(Reading time: 2 - 4 minutes)

கருத்துக் கதைகள் – 28. வெற்றி - Chillzee Team

Judo

விபத்தில் தன் இடது கையை இழந்த ஒரு சிறுவனுக்கு ஜூடோ கற்றுக் கொள்ள ஆசை ஏற்பட்டது. எனவே ஒரு வயதான ஜூடோ மாஸ்டரின் வகுப்பில் சென்று சேர்ந்தான்.

துருதுரு என்று இருக்கும் சிறுவன் என்பதால் எளிதாக ஜூடோ விஷயங்களை கிரகித்துக் கொண்டான்.

ஆனால் மூன்று மாதம் முடிந்த போது ஜூடோவில் ஒரே ஒரு ‘அடியை’ மட்டுமே நன்கு செய்ய கற்றுக் கொண்டிருந்தான்.

தன்னுடைய மாஸ்டரிடம் இன்னும் பல விஷயங்களை தனக்கு சொல்லி தருமாறு கெஞ்சினான் ஆனால் அவர், இதுவே உனக்கு போதும் என்று சொல்லி அவனை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் ஜூடோ போட்டி ஒன்று அறிவித்தார்கள். சிறுவனுக்கு போட்டியில் பங்கு பெற ஆசை இருந்தாலும் ஒரு கை இல்லாததை நினைத்து அதில் பங்கேற்க தயக்கமாக இருந்தது.

ஆனால் அவனின் மாஸ்டர் அவன் கட்டாயம் அந்த போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி அவனை அதில் கலந்துக் கொள்ள வைத்தார்.

ஒவ்வொரு சுற்றாக ஜெயித்து இறுதி சுற்றுக்கும் வந்து விட்டான் நம் சிறுவன். இறுதி போட்டியில் அவனுடன் சண்டையிட்டவர் நல்ல அனுபவசாலி & திறமைசாலி. ஆனாலும் ஒரு கட்டத்தில் சிறுவன் அவரை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட்டான்.

சந்தோஷத்தில் துள்ளி குதித்தாலும், தன் மனதில் இருந்த கேள்வியை மாஸ்டரிடம் மறைக்காமல் கேட்டான்.

“ஒரே ஒரு அடி மட்டுமே நன்றாக செய்ய தெரிந்த நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் மாஸ்டர்?”

அவனை தட்டி கொடுத்த மாஸ்டர்,

“உனக்கு தெரிந்த அந்த ஒரே ஒரு அடி, சாதாரணமானது அல்ல. மிகவும் கடினமானது. அந்த அடியில் இருந்து தற்காத்துக் கொள்ள எதிராளிக்கு உன் இடது கையை பிடிப்பது ஒன்றை தவிர வேறு வழியில்லை” என்றார்.

இடது கை இல்லாத அவனின் குறையை வெற்றி பெற காரணமாக மாற்றிய மாஸ்டரை பெருமை பொங்க பார்த்தான் அந்த சிறுவன்.

 

ம் ஒவ்வொருவருக்கும் weakness / insecurities இருக்க தான் செய்கிறது. அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்காமல், சாமர்த்தியமாக திட்டமிட்டால் நம் பலவீனத்தை கூட நம்முடைய பலமாக மாற்றி விடலாம்.

Story # 27 - Pimbam

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.