியம் இல்ல; யாருக்கிட்ட அந்தப் பொருள் இருக்கோ அவங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறதுதான் முக்கியம். நான் சொல்லுறது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கேன்; நீங்க போகலாம்."
இன்ஸ்பெக்டர், அவர்களைப் போகவிடுவதே, தான் செய்யும் மிகப்பெரிய சேவை என்பது போல் பெருமிதமாய் நின்றார். அந்த பழுதடைந்த ஆபீஸர்பித்துப் பிடித்து, செத்துப் பிழைத்தவர் போல் மனைவியோடு வெறுமையாக நடந்தார். மேலே கைகளை நீட்டி "கடவுளே கடவுளே” என்றார். இதற்குள் எல் அன்டு ஓ குற்றம் சாட்டும் குரலில் பேசினார்:
“ஆனாலும் நம்ம சாராய சக்ரவர்த்தி ரொம்பத்தான் ஆட்டம் போடுறான். கோவில் நிலத்தை மடக்கினான்; பேசாமல் இருந்ததோம். புறம்போக்கு நிலத்தை முடக்கினான்; சும்மா இருந்தோம் மாதச் சம்பளக்காரங்க குருவி சேர்க்கிறது மாதிரி சேர்த்த பணத்தில் வாங்குற நிலத்தை