(Reading time: 7 - 14 minutes)

சோளக்கடை, பஜ்ஜி கடை என எல்லாவற்றிலும் கேட்க எல்லா இடத்திலும் வந்த பதிலோ தெரியாது என்பதே....தேடி தேடி ஓய்ந்து போனால் பானு..பாவம் அக்கா மஹா என வேறு வழியில்லாமல் மனமும் இல்லாமல் அக்காவிடம் வந்து சேர்ந்தால் .. அக்காவின் அறிவுரைப்படி atm கார்டு பிளாக் செய்து விட்டு இனி கிடைக்காது என ஏக்கத்தோடு கடற்கரையை பார்த்துக் கொண்டே காரில் ஏறினால் பானு...

போனால் போகட்டும் விடு என அக்கா சொல்ல அம்மா மற்றும் அப்பாவிற்கு சொல்ல அம்மா நன்றாக திட்டி விட்டு சரி விடு எனக்கூற அப்பாவோ போனால் போகட்டும் விடு டா என சொன்னார்..அம்மா கவலை படாதே பர்ஸ் கிடைத்தால் சாமிக்கு விளக்கு போடறேன் என சொல்ல ..போங்கமா அவ்வளவு பெரிய கடலேந்து எப்படி கிடைக்கும் ..அப்படியே கிடைச்சாலும் யாரது கொடுப்பங்களா என்ன?? அவ்ளோ நல்லவங்க இன்னும் இந்த உலகத்துல யாரும் இல்ல..இதெல்லாம் கனவுல இல்ல சினிமால தான் நடக்கும் என பொறிந்தாள் பானு.....

இருப்பினும் பானுக்கு தான் மனமே ஆகவில்லை. எல்லா சாமியிடமும் வேண்டிக்கொண்டே பையில் 50 வது முறையாக செக் செய்தால் .இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை ..எவ்வளவு ஆசையாக கிளம்பியது கடைசியில் இப்படி ஆகிவிட்டதே என கண்ணீர் விட்டுக்கொண்டே தூங்க ஆரம்பித்தால் பானு..

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

காலை வழக்கம் போல் அக்கா வீட்டிலிருந்து hostel கிளம்பினால் ...hostel செல்லும் வழியிலே போன் எப்போதும் அவள் செல்லும் கிளினிக்கில் இருந்து ...இவங்க எதுக்கு இப்ப கால் பண்றாங்க என யோசித்துக்கொண்டே கால் அட்டென்ட் செய்ய நீங்க நேற்று பீச் போனிங்களா?? எனக் கேட்க ..ஆமாம்  என சொல்ல உங்க purse மிஸ் பண்ணிட்டிங்களா? என கேட்க  ஆமாம் என சொல்ல இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க அவங்க கிட்ட உங்க purse இருக்காம் என்று சொல்லிவிட்டு வைத்தனர்.

பானுவால் நம்பவே முடியவில்லை ..தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டால்..அவங்க சொன்ன நம்பர்க்கு கால் செய்தால்...அவர்கள் எல்லா detailசும் கேட்டுவிட்டு அவங்க தங்கை நேற்று purse பார்த்ததாகவும் அதில் வேறு நம்பர் இல்லாததால் கிளினிக் நம்பர்க்கு நேற்றே கால் செய்ததாகவும் கூறினார்...அவர்கள் அட்ரஸ் சொல்லி அங்கு வந்து purse வாங்கிகொள்ளுமாறு கூறினார்..அது சென்னையின் மறுபகுதி ..அங்கு என் நண்பர் வந்து வாங்கி செல்வார் எனக் கூறிவிட்டு நம்ப முடியாமல் கண்ணில் கண்ணீர் வர போனே வைத்தால் பானு...

அம்மா மற்றும் அக்காவிற்கு போன் செய்து purse கிடைத்ததை சொல்லி இன்னும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என மனத்தில் நேற்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் பானு....

அவளின் நண்பன் சென்று purse வாங்க கொடுக்கும் முன் பானுவிற்கு கால் செய்து கேட்டுவிட்டு கொடுத்தார் அந்த நல்ல உள்ளம்......purse வைத்த பஸ் டிக்கெட் கூட மிஸ் ஆகாமல் எல்லாம் இருந்தது அதில்....கடவுளுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்தால் பானு............

இன்னும் சில நல்லவர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்....கடல் அன்னை தன்னை ஏமாற்ற வில்லை என மனதில் கூறிக்கொண்டால் பானு........ 

இது ஒரு உண்மை நிகழ்ச்சி .. நான் சுத்தமாக எதிர்பாக்கவில்லை எனது purse மீண்டும் கிடைக்கும் என்று .. எனது purse எடுத்து வைத்த அந்த முகம் தெரியாத சகோதரிக்கும் அவர் அண்ணன் சத்யாவிற்கும் என்னிடம் அதை சரியான நேரத்தில் தெரிவித்த பிரியம் கிளினிக்கிற்கும் என்னிடம் கொடுத்த எனது நண்பன் சோமுவிற்கும் கதையை சமர்பிக்கிறேன்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.