(Reading time: 21 - 42 minutes)

சிறுகதை - இல்லறம் அது நல்லறம்!! – விஜயலக்ஷ்மி சம்பத்

oldCouple

ந்த ஐப்பசி மாதத்தின் ஐந்தாம் நாள் சற்றே குளிரோடு விடிந்தது. கீச் கீச் என்ற குருவிகளின் குரல் அந்த விடியலை இன்னும் அழகாக காட்டியது. தஞ்சையின் நகரப்பகுதியி;ல் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்ததால் அமைதியாக இருந்தது அந்த பகுதி. பச்சை பசேலென வயல்வெளிகளும் தென்னந் தோப்;;பு பகுதிகளும். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன. காலை நேரத்தில் பறவைகளின் கீச்கீச் என்ற சந்தோசக் கூச்சல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தன.

ஸ்ரீதேவேந்திர விலாசம் என்ற வித்தியாசமான பெயர்ப்பலகையைத் தாங்கி நின்ற அந்த பங்களாவில் அமைதி தவழ்ந்தது. அந்த அமைதிக்கு அங்கு இன்னும் துயில் எழாதது காரணம் இல்லை. அந்தக் குடும்பத் தலைவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தது தான் காரணம்.

விசாலமான தோட்டம் முன்புறம் இருந்தது. தோட்டத்தைத் தாண்டி சென்றால் நான்கு கார்கள் நிறுத்தும் அளவில் பெரிய போர்டிகோ அதைத் தாண்டி உள்ளே சென்றால் பெரிய கூடம் அதன் வலப்புறம் அக்னி மூலையில் சமையலறை ஒட்டி டைனிங் ஹால் அடுத்து சாமிரூம். நடுவில் மேல்செல்லும் படிக்கட்டு. அதை ஒட்டி இருந்தது பெரிய படுக்கை அறை.

அந்த படுக்கை அறையில் இருந்த பெரிய படுக்கையில் படுத்து இருந்தார் ராமச்சந்திரமூர்த்தி பெயருக்கேற்றார் போல இவர் வாழ்ந்தாரா இல்லை பிற்காலத்தில் இவர் இப்படித் தான் வாழ்வார் எனத் n தரிந்து இவரின் பெற்றோர் பெயர் வைத்தனரா தெரியவில்லை. எப்படி ஆனாலும் பெயருக்கேற்ற ராமனாகவே வாழ்ந்தவர்ஃ

ஆஸ்துமா அதிகமாகி வி;ட்டதால் கடந்த பத்து நாட்களாகவே படுக்கையில் இருக்கிறார். அவரின் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த விசாலம். ராமச்சந்திரமூர்த்தியின் தர்மபத்தினி. சாட்சாத் ஸ்ரீராமன் சீதா போன்று வாழ்ந்தவர்கள் இருவரும். ஊரில் உள்ளவர்கள் அனைவரும் இப்படித் தான் கூறுவார்கள்.

கட்டிலில் தன் கணவர் சற்றே அசைந்ததைப் பார்த்த விசாலம் 'என்னங்க செய்யுது" என்று வினவினார்.

 அவர் கண்களைத் திறந்து பார்த்து 'என்ன நீ தூங்கவெ இல்லையா விசாலம?"; எனக் கேட்டார். குரலில் சற்றே கர் கர் என சத்தம்ஃ

'இல்ல இல்லங்க நான் நல்லாத் தான் தூங்கிட்டு இப்பத்தான் அரைமணி நேரத்துக்கு முன் எழுந்து குளிச்சுட்டு வந்தேன்" என அவசர அவசரமாகக் கூறினார்.

இவர் படுக்கையில் படுத்த இந்த பத்து நாளாக விசாலம் குளிக்கவும் பாத்ரூம் செல்லவும் மட்டும் தான் இவரை விட்டு எழுந்து செல்வதுஃ மற்ற நேரம் எல்லாம் கணவரின் அருகிலேயே இருந்து அவரைக் கவனித்துக் கொண்டார்.

தனி நர்ஸ் ஒருவர் இருந்தாலும் தானும் கூட இருப்பதையே தன் கணவரும் விரும்புவார் என்றும் அவருக்குத் தெரியும். திருமணம் முடிந்த நாள் முதலாக தன் கணவரின் கண் அசைவில் அவர் விருப்பம் கண்டனம் எதுவாக இருந்தாலும் கண்டு கொண்டு குடும்பம் நடத்துபவர் அல்லவா? இப்பொழுதும் கண்டு கொண்டார் தன் கணவரின் கண்டனத்தைஃ தான் தூங்காமல் இருப்பது தன் கணவருக்கு பிடிக்கவில்லை என்பதை.

அதற்குள் இவர்களின் பிள்ளைகள் இருவரும் அந்த வீட்டின் மாப்பிள்ளையும் டாக்டருமான பரந்தாமனுடன் அந்த அறைக்குள் நுழைவதைப் பார்த்தவர் 'வாங்க மாப்பிள்ளை" என்று எழுந்து கொண்டார்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

'அத்தை நீங்க இந்த சேர்ல உட்கார்ங்க. நான் மாமாவை செக்கப் பண்ணிர்றேன் ஹேமா இங்க வாங்க" என்று நர்ஸை அழைத்தவர் செக்கப்பை ஆரம்பித்தார்.

ராமச்சந்திரமூர்த்தி விசாலம் தம்பபதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். :மூத்த மகன் நாராயணமூர்த்தி மனைவியின் பெயர் ராதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த பேரன் பெயர் அர்ஜூனன் எம்பிஏ முடித்துவிட்டு தொழிலில் அப்பாவிற்கும் சித்தப்பாவி;ற்கும் உதவியா இருப்பவன். இளையவன் பெயர் ஆதித்யா பி.ஈ மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவன்.

இரண்டாவது மகன் பெயர் கேசவமூர்த்தி மனைவி பெயர் லட்சுமி இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். நரேந்திரன் 12;ம் வகுப்பும். நித்யாதேவி 8ம் வகுப்பும் படித்துக் கொண்டு இருப்பவர்கள்ஃ

மூன்றாவதாகப் பிறந்த பெண்ணின் பெயர் மஹாலட்சுமி இந்த வீட்டின் இளவரசி அவளும் மருத்துவர்தான். இவளின் கணவர் தான் பரந்தாமன் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 10மாதங்கள் தான் ஆகிறதுஃ ஆகவே மஹா இன்னும் பிராக்டிஸ் ஆரம்பிக்கவில்லை.

தன் தந்தையைக் கவனித்துக் கொள்ள கணவரோடு கடந்த பத்து நாட்களாக இங்கே வந்து தங்கி இருக்கிறாள். இவள் குழந்தை பிரியம்வதாவின் சத்தம் மட்டும்தான் அவ்வப்போது கேட்டுக் கொண்டு இருக்கிறது அந்த வீட்டில்.

டாக்டர் அதற்குள் செக்கப்பை முடித்துக் கொண்டார். தன் மாமியாரைப் பார்த்து 'வரேன் அத்த" என்றவாறே தன் மைத்துனர்களைப் பார்த்தவாறே வெளியே சென்றார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.