(Reading time: 21 - 42 minutes)

எனக்காகனு நா வேண்டறது நா இல்லாம என் வீட்டுக்காரர் ஒரு நாள் இல்ல ஒரு மணி நேரங்கூட இருக்கமாட்டார்ஃ அவரால இருக்கமுடியாதுஃ துடிதுடிச்சுப் போயிடுவார். அதனால எப்பனாலும் சரி எனக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயோ அல்லது ஒரு நாளோ எதானும் சரி எனக்கு முன்னாடி அவர உன்னன்ட கூப்பிட்டுக்கோ. பின்னாடி நா வந்துடறேன்னு வேண்டிக்குவேன்" மேலே பேசமுடியாமல் கைகளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டார்.

விசாலாட்சி அம்மாள் பேசியதைக் கேட்ட மகன்கள் இருவரும் துக்கம் தொண்டையை அடைக்க பேச முடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டனர்.

'ஆமாப்பா நாராயணா நல்ல குடும்பம்னா ஒரு ஆம்படையான் தன்னோட பொண்டாட்டியை அந்தளவுக்கு தங்கமா பாத்துக்கணும்ஃ அப்படி இருந்தா மட்டுந்தான் ஒரு பொண்டாட்டி இப்படி வேண்டிக்குவாஃ இல்லன்னா நா அவர்க்கு முன்னாழ போயிடணும் அப்படினு..தா வேண்டிக்குவா... ஆனா அப்படி நடந்தா என்ன ஆகும் தெரியுமா?"

"எப்பவும் ஒரு ஆம்பள போயிட்டானா அவனோட பொண்டாட்ழ எப்படியாவது கஷ்டப்பட்:டு தன் குழந்தைகளை காப்பாத்திடுவா ஒருத்தியாவே.. ஆனா ஒரு பொண்டாட்டி செத்துப்போயிட்டா அவளோட புருஷனால சமாளிக்க முடியாதுஃ இது சின்ன வயசுக்காரங்களு;ககு மட்டுமல்லஃ வயசான ஆம்பளகளுக்கும் பொருந்தும்பா".

'ஒருவேளை உங்க அப்பாவுக்கு முன்னாடி நா போயிட்டா அதனால உங்கப்பா கஷ்டப்படறதை என்னால மேல இருந்து கூட பாத்து சகிச்சுக்க முடியாதுடா. அதனாலதான் அவர வழியனுப்பிட்டு நான் போகணும்னு இருக்கேன்".

'இப்ப என்ன உங்கப்பாவும் நானும் ஒண்ணும் சின்ன வயசிலேயே பகவான்கிட்ட போகணும்னு நினைக்கலியேஃ பேரக்குழந்தைகள் வளர்ந்து கல்யாணத்துக்கு நிக்கற வரைக்கும் பாத்துட்டார்ஃ எல்லாத்தையும் அனுபவிச்சிட்டார்ஃ வயோதிகம் ஆயிடுத்துஃ மொள்ள இந்த உலக பந்தத்துல இருந்து விடுபடறதை வரவேற்கணும். அதுதான் பக்குவப்பட்ட மனசுக்கு அடையாளம்ஃ உங்கப்பா பக்குவப்பட்டவர் நாராயணாஃ அது எனக்கும் தெரியும்ஃ நீங்களும் தெரி;ஞ்சுக்கோங்க".

கேசவா நீ போய் அப்பாவை ஒரு பார்வை பாத்துட்டு வா என்று கேசவனை அனுப்பினார் விசாஃ

ஒரு மனுசன் எப்ப உண்மையா வாழ்க்கைல ஜெயிச்சு இருக்கானு நீ;ங்க தெரிஞ்சுக்கணும்ஃ தன் குடும்பத்துக்கு மட்டுமில்ல, தன்னோட சொந்த பந்தங்களுக்கு நண்பர்களுக்குனு தன்னைச் சுத்தி இருக்கற எல்லோருக்கும் தேவைப்படற உதவிய செய்துட்டு நல்லவனு பேர் எடுத்துட்டு. தன்னோட பொண்டாட்டி கிட்ட ஆத்மார்த்தமான அன்பை செலுத்தி நல்ல புருஷன்னு பேர் வாங்கணும்ஃ ஒரு ஆம்பள நல்லவனா இருந்தாலே போதும்ஃ அந்த குடும்பமே நல்லா இருக்கும்ஃ ஒவ்வொரு ஆம்பளையும் நல்லவனா இருந்துட்டா அந்த சமுதாயமே நல்லா இருக்கும்ஃ இதுக்கு அவன் சித்தராவோ புத்தரவோ இருக்கணும்னு அவசியமில்லை. சாதாரண மனுசனா அன்பானவனா இருந்தாலே போதும்ஃ இந்த மாதிரி வாழ்ந்தவங்க வாழ்க்கையில ஜெயிச்சுட்டாங்கனு இல்ல.... வாழ்க்கையவே ஜெயிச்சுட்டாங்கனு அர்த்தம்ஃ உங்கப்பா வாழ்க்கையே ஜெயிச்சவர்ப்பா"..

 'இப்ப மட்டும் இல்லப்பா. நான் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இவரே எனக்கு புருஷனா வரணும்னு வேண்டிப்பேன்ஃ இவரோட வாழ்றதுக்காக எத்தனை ஜென்மம் கடவுள் எனக்குக் கொடுத்தாலும் அதை சந்தோசமா பிறந்து அனுபவிப்பேன் நாராயணா"

தன் மூத்த மருமகள் ராதாவைப் பார்த்தவர் 'ராதாம்மா எனக்குப் பிறகு நீ தாம்மா இந்தக் குடும்பத்துக்கு அம்மா ஸ்தானத்துல இருந்து எல்லாரையும் அரவணைச்சுப் போகணும்ஃ அம்மாடி மோகனா நீ உன் அக்காவோட எப்பவும் அனுசரணையா இருக்கணும்ஃ மஹா உனக்குந்தான் சொல்றேன்ஃ உன்னோட ரெண்டு அண்ணாக்களையும் அண்ணிகளையும் பசங்களையும் மட்டுமல்ல உன் புகுந்த வீட்டிலயும் எல்லாரையும் அப்பா பாத்துகிட்டு நல்ல பேர் எடுக்கணும்மா" என்றார்.

ராதா தன் மாமியாரின் காலடியில் நகர்ந்து கொண்டு 'ஏன் அம்மா இப்பழ எல்லாம் பேசறீங்க நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருந்து எங்க எல்லாரையும் பாத்தக்கத்தானே போறீங்க" என அழுதார்.

பதில் சொல்லாமல் அவள் தலையைப் பாசத்துடன் தடவியவர் 'சரி... ரொம்ப நேரமாயிடுச்சு பார் மணி ரெண்டாயிடுச்சு.. போங்க சாப்பிடுங்க" என்று அனைவரையும் அனுப்பிவிட்டு தன் கணவர் இருந்த அறைக்கு வந்தவர் நர்சைப் பார்த்த 'ஹேமா நீயும் போய் சாப்பிட்டு வந்துடு நேரமாயிடுச்சு பார்" என அனுப்பி வைத்தார்.

தனிமையில் இருந்தவர் தன் கணவரின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவர் மெல்லிய குரலில் பேசினர்hஃ 'என்னங்க பாத்தீங்களா நம்ப பசங்களைஃ எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க சந்தோசமா இருக்குதுங்கஃ

உங்கள கல்யாணம் செய்த அன்னிக்கு இருந்த சந்தோசத்தை விட அதிகமான சந்தோசமா இருக்குதுங்க. இருந்தாலும் நம்ப பசங்களுக்கு நமக்கு இருந்த பக்குவத்த விட கொஞ்சம் கொறச்சுத்தான் இருக்குதுஃ பிறந்தவங்க எல்லாரும் இங்கயே இருந்தா இந்த பூமி எப்படிங்க தாங்கும் ? உங்ககூட நா வாழ்ந்த வாழ்க்கை மாதிரி வேற யாரும் வாழ்ந்தாங்களா அப்படினு எனக்குத் தெரியல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.