(Reading time: 21 - 42 minutes)

அவரின் பின்னேயே சென்ற மகன்கள் இருவரும் 'என்னாச்சு மாப்பிள்ளை அப்பாவி;ற்கு இப்ப எப்படி இருக்குது" என்று கவலையுடன் கேட்டனர்.

தன் மச்சினர்களைப் பார்த்த பரந்தாமன் 'வயோதிகம் அதோடு ஆஸ்துமா ரொம்ப இருக்குது நெபுளைசர் ல ஆவி பிடிக்க சொல்லி இருக்கேன் ஹேமாகிட்ட பார்க்கலாம் ஆனா...." என பரந்தாமன் இழுத்தார்.

'என்ன மாப்பிள்ளை சொல்லுங்க" என இருவருமே பதறிப்போனார்கள்.

'இல்ல நோய் ஒரு பக்கம் இருந்தாலும் நாம செய்ற வைத்தியத்தோட நோயாளிகளும் நாம இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கணும்னு நினைக்கனும் அப்பத்தான் நாம செய்ற வைத்தியமும் பலிக்கும். எனக்கென்னோமோ நம்ப மாமா வாழ்ந்தவரைக்கும் போதும் வாழ்க்கைய முடிச்சுக்கலாம்னு நெனக்கிறாரோ அப்படினு மனசுக்குள் படுது" என்றார்.

'என்ன மாப்பிள்ள சொல்றீங்க?" இருவரும் கண்ணீர் வழிய குழந்தைக்ள மாதிரி கேட்பதை பார்க்க பரந்தாமனுக்கும் கலக்கமாகத்தான் இருந்தது ஆனர்ல அதுக்காக உண்மையை மறைக்கக் கூடாது அல்லவா

ஆம் என்பதுபோல தலையை அசைத்தார் நாங்க ஒரு குறையும் எங்க அம்மாவிற்கோ அப்பாவிற்கோ வெச்சதில்லயே. பாசமாத்தானே இருக்கிறோம் பின்ன அப்பா ஏன் அப்படி நினைக்கிறார் எனக் கவலையும் குழப்பமும் அடைந்தனர்.

"பார்க்கலாம் சரி நான் கிளம்பறேன"

அர்ஜுன் தன் தந்தை மற்றும் சித்தப்பா இருவரின் அருகிலும் வந்து "அப்பா. சித்தப்பா இன்னைக்கு நானும் ஆதியும் கடைகளைப் பார்த்துக்கிறோம். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருந்து தாத்தாவைப் பாத்துக்கங்க" என்றான் பொறுப்பாய்.

தஞ்சாவூரில் மெயின் கடைவீதியில் உள்ள பிரம்மாண்டமான இரண்டு ஜவுளிக்கடைகள் இவர்களுக்கு சொந்தம். ஒவ்வொரு கடையும் நான்கு மாடிகள் கொண்டவை. கிட்டத்தட்ட 120பேர்கள் வேலை செய்யும் இடம்.

"சரிப்பா ஆதிய காலேஜ்க்கு லீவ் போட சொல்லிடு ரெண்டு பேரும் பாத்துக்கங்க" என்றனர் நாராயணணும். கேசவனும்.

னைவரும் சென்றபிறகு நாராயணணும் கேசவனும் தங்கள் அம்மாவை மெல்ல அழைத்துக் கொண்டு வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்தனர்.

காலையில் பரந்தாமன் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு மருகிக் கொண்டு இருந்த தங்கள் மகன்களை பார்த்துக் கொண்டு தான் இருந்தார் விசாலம். ஆகவே தான் அவர்கள் கூப்பிட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் வெளியே வந்தார்.

'என்னப்பா ரெண்டு பேரும் ரொம்ப கவலையா இருக்கீங்க, ஏதோ பேசணும்னு நினைக்கிறீங்க, என்ன கேக்கணுமோ கேளுங்க" என்றார்.

இருவரும் சடாரென்று தாயாரின் காலருகில் அமர்ந்து அவர் மடியில் தலை சாய்த்து கண்ணீர் விட்டனர்ஃ 'அம்மா நாங்க உங்களுக்கும் அப்பாவிற்கும் ஏதும் பெரிசா குறை வச்சிட்டம" என்று கேட்டார் கேசவன்.

'ஏம்ப்பா இப்படிக் கேட்கிறீங்க?"

'இல்லம்மா காலையில மாப்பிள்ள சொன்னார். நம்ப அப்பா தான் ரொம்ப நாளைக்கு வாழனும் அப்படினு நெனச்சி வியாதியோட போராடினா ரொம்ப நாளைக்கு வாழ முடியும@; ஆனா அப்பா அப்படி நினைக்கற மாதிரி தெரியலனு பரந்தாமன் சொன்னார்மா. அப்பா ஏம்மா இப்படி ...." கேட்க வந்ததை முழுதாக கேட்க முடியாமல் தாயின் மடியில் தலை கவிழ்ந்து அழுதார்கள்.

இவர்களைப் பார்த்த மற்றவர்களும் ஹாலுக்குள் வந்து சுற்றிலும் உட்கார்ந்து கொண்டார்கள்.

பேரன் பேத்திகள் எடுக்கப் போகும் இந்த வயதிலும் குழந்தைகள் போல தன் மடியில் தலைசாய்த்து அழும் தன் மகன்கள் இருவரையும் பெருமை பொங்க பார்த்த விசாலம் 'நாராயணா. கேசவா இங்க பாருங்க முதல்ல கண்ணைத் தொடைங்க என்னது சின்னக் குழந்தைங்க மாதிரி நீங்களே தாத்தா ஆகப் போற வயசுல ஏம்ப்பா இப்பழ சின்னப் பசங்க மாதிரி அழறீங்க?"

'எங்களுக்கு வயசாச்சின்னா அழக்கூடாதாம்மா? எங்களுக்கு எப்பவும் நீங்களும் அப்பாவும் வேணும்மா" என்றனர் இருவரும்.

'நீங்க ரொம்பப் பக்குவப்பட்டடவங்கனு நினைச்சேம்பாஃ ஆனா நீங்க... என்ன இப்படி..?"

';ம்... இங்க பாருங்க இந்தப் பூமிக்கு வந்தவங்க எல்லோரும் இங்கேயே நிரந்தரமா இருந்திர முடியாதுஃ எல்லோரும் ஒரு நாள் கண்டிப்பா போய்த்தான் தீரவேண்டும். அத முதல்ல புரிஞ்சுக்கோங்க. என்னடா அம்மா இப்படி சொல்றாளே அப்பா இறந்துட்டா அம்மாவுக்கு துக்கம் இல்லயா..னு நினைக்கிறீங்க அப்படித்தானே".

'உங்க அப்பாவுக்கு ஏதும் ஆனா உங்க எல்லாரையும் விட அதிகமாக துக்கப்பட போறது நான்தான். ஆனா அதுக்காக அந்த மாதிரி நடக்கவே கூடாதுனு நினைச்சா அதவிட முட்டாள் தனம் வேற கிடையாது" என்றார் விசாலம்ஃ

புரியாமல் பார்த்த தன் குடும்பத்தாரைக் கனிவுடன் பார்த்தவர் 'கண்ணுகளா நானும் உங்கப்பாவும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க என்றவரை நாராயணன் கேசவன் இருவரைத் தவிர பிரமிப்புடன் பார்த்தார்கள் மற்றவர்கள்ஃ இது அவர்களுக்கு புதிய செய்தி. விசாலத்தின் நினைவுகள் பின்னோக்கி போனது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.