Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகா

dadUp

காஷ் நெக்ஸ்ட் என்ன பண்ணப்போற” என சிரித்துக் கொண்டே கேட்டாள் மோனா

”நீயுமா இப்படி கேட்ப? பார்க்கற எல்லாரும்தான் கேட்கறாங்க இதுல நீயும் நெக்ஸ்ட் என்னன்னு கேட்டா எப்படி சொல்லு? தனியா நான் இங்கிருந்து நெக்ஸ்ட் என்னத்த செய்யப்போறேனாம்” என சோகமாகச் சொல்ல அவளுக்கு இன்னும் சிரிப்பே வந்தது

”ஆமாம்ல கேட்காம எப்படி இருப்பாங்க சொல்லு”

”ப்ளீஸ் மோனா கலாய்க்காதடி” என அவன் அலுப்புடன் சொல்லவும் அவன் பக்கத்தில் அமர்ந்தாள் மோனா

”இப்ப என்னாச்சி சொல்லு”

“ம் ஒண்ணுமில்லை” என வருத்தமாகச் சொல்லவும்

“அய்யோ குட்டி பையனுக்கு எவ்ளோ வருத்தம் பாரேன், இந்த வீட்ல யார் குழந்தைன்னே எனக்குத் தெரியலைப்பா” என சொல்லிக் கொண்டே தன் 4 மாத உப்பிய வயிறை தொட்டு தடவிப்பார்த்தாள்.

அதைப் பார்த்தவன்

”நான் ஒண்ணும் குட்டி பையன் இல்லை ஆனா, நீ எதுக்கு உன் அப்பாகிட்ட போகனும் சொல்லு, இங்க என்ன குறைச்சல் நல்லாதானே பார்த்துக்கறேன் இங்கயே இரு”

“விளையாடாத ஆகாஷ், நீயே வேலை, பிசினஸ், டீலிங், மீட்டிங்குன்னு அலையற, உன்னால என்னையும் பார்த்துக்க முடியாம, வேலையும் சரியா செய்ய முடியாம தவிக்கற, அதான் அப்பாட்ட சொன்னேன் அவர் என்னை கூட்டிட்டு போகவும் வந்துட்டாரு. சந்தோஷமா என்னை அனுப்பி வைக்காம, இப்படி உம்முன்னு இருந்தா நல்லாவாயிருக்கு”

“இது அநியாயம் மோனா, நான் வேணா வேலையை விட்டுடறேனே”

“அடிவாங்காத ஆகாஷ் யாரும் இல்லைன்னா சரி அதான் அப்பா இருக்கார்ல எனக்கு, நான் அவர்ட்ட பத்திரமா இருப்பேன். ப்ளீஸ் சிரிச்சிக்கிட்டே வழியனுப்பு” என சொல்ல அவனோ

”எனக்கு சிரிப்பு வரலைடி போடி” என கண்கள் கலங்கவும் மோனாவிற்கு கவலையாக இருந்தது

”ப்ளீஸ் ஆகாஷ் வெறும் 6 மாசம்தானே ஒடிப்போயிடும், ப்ளீஸ் நான் என் வீட்லதானே இருக்கப்போறேன், நீ உன் வேலையை முடிச்சிட்டு வந்து பாரு என்னாலயும் இந்த வீட்ல தனியா இருக்க முடியாதுல்ல அதான்”

“உங்கப்பாவை இங்கயே தங்கச் சொல்லு இல்லையா நான் உன் வீட்ல வந்து தங்கறேன்”

“எப்படி வீட்டோட மாப்பிள்ளையாவா?”

“ஆமாம்”

“சரி வா நீயே கேளு அப்பாட்ட ஹால்லதான் இருக்காரு வா வா” என சொல்ல அவனும் வீரமாக எழுந்து மோனாவை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

”மாமா” என அழைக்க அவரோ

”வந்தாச்சா எவ்ளோ நேரம்தான் பேசுவீங்க, நான் வந்தே 1 மணி நேரம் ஆகுது, சரி நாங்க கிளம்பறோம், அப்புறம் கேட்க மறந்துட்டேன் மோனா இப்ப என் கூட இருக்கப்போறா நெக்ஸ்ட் என்ன செய்யப்போற ஆகாஷ்” என கேட்க அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது

”மாமா நீங்களுமா” என கத்த அவரும் சிரித்தபடியே

”இல்லை 2 வருஷம் நீங்க சண்டை போட்டு வாழாம இருந்ததுக்கு ட்வின்ஸ் பிறக்கப்போகுதுன்னு ஆஸ்பிட்டல் ரிப்போர்ட் சொல்லிடுச்சி. இன்னும் 6 மாசம்தான் இருக்கு, 2 குழந்தைகள் பிறந்ததுடும் மோனாவும் பிசியாயிடுவா, நானும் பிசியாயிடுவேன் அதான் கேட்டேன் அடுத்து என்ன செய்றதா இருக்கீங்க மாப்பிள்ளை”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது என்ன 6 மாசம் நான் இப்பவே உங்க கூட உங்க வீட்டுக்கு வந்துடறேன், உங்க பொண்ணை நீங்க பார்த்துக்கற மாதிரி என்னையும் நீங்களும் பார்த்துக்குங்க” என சொல்ல அவருக்கு சிரிப்பே வந்தது

”எனக்கு பையன் வேணும்னு ஆசைப்பட்டேன் ஆனா, உன்னைப் போல கோபக்கார பையன் எனக்கு வேணாம்பா, நீ அங்க வந்தாலும் மோனாவை தொல்லை பண்ணுவ, அவள் அங்க நிம்மதியா இருக்கட்டும், நீ இங்கயே இருந்து சீக்கிரமா உன் வேலைகளை முடிக்கற வழியை பாரு”

“மாமா நானும் வரேன்” என அவன் கோபமாக கேட்க அவரோ

“வேணாம் ஆகாஷ் வர வர உனக்கு நிறைய கோபம் வருது குறைச்சிக்க”

“எப்படி மாமா குறைக்கறது மோனாவை நான் நல்லா பார்த்துக்கறேனே, வெளி உலகத்தை பாருங்க மாமா, அவங்கவங்க வீட்டோட மாப்பிள்ளையா வருவாங்களான்னு கேட்கறாங்க நானே வரேன்னு சொன்னா கூட நீங்க வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம் மாமா”

“சமர்த்து மாப்பிள்ளைகளை வேணா வீட்டோட வைச்சிக்கலாம், உன்னை போல காத்துல பறக்கறவனை நான் வைச்சி என்ன செய்றது எனக்கு வயசாயிடுச்சி. உன்னை போல என்னால காத்துல பறக்க முடியுமா, அதனால நாங்க இப்ப கிளம்பறோம்” என சொல்லி மோனாவை பார்க்க அவளோ சிரித்துக் கொண்டிருந்தாள்

”வாம்மா போலாம்” என அழைக்க அவளும் தன் தந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறிக்கொண்டதும் ஆகாஷை பார்த்தாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகாராஜேந்திரன் 2018-08-02 00:16
nice story :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகாsasi 2018-08-02 11:22
Quoting ராஜேந்திரன்:
nice story :clap:

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகாmadhumathi9 2018-08-01 13:17
:clap: mam jan to dec thodar story mudinthu vittathu.aduthu pudhusa enna seiyalaam endru yosithu vitteergala.intha idea (jan to dec) eppadi vanthathu. :clap: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகாsasi 2018-08-01 20:45
Quoting madhumathi9:
:clap: mam jan to dec thodar story mudinthu vittathu.aduthu pudhusa enna seiyalaam endru yosithu vitteergala.intha idea (jan to dec) eppadi vanthathu. :clap: :thnkx: :GL:

நன்றி தொடர்ந்து படித்து ஆதரவுடன் கமெண்ட்டையும் தந்துள்ளீர்கள் நன்றி. ஜனவரி டூ டிசம்பர்ன்னு நான் நினைச்சி எழுதலை. சிறுகதை எழுதினேன் அதுக்கு பொறுத்தமா டைட்டில் தேடினப்ப இப்படி ஒரு ஐடியா தோணிச்சி. முதல்ல சிறுகதைக்கு டைட்டிலா ஜனவரி பிப்ரவரின்னு போட்டேன். அப்புறம் டைட்டிலுக்காக கதை எழுதினேன். அப்புறம் ஜனவரி பிப்வரின்னு 12 மாசத்தை வைச்சி எழுதினதுக்கு என்னை நீங்க கலாய்கலையே புதுசா எதுவும் யோசிக்கலை. இந்த சிறுகதைகள் உங்களுக்கு பிடிச்சிருந்தா வேற எழுதுவேன். இல்லைன்னா இல்லை நன்றி நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகாmadhumathi9 2018-08-03 10:19
No mam.kalaaikkala differenta yosithu ezhuthareenga endru solgiren.naan kathai padikka vendum endraal pasi,thookkam irandaiyum thalli podum aal.naan poi appadi solvena :no: aduthu idhu pol veru puthumaiya enna ezhutha poreenga endru thaan kettan. Neenga eppadi kathai koduthaalum padippen. Ippo adhiga kathai koduppathu neenga thaan :clap: :GL: :thnkx: :thnkx: (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகாsasi 2018-08-03 11:09
Quoting madhumathi9:
No mam.kalaaikkala differenta yosithu ezhuthareenga endru solgiren.naan kathai padikka vendum endraal pasi,thookkam irandaiyum thalli podum aal.naan poi appadi solvena :no: aduthu idhu pol veru puthumaiya enna ezhutha poreenga endru thaan kettan. Neenga eppadi kathai koduthaalum padippen. Ippo adhiga kathai koduppathu neenga thaan :clap: :GL: :thnkx: :thnkx: (y)

மிகவும் நன்றி உங்களின் இந்த ஊக்குவிப்பே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் ஒரு சிறகதை தொடரோடு தங்களை சந்திக்கிறேன் கட்டாயம் படியுங்கள் படித்து கமெண்ட் தாருங்க நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகாPR 2018-08-01 12:24
nice story :cool:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - டிசம்பர்ன்னா நெக்ஸ்ட் - சசிரேகாsasi 2018-08-01 20:41
Quoting PR:
nice story :cool:

:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top