விளைச்சலுக்குப் புகழ் பெற்ற அகஸ்திய நதி யின் நல்ல கரைப் பகுதிகளில் இருந்தன. மடத்தின் பிரதானமான சொத்துக்களாகிய நல்ல நிலங்கள், தோப்புத் துரவுகள், இரண்டு மூன்று பசு மடங்கள், விவாகமண்டபம், வீடுகள், காலி மனைகள் எல்லாம் அந்த ஊரில்தான் இருந்தன.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால்வரை மடத்தின் வைதிக விஷ்யங்களுக்கு மட்டுமே சர்மா பொறுப்பேற்றிருந்தார். நிலம் குத்தகை வருமானம், வீடு விவாக மண்டப வாடகைகள், வரவு செலவு போன்ற லெளகீக ஏற்பாடுகளைச் சீமாவையர்தான் கவனித்து வந்தார். குத்தகைப் பணவரவு செலவுகளில் ஊழலும், கையாடலும் பெருகியபின், நிறையப் புகார் கள் வரவே பின்னால் அந்தப் பொறுப்பும் சர்மா வுக்கே வந்து சேர்ந்தது. •
சீமாவையரை விரோதித்துக் கொள்ளச் சர்மா பயந் தார். ஆனாலும் வேறு வழி இல்லை. சுவாமிகளே சர்மாவை அழைத்து, ஊர் நன்மைக்காகவும், பூரீ மடத் தின் நன்மைக்காகவும் அந்தப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்றார். சர்மாவால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை.
அதற்குப் பின்னால் சர்மாவும் சீமாவையரும் பேசிக் கொள்வது, ஒருவருக்கொருவர் சேஷமலாபம் விசாரித்துக் கொள்வது எல்லாம் பழையபடி தொடர்ந்தாலும் சர்மா வின் மேல் சீமாவையர் உள்ளூற ஒரு வன்மம் வைத்துக் கொண்டு காத்திருந்தார். உள்ளே பகையொடுங்கிய புற மலர்ச்சிகளாலும் புறச் சிரிப்புக்களாலும் அவர் சர்மா விடம் ஏமாற்றிப் போலியாகப் பழகி வந்தார்.
ஒரு யோக்கியன் போனால் போகிறதென்று அயோக்கினைச் சகித்துக் கொள்ளவும் மன்னிக்கவும் கூடத் தயாராக இருப்பான். ஆனால் கடைந்தெடுத்த ஒர் அயோக்கியன் ஒரு போதும் தன்னருகிலுள்ள யோக் கியனைச் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ தயாராக இருக்கமாட்டான். காரணம் யோக்கியதை உள்ளவனை அளவு கோலாகக் கொண்டுதான் எல்லா இடங்களிலும் எது அயோக்கித்தனம் என்பதே கண்டு பிடிக்கப் படுகிறது. ஆகவே அயோக்கியத்தனத்தைக் கண்டு பிடிக்க உதவி செய்கிற ஒவ்வொரு யோக்கியனும் அந்த விதத்தில் அயோக்கியர்களுக்கு இடையூறு ஆகிறான். சீமாவை யருக்கு அப்படி ஒர் இடையூறாகச் சங்கர மங்கலத்தில் வாய்த்திருந்தார் விசி வேசுவர சர்மா. யாரையும் எதிரி யாகப் பாவிக்காத சாத்துவீக குணம் இயல்பாகவே இருந்ததால் சர்மா- சீமாவையரிடம் கூட