(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - கடற்கரை – ஆர்த்தி.R

wallet_sand

சூர்ய பகவான் தன் வேலையை வெகு சிறப்பாக செய்து கொண்டு இருக்கும் கோடை காலம் அது.

சண்டே குழந்தைகளுக்கோ குதூகலிக்கும் நாள்.பெற்றோர்களுக்கோ அது ஒரு திண்டாட்டமான நாள் ..வாரம் முழுவதும் வேலை செய்து விட்டு அப்பாடா என தூங்கி தூங்கி எழும் கூட்டம் ஒரு புறம்....வாரம் முழுவதும் வீட்டிலேயே இருக்கும் பெரியவர்களும் குழந்தைகளும் ஐயா இன்று சண்டே வெளியே சுற்றலாம் என வெளியே செல்லத் துடிக்கும் கூட்டம் ஒரு புறம்..........  யார் என்ன செய்தால் என்ன என் கடன் வெளியே சுற்றுவதே என எல்லா நாளும் நண்பர்களுடன் சுற்றும் இளைஞர் கூட்டம் ஒரு புறம்.........எப்போதும் போல் எல்லாரும் காத்திருக்கும் சண்டே வந்தது .....அன்று பானுவின் வீட்டில் என்ன நடந்தது என பார்க்கலாம் வாங்க..........

பானு எழுந்திருடி ஏய் பானு எழுதிருடி என கத்தி எழுப்பி கொண்டு இருந்தாள் பானுவின் அக்கா தேவி ...போங்க அக்கா இதுக்குத்தான் நான் hostelayae இருக்கேன்னு சொன்னேன் ...சண்டே கூட தூங்க விடமாட்டேன்னு காலங்காத்தேலே ஏன் படுத்ரிங்க என கத்திக்கொண்டே மீண்டும் தூங்க ஆரம்பித்தால் பானு ...........

பானு எல்லாரையும் போல் engineering முடித்து விட்டு சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.... வேலை செய்யும் இடமும் தமக்கை இருக்கும் இடமும் தூரம் அதிகம் என்பதால் hostelil தங்கி உள்ளால்..விடுமுறை விட்டால் போதும் இங்கு ஓடி வந்து விடுவாள்..என்னதான் கொஞ்சம் பிகு செய்தாலும் அவளுக்கும் விடுமுறை அக்கா வீட்டில் இருக்கத்தான் பிடிக்கும்..........

ஏய் நீ சரிப்பட்டு வரமாட்ட இரு அவள அனுப்றேன் என சொல்லிவிட்டு தேவி செல்ல ஒரு அழகான கை சித்தி எழுந்துரு சித்தி எழுந்துரு என ஒரு வாண்டு எழுப்ப இவ விடமாட்ட என முன் அனுபமுள்ள பானு எழுந்தேன் கண்ணா என வாண்டை அள்ளி அணைத்துக் கொண்டாள்.இல்லை என்றால் யார் அடி கடி எல்லாம் வாங்க!!!!

அந்த வாண்டின் பெயர் மஹா 3 வயது ..அவள் போடும் ஆட்டதிற்க்கு அளவே இல்லை ...விடுமுறைக்கு அவளுடன் விளையாடவே கிளம்பி வருவாள் பானு...............இரண்டு பேரும் சேர்ந்தால் போதும் வீடே இரண்டு படும்.

அன்றும் அதுபோல் இருவரும் அக்காவின் முன் அப்பாவியாக நின்றார்கள். பானு என்ன ரெண்டுபேரும் அமைதியா நிக்கிறிங்க என கேட்க அக்கா சாயந்திரம் பீச் போலாமா எனக் கேட்டாள் பானு . அதான பாத்தேன் .......சும்மா இல்லாம அமைதியா இருக்க மாட்டிங்களேன்னு ...........சண்டே வந்தா போதும் எங்கயாது போகணும் உங்க ரெண்டு பேருக்கும் என  திட்டிக்கொண்டே k சொல்ல அய்யா ஜாலி பீச் போக போறோம் எனக் கத்திக்கொண்டே மஹா ஓட அவளுடன் பானுவும் ஓடினாள்......................

பானுவுக்கு சின்ன வயதிலிருந்தே கடற்கரை என்றால் மிகவும் பிடிக்கும் ...அவள் ஊரில் பீச் இல்லை ...எப்போதும் விடுமுறைக்கு சென்னை வரும்போது எல்லாம் பீச் செல்லாமல் சென்றது இல்லை........

திருவான்மியூர் பீச் செல்லலாம் என பிளான் செய்து கிளம்பினர் ...பேருந்தில் சென்றால் நேரம் எடுக்கும் என டாக்ஸி புக் செய்து போலாம் என பானு சொல்ல அது ஒரு முறைப்புடன் k சொல்லப்பட்டது....

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கடற்கரை எங்கும் மக்கள் கூட்டம் .. அலையை பார்க்கும் போது எல்லாம் மனதில் எவ்வளவு கோபம் பயம் போராட்டம் இருப்பினும் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும் சக்தி உள்ள கடலன்னை...

மஹா மஹா ஓடாத நில்லு என கத்திக்கொண்டே பானு துரத்த தேவி ஏய் பாத்து விளையாடுங்க  என கத்தினாள் ...... இருவரும் ஜாலியாக எல்லா இடமும் ஓடினர்..

சித்தி சித்தி அதுல போகணும் என ராட்டினத்தை காட்ட போலாம் இருடா என ஏற்றி விட்டால் பானு.....அதில் ஒரு சுற்று சுற்றிவிட்டு சித்தி எனக்கு குதிரைல போகணும் என அதிலும் சுற்றினால் வாண்டு...அங்கு இருந்த எல்லாவற்றிலும் ஒரு சுற்று சுற்றிவிட்டு இருவரும் பசிக்குது எங்களுக்கு என தேவியிடம் கூறினர்....

பக்கத்தில் இருந்த பஜ்ஜி ,சோளம் , கடலை,ஐஸ்கிரீம் என எல்லாவற்றையும் வாங்கி சாப்பிட்டனர் ....எல்லாம் நன்றாகத் தான் சென்றது அது வரை..........

பானு என்கிட்ட சில்லறை இல்ல ..கார்க்கு கொடுக்க உன்கிட்ட இருக்கா எனக் கேட்க இருங்க நா பாக்கறேன். பையில் உள்ள பர்சை தேட அக்கா அக்கா பர்ஸ் என் பையில் இல்லை ..உங்க பையில் இருக்கானு பாருங்க எனக் கத்தினாள் பானு...

ஏய் என்னடி சொல்ற உன் பர்ஸ் உன் கையில தான வெச்சுருந்த எங்க போட்ட என எல்லா இடத்திலும் தேட ஆரம்பித்தாள் தேவி ..அதற்குள் பானுவின் கண்கள் குளமாகின... சும்மாவ பின்ன அலை அலையென அலைந்து பெற்ற ஆதார் கார்டு,ATM கார்டு,பணம் 2௦௦௦ எல்லாம் அதில் இருந்தால் கண்கள் குளம் ஆகத்தானே செய்யும் !!

என்ன என்ன வெச்ருந்த அதுல என அக்கா கேட்க அதை சொல்லக் கூட முடியாமல் எங்கு போனது என யோசிக்க ஆரம்பித்தால் பானு...கொஞ்ச தூரமா தேடிச் செல்ல பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரையில் எங்கு சென்று தேட என அழுதுகொண்டை தேட ஆரம்பித்தால் ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.