(Reading time: 21 - 42 minutes)

என்னய காதலிச்சது. ஒரு நோய் நொடினா எனக்கு உதவி செஞ்சது மத்த எல்லாருக்கும் என்ன வேணும்னு பாத்து பாத்து செஞ்சது நம்ப குடும்பத்தை இவ்வளவு நல்லா பாத்துகிட்டு. கடையையும் நல்லபடியா நடத்திகிட்டு தொழில்ல இருந்த போட்ழயையும் சமாளிச்சுட்டு இப்படி எதையும் குறை சொல்ல முடியாதபழ எப்படி ஒருத்தர் இந்தளவுக்கு முழுமையான மனுசனாக இருக்கு முடியுமா? ...நிறைவா செய்ய முடியுமா எனக்குத் தெரியலங்க ஆனா நம்பளோட வாழ்க்கை ரொம்ப நிறைவா இருந்ததுங்க நான் சொல்றது உங்களுக்கு புரியுதா? ஆமாங்க என் மனசெல்லாம் பூரிப்பா சந்தோசமா நிறைவா இருக்குதுங்கஃ போதும் இப்பவே இந்த வாழ்க்கை முடிஞ்சதுனாலும் எனக்கு சந்தோசம்தான்" பேசியபடியே அப்படியே குனிந்து தன் கணவரின் கன்னத்தில் தன் முழு அன்பையும் திரட்டி ஒரு முத்தம் வைத்தார்ஃ

ராமச்சந்திரமூர்த்தி மெல்லத் தன் கண்களைத் திறந்து தன் மனைவியை மனம் கொள்ளாத காதலுடன் பார்த்தார்.

தான் விசாவிடம் காதலை சொன்னவுடன் விசா பார்த்த பார்வை. திருமணநாளில் காலையில் பார்த்த நாணப்பார்வை. சாந்திமுகூர்த்தத்தின் போது பார்த்த காதல் பார்வை. பிரசவித்தின்போது பார்த்த அன்புப்பார்வை என்று அத்தனை பார்வைகளையும் தன் கண்களுக்குள் கொண்டு வந்த ராமச்சந்திரமூர்த்தி தன் மனைவியின் கண்களுக்குள் பார்த்தார். விசாலாட்சி சொன்னது அத்தனையும் அவரின் மனதிற்குள் ஓடிக் கொண்டு இருந்த அதே எண்ணங்கள்தான்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இளமைக் காலங்களில் தான.; தன் கண்ணைப் பார்த்து. கண்ணசைவைப் பார்த்து தன் மனதைப் புரிந்து கொள்வாள் தன் மனைவி என்பது அவருக்குத் தெரியும்ஃ ஆனால் இப்போது நோயில் படுத்து இருக்கும்போதும் கூட இந்தத் தருவாயிலும் தன்னால் அதிகமாக பேசமுடியாமல் இருக்கும்போதும். கண்களை பளிச்செனத் திறக்கமுடியாமலும் கூட இருக்கும் போதும்.. தன்; மனதில் தோன்றியதை எப்படி புரிந்து கொண்டாள் தன் மனைவி? இல்லை தனக்கு தோன்றிய அதே எண்ணம் தான் அவளுக்கும் எப்படி தோன்றியது? அவருக்குப் பெருமையாக இருந்தது.

'விசா" மெல்ல அழைத்தவர் குனி என்பது போல ஜாடை செய்தார்ஃ விசாலாட்சி தன் கணவர் முகத்தருகே குனிந்தார்ஃ 'எப்படி விசா என் மனசுல நா பேச நினைச்சத நீ இப்பக்கூட எப்படி புரிஞ்சிகிட்ட.. சந்தோசமா இருக்குதுமா!" என மேலே பேச முடியாமல் இருமல் வந்தாலும் தட்டுத்தடுமாறி சொல்லிவிட்டு விசாலாட்சியின் நெற்றியில் அன்போடு முத்தம் கொடுத்தார்ஃ...!

"யார் சொன்னது காதலியின் முதல் முத்தம்தான் இனிக்கும்"; என்று...

 இதோ இந்த முதுமையிலும் கூட தான் கொண்ட காதல் மாறாமல் இருக்கும் இந்த தம்பதியருக்கு முதுமையின் இந்த முத்தமும் உயிர் வரை சிலிர்ப்பையும் காதலையும் தருகிறதே....

அதே சிலிர்ப்புடன் விசாலாட்சி தன் கணவரின் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

கேட்டுக் கொண்டிருந்த காலதேவனும் ஒரு நொடி கண் கலங்கி நின்றே..... பின் தன் கடமை செய்;ய விரைந்தான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.