(Reading time: 10 - 19 minutes)

"அதெல்லாம் ஒண்ணுமில்லைக்கா ....இன்னிக்கு வேலை ரொம்ப அதிகம் இல்லே அதான்" என்றாள் கீத்திகா .

"நா அதை சொல்லலை கீத்து, நீ எப்பவுமே கலகலப்பான பொண்ணு. இப்போ உனக்கு என்ன இருபத்தி ஏழு வயசிருக்குமா? ஆனா நானும் வந்ததிலிருந்து பாக்கறேன், உன் முகத்தில்  ஒரு உற்சாகமே இல்லையே? நா வம்பளக்க கேக்கலை. உண்மையிலேயே உனக்கு உதவி பண்ணத்தான் கேக்கறேன், என்னாச்சு " என்றாள்.

"ஹீம் ஒண்ணா ரெண்டா சொல்றதுக்கு. எல்லாம் இவரைப் பத்திதான், இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் இருப்பாங்களோ? கல்யாணம் ஆன புதுசில் எம்மேல எவ்வளோ பாசமா இருந்தார், இப்போ எரிஞ்சு எரிஞ்சு விழறார், அப்போ நடந்துக்கிட்டதெல்லாம் வெறும் நடிப்பா , எனக்கு எதுவுமே புடிக்கலை, அதான் ஒரே வெறுப்பா இருக்கு" என்றாள் விரக்தியுடன்.

அவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்த ராகா " கீத்து, சொல்றேன்னு தப்பா  நெனைச்சுக்காதே.  நீ கல்யாணம் ஆன புதுசுல முல்லைக் கொடி மாதிரி இருந்தே. இப்போ மரம் மாதிரி ஆகிட்டே. ஆனால் அவரோ இன்னும் கல்யாணத்தன்னிக்கு பாத்த மாதிரிதான் இருக்கார்" என்றாள்

“அதுக்கு என்னக்கா பண்றது? சிசேரியன் ஆனதால் என் உடம்பு எடை கூடிடுச்சு. அதுக்காக அவரு என்னையே வெறுத்திடுவாரா?" என்றாள் கோபத்துடன்.

"அது அப்படி இல்லைம்மா , வெறுப்புன்னு சொல்ல முடியாது , ஒரு அக்கறையின்மைன்னு வெச்சுக்கலாம். உனக்கே உன்  மேல அக்கறை இல்லாதப்போ மத்தவங்களை பத்தி குறை சொல்ல என்ன இருக்கு" என்றாள் ராகா

"என்னக்கா சொல்றே"

"ஆமாம் கீதா. சிசேரியனால மட்டும் யாருக்கும் உடம்பு எடை கூடறதில்லை. அப்படியே கூடினாலும் முறையான உடற்பயிச்சி மற்றும் டயட்டினால் எடையை குறைக்கலாம். நீ உடற்பயிற்சி செய்யறதேயில்லை . எதுவும் டயத்துக்கு சாப்பிடறதில்லை , ஒழுங்காவும் சாப்பிடறதில்லை. நேத்து செய்து மீந்து போனதையெல்லாம் சுடவைத்து சாப்பிட்டால் இப்படித்தான் வெய்ட் போடும்.  புருஷனும் பிள்ளையும் மீதி வைப்பதை போட்டுக்கொள்ளும் குப்பைத் தொட்டியா நீ? உன் மேலே உனக்கே அக்கறையில்லையே அப்புறம் மத்தவங்களுக்கு எப்படியிருக்கும்? “

“ இனிமே எதையும் அளவோட செய். மீதியை  யாருக்காவது குடு. தேவையில்லாததை நீ சாப்பிடாதே. நல்ல டயட்டில் இரு. வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய். முதல்ல உன்னையே நீ நேசி. கூடிய சீக்கிரமே உன் கணவரின் நேசமும் திரும்ப கிடைக்கும்"

“இன்னிக்கி தேதிக்கு திருமணமாகி குழந்தை பெற்ற பெண்கள் கூட கல்லூரி மாணவி போல தோற்றம் அளிக்கிறாங்க. நீ முதல்ல உன்னை திருத்திக்கோ. எல்லாமே சரியாயிடும்" என்றபடி விடை பெற்ற ராகாவின் கொடி போன்ற உடல் அமைப்பை பார்த்த கீத்திகாவுக்கு அவள் சொன்னது போல முயற்சி செய்து பார்க்கத் தோன்றியது.

மறுநாளே சில உடற்பயிற்சி புத்தகங்களை வாங்கி வந்தாள்.அதிலுள்ள படி செய்ய ஆரம்பித்தாள்.   முதல் சில நாட்கள் கஷ்டமாகத்தான் இருந்தது. பழக்கமில்லாத காரணத்தால் உடற்பயிச்சி மிகுந்த அசதியைக் கொடுத்தது. சரியாக வேலை செய்ய முடியவில்லை. ஆனால் உலக அதிசயமாக பிரபாகரின் கத்தல் வெகுவாக குறைந்திருந்தது. சில வேலைகளை அவன்  தானே  செய்து  கொண்டது  அவளுக்கு  மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.  மீந்து போன உணவு வகையறாக்களை அவள் இப்போது தொடுவதே இல்லை .

ஒரு மாதத்திலேயே இரண்டு கிலோ குறைய , தொடர்ந்து நம்பிக்கையுடன் முயன்றாள். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின் பழையபடி கொடி போல இல்லை என்றாலும் லேசாக பூசினாற்போன்ற உடலமைப்பு கிடைத்தது. இடையிடையே பிரபாவின் பழைய  அழைப்பான  "கீத்து"  வும்  கிடைத்தது .

அன்று அலுவலக நண்பர் ஒருவரின் வீட்டு ரிசப்ஷனுக்கு அவளை அழைத்துச் சென்ற பிரபாகர் எல்லோரிடமும் அவளை பெருமையுடன் அறிமுகப் படுத்தி வைத்தான். முன்பெல்லாம் அனார்கலி மாடல் சுடிதாரை ஏக்கத்துடன் பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளும் அவள் இப்போதோ அழகான மயில் வண்ணத்தில் அனார்கலி சுடிதார் அணிந்து அவனுடன் சென்றாள். எல்லோரின் வியந்த பார்வையும் அவளுக்கு மகிழ்ச்சியை தந்தன. அதிலும் ஒரு வயதான அம்மாள் "என்ன பிரபா , பொண்ணு காலேஜ் முடிக்கறதுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிட்டியா என்ன? ரொம்ப சின்னவளா தெரியறாளே?” என்று கேட்டதும் அவளுக்கு தான் இத்தனை நாள் கஷ்ட்டப்பட்டது வீண் போகவில்லை என்று புரிந்தது. எல்லாவற்றையும் விட பிரபாகர் அவளை தன் கைப் பிடியிலேயே வைத்திருந்தது அவளுக்கு வியப்புடன் மகிழ்வையும் தந்தது.

ஆனால் ஆறு மாதத்துக்கு முன் தன் பக்கத்தில்  கூட  நிற்க  மறுத்தவன் இப்போது சுற்றி சுற்றி வருவதென்றால் அவனும் அவளது புறத் தோற்றத்துக்கு தானே மதிப்பளிப்பதாக அர்த்தம்? வீடு திரும்பியது முதல் வேலையாக சண்டையை தொடங்கினாள். ஆனால் அவன் வேறு   சொன்னான்  .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.