(Reading time: 21 - 42 minutes)

பெரியவர்களை மதிக்கும் பாங்கு. நடத்தை என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அவரின் மனம் விசாவை நினைக்க ஆரம்பித்துவிட்டதுஃ

இப்பொழுதெல்லாம் இவளின் தவிப்பும் அதிகமாகிவிட்டது.

இன்னும் 325 நாட்கள்தான் இருக்கு... இன்னும் 300 நாட்கள் தான் இருக்குது என்று நாட்களை எண்ண ஆரம்பித்தாள். அவரிடம் பேசணுமே என்று தவித்தாள். இப்படியே நாட்கள் நகர...

ஒருநாள் ராமச்சந்திரமூர்த்தியே இவளைத் தேடி வந்து சொல்லியே விட்டார். தன் காதலைஃ அன்று மாலை அதே பேருந்து நிறுத்தம். இவள் அருகில் வந்தவர் 'விசா உன்னைய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குஃ உனக்கும் என்னய பிடிச்சிருந்தா சொல்லுஃ எங்க வீட்டில சொல்லி நான் உன்னக் கல்யாணம் பண்ணிக்கிறேன்"ஃ அவ்வளவுதான் அவர் சொன்னதுஃ

ஆண்டவன் அருளோ அல்லது இவர்களின் அதிர்ஷ்டமோ .. இவர்களைப் பொறுத்தவரை அந்த கால கட்டத்திலும் கூட காதல் கல்யாணம் கூடிவந்ததே அதை என்னவென்று சொல்ல...ஜாதி மதம் ஜாதகம் என்று அனைத்தும் பொருந்தி வந்ததால். கல்யாணம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு ராமச்சந்திரன் தன் தந்தை நடத்தி வந்த ஜவுளிக் கடையைத் தன் பொறுப்பில் கொண்டு வந்தார். தொழில் வேகமாக நடக்க குடும்பப் பொறுப்புகளும் கூடி வந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடையில் திடிரென்று பல லட்சங்கள் நட்டம் என்று ஆனது.

எப்படி என்று யோசித்தாரே தவிர வீட்டில் உள்ளவர்களிடம் புலம்பவில்லை எரிந்து விழவில்லை. சூழ்நிலையை பொறுமையாகக் கையாண்டார். கடையில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பேர் சேர்ந்து கொண்டு ராமச்சந்திரன் சரக்கு வாங்க வெளிமாநிலம் ஒரு வாரம் பத்து நாட்கள் என்று செல்லும்பொழுது விற்பனை செய்து வரும் பணத்தை சிறுக சிறுக கையாடல் செய்து வந்தது இப்போதுதான் தெரிய வந்தது. இது இப்போது பல லட்சங்களாக வளர்ந்து நிற்கின்றது.

தவறு செய்த அவர்களை வேலையை விட்டு நீக்கினார். வேறு நம்பிக்கையான ஆட்களை அமர்த்தினார். விசாலாட்சி தன் நகைகளைக் கழட்டிக் கொடுத்தாள். அதை விற்று கடையில் போட்டு இன்னும் கவனமாக தொழிலை நடத்தினார்;.

ழைய நினைவிலிருந்து வெளியே வந்த விசாலாட்சி தன் குடும்பத்தாரை நிமிர்ந்து பார்த்தார்.

இதோ இப்போது இரண்டு கடைகளிலும் நான்கு மாடிகளைக் கொண்டதாக வளர்ந்து கம்பீரமாக நிற்கிறது. பதினைஞ்சு பேர் வேலைக்கு இருந்தது போயி இப்போ ரெண்டு கடையிலயும் சேர்த்து 120 பேருக்கு மேல வேலைக்கு இருக்கும் அளவிற்கு வளர்ச்சி. ஆனா இதில எந்த சூழ்நிலையிலயும் உங்கப்பா ஒருநாள் கூட நான் இத்தனை சம்பாத்தியம் பண்றேன் அப்படின்னோ இல்ல இவ்வளவு கஷ்டப்படறோனே என்றோ சொன்னதில்லை. கொஞ்சம் கூட கர்வப்பட்டதில்லை. எல்லாத்தையும் கடவுள் சித்தம் அப்படினு தான் சொல்லுவார்.

'சரிங்கம்மா அதுக்கும் இப்போ அப்பா நினைக்கறதுக்கும்......" என்று நடுவில் பேசிய நாராயணமூர்த்தியைத் தடுத்தார் விசாலம் அம்மாஃ

'இருப்பா அம்மா இன்னும் பேசி முடிக்கல. இந்த ஐம்பது வருட வாழ்க்கையில ஒருநாள் கூட அவர் என்னய கடுமையா பேசினதோ அலட்சியமா நடத்துனதோ இல்ல. ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சிகிட்ட யாருக்குமே அமையாத மாதிரி அமோகமான வாழ்க்கைய நாங்க வாழ்ந்திருக்கோம். இது உங்களுக்குத் தெரியுமில்லையா?"

'உங்கப்பா நீங்க எல்லோரும் சேர்ந்து உழைச்சு இப்போ இந்தளவுக்கு நாம்ப வளர்ந்திருக்கோம்ஃ இது ஒரு மாற்றம் தானே? இதை நாம்ப சந்தோசமா ஏத்துக்கிட்டோம் இல்லையா?"

'ஆமோதிப்பது போல் அனைவரும் அமைதியாக விசாலாட்சியைப் பார்த்திருந்தனர்.

 "இப்போ அப்பா நாம வாழ்ந்தது போதும் ஆண்டவா என்னைய கூப்பிட்டுக்கோனு வேண்டிக்கிறார்ஃ அவ்வளவுதான்ஃ முதல்ல சொன்ன மாற்றத்தை ஏத்துக்கிட்ட நாம இப்ப இதையும் நடக்கும்போது மனமார ஏத்துக்கணும். அதுதான் இயற்கைஃ என்ன அந்த மாற்றம் சந்தோசத்தை தந்ததுஃ அனுபவிச்சோம்ஃ இப்ப அப்பா நெனைக்கறது துன்பத்தைத் தரும். அனுபவிக்கணும்ஃ லாபம் நட்டம் இரவு பகல் னு இருக்கற மாதிரி இன்பம் துன்பம் இர்ணடும் உண்டேஃ இன்பத்தை மட்டும் கொடுனு பகவான்கிட்ட நாம கேட்க முடியுமா? சொல்லுங்கோ?"

'நாங்க ரெண்டு பேரும் நல்ல முறையில இல்லற தர்மத்தை நடத்தி முடிச்சுட்டோம் னு தோணுதுடா கேசவா. சந்தோசமா இருக்குது. நா பகவான் கிட்ட என்ன வேண்டுவேன் தெரியுமா?" கேள்வியாய் நிறுத்தினார்ஃ

என்ன என்பது போல இருவரும் பார்த்தனர்ஃ 'எல்லோரும் நல்லா இருக்கணும் எல்லாரையும் நல்லா வச்சிக்கோனு வழக்கமான வேண்டுதல்..இது உங்க எல்லாருக்காகவும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.