மடம் மேனேஜர் . சுவாமிகளின் ஆக்ஞைப்படி அக்கடிதம் எழுதப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதங்களை வீட்டுக்குள் கொண்டுபோய் வைத்து விட்டுச் சந்தியா வந்தனத்துக்காக ஆற்றங்கரைக்குப் புறப்பட்டார் சர்மா. ஆறறங்கரையில் சந்தியா வந்தன ஜபதபங்களை முடித்துக்கொண்டு வீடு திரும்புகிற வழியில்தான் இறைமுடிமணியின் விற குக் க ைட இருந்தது.
கடையில் கூட்டமில்லை. அநேகமாகக் 556) -- மூடுகிற நேரமாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. இறைமுடிமணியின் இயக்க சம்பந்தமான ஆட்கள் சிலர் சுற்றி உட்கார்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கடை வாசலில் விசுவேசுவர சர்மாவைப் பார்த்ததும் இறைமுடிமணியே எழுந்திருந்து எதிர் கொண்டு வந்து விட்டார்.
“என்ன சமாசாரம் விசுவேசுவரன் ? சொல்லியனுப்பி யிருந்தா நானே வந்திருப்பேனே ? நீ ஏன் இங்கே சிரமப் பட்டு அலையனும் ?”
"இதுக்குன்னு வரலே தேசிகாமணி 1 ஆத்தங் கரையி லேருந்து திரும்பிப் போற வழியிலே வந்தேன். நீ வாட கைக்குக் கேட்டியே அந்த வடக்குத்தெரு கா லி மனை. அது விஷயமா மடத்திலேருந்து பதில் வந்துடுத்து."
'என்னான்னு வந்திருக்கு?"
"ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டி யாரா யிருந்தாலும் நானாப் பார்த்து வாடகைக்கு விட்டுக்க லாம்னு எழுதியிருக்கா. ”
"நான் ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டீன்னு நீ நம்புநியா இல்லையா ?”
- இறைமுடி மணி சிரித்தபடியே இப்படிக் கேட்டார்.
"நம்பிக்கைக்கென்ன கொறைச்சல் ? நாளைக்கி வாயேன் பேசி முடிவு பண்ணிப்போம்" என்று சொல்லிய படியே புறப்பட இருந்த சர்மாவிடம் “சரி நாளைக்கி வரேன். முடிவு பண்ணிக்கலாம்.